என்ன வெறும் பொம்பளயா பார்த்தீங்கனா…! தலைவி படத்தில் ஜெயலலிதாவாக மிரட்டும் கங்கனா ரணாவத்!

0
59

கங்கனா ரணாவத்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் நடித்திருக்கும் தலைவி படத்தின் ட்ரெய்லரை வெளியிடப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை வைத்து தலைவி என்கிற பெயரில் ஏ.எல். விஜய் படமாக்கியிருக்கிறார். .எல்.விஜய் இயக்கும் இந்தப் படத்தில் கங்கனா ரணாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் கேரக்டரிலும் நடித்துள்ளனர். இவர்களுடன் சமுத்திரகனி, பாக்யஸ்ரீ, மதுபாலா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பாகுபலி படத்தின் கதாசிரியர் கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். தலைவி திரைப்படத்தில் கங்கணா ரணாவத் நான்கு தோற்றங்களில் நடிப்பதால் அவருக்கு ஒப்பனை செய்ய கேப்டன் மார்வெல் படத்தில் பணியாற்றிய ஜேசன் காலின்ஸை படக்குழு ஒப்பந்தம் செய்தது.

அதேபோல் ஜெயலலிதா கேரக்டரில் அச்சு அசலாக தோன்ற உடல் எடையைக் கூட்டிய கங்கனா, பரதநாட்டியத்தையும் கற்றுக் கொண்டார். ஜெயலலிதாவாக நடித்துள்ள கங்கனா ரணாவத் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கங்கனாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக தலைவி பட ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ட்ரெய்லரில் கங்கனா ரனாவத் மிரட்டியிருக்கிறார்.

பாலிவுட் நடிகையை ஜெயலலிதாவாக நடிக்க வைக்கிறாரே விஜய் என்று விமர்சித்தவர்களை வாயடைத்துப் போக செய்துள்ளார் கங்கனா. ட்ரெய்லரே இந்த அளவுக்கு இருக்கே அப்படி என்றால் படம் எப்படி இருக்கும் என்று அனைவரும் வியக்கிறார்கள். மகாபாரததத்திற்கு இன்னொரு பெயர் ஜெயா. என்னை அம்மாவா பார்த்தீங்கனா என் இதயத்தில் இடமிருக்கும். என்ன வெறும் பொம்பளயா பார்த்தீங்கனா என்று கங்கனா வசனம் பேசுவது அருமை. தலைவி படம் வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது. தலைவி தமிழ் தவிர்த்து இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் மணிகர்னிகா, பங்கா ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக கங்கனா ரனாவத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது கங்கனாவுக்கு கிடைத்திருக்கும் நான்காவது தேசிய விருது ஆகும். தலைவி பட ட்ரெய்லரை பார்த்தாலே கங்கனா ஜெயலலிதாவாகவே வாழ்ந்திருக்கிறார் என்பது தெரிகிறது. அதனால் தலைவி படத்திற்காக கங்கனாவுக்கு மேலும் ஒரு தேசிய விருது கிடைக்கும் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry