வேகமாக ஆனா ஆரோக்கியமா உடல் எடையை குறைக்கனுமா..? இப்படி காபி போட்டு குடிங்க!

0
69
Looking for a natural and delicious way to support your weight loss journey? Learn how adding lemon or cinnamon to your black coffee can provide a gentle boost to your metabolism and help you feel fuller for longer. Getty Image.

இன்றைய நவீன காலகட்டத்தில் பல டயட் முறைகள் ட்ரெண்டாகி வருகின்றன. நீங்கள் எந்த டயட்டை பின்பற்றினாலும் அது சமச்சீராக இருப்பது அவசியம். இதைத் தவிர உடல் எடையை குறைக்க தினசரி உடற்பயிற்சியும் அவசியம். இதனுடன் உடல் எடையை குறைக்க முயற்சி செய்யும் பொழுது டீ அல்லது காபி குடிக்கலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும்.

ஒரு நாளைக்கு 3-4 கப் பால் சேர்த்த டீ அல்லது காபியுடன், ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ்களை எடுத்துக் கொண்டால் நிச்சயமாக உடல் எடை அதிகரிக்கும். ஆனால் நிபுணர் பரிந்துரை செய்யும் இந்த முறையை பின்பற்றினால், காபி குடித்தாலும் உடல் எடை அதிகரிக்காது.

Also Read : சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பீங்களா? உடனே நிறுத்துங்க! இல்லைன்னா, இந்த பாதிப்புகள் எல்லாம் வரும்..!

பிளாக் காபி மற்றும் பிளாக் டீ மிகவும் பிரபலமான பானங்கள். பிளாக் காபி என்பது பால் அல்லது சர்க்கரை சேர்க்காமல் தயாரிக்கப்படும் காபி. பிளாக் காபியை தினமும் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். பிளாக் காபி எனப்படும் கருப்பு காபியில் ‘குளோரோஜெனிக்’ என்ற அமிலம் உள்ளது. இது உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது.

இது இரவு உணவு அல்லது இரவு உணவிற்குப் பிறகு உடலில் உள்ள குளுக்கோஸ் உற்பத்தியை தாமதப்படுத்துகிறது. மேலும் புதிய கொழுப்பு செல்களின் உருவாக்கத்தையும் குறைக்கிறது. இதனால் உடலுக்கு மிகவும் குறைந்த கலோரி மட்டுமே கிடைக்கும். மேலும் இந்த குளோரோஜெனிக் அமிலம் ஆன்டி ஆக்ஸிடன்ட்டாக செயல்படுகிறது. இது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. உடல் எடை இழப்புக்கு உதவுகிறது. அதோடு உடலில் இரத்த சர்க்கரை அளவையும் பராமரிக்கிறது.

காபியின் மூலப்பொருளான “காஃபின்” உடலில் பல்வேறு மாற்றங்களை உண்டாக்குகிறது. இது நமது மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. அதேநேரத்தில் அதிகப்படியான பசியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதனால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். பிளாக் காபியில் உள்ள காஃபின் கொழுப்பை எரிப்பதை ஊக்குவிக்கிறது .

பிளாக் காபியை சரியான உணவுடன் அருந்துவது கொழுப்பை எரிக்கவும், பசியைக் குறைக்கவும் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை ஊக்குவிக்கும். அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. விரைவான எடை இழப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்காக பிளாக் காபியுடன் சேர்த்து சாப்பிடக்கூடிய மற்றும் கலந்து அருந்தக் கூடிய உணவுகளை தெரிந்துகொள்வோம்.

Getty Image

நிபுணரின் கருத்துப்படி, சூடான நீருடன் காபி பொடி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும். இதை காலை, மாலை அல்லது இடைப்பட்ட காலை நேரத்திலும் எடுத்துக் கொள்ளலாம். காலை உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அல்லது சாப்பிட்ட 30 நிமிடங்கள் கழித்து இந்த காபியை எடுத்துக் கொள்ளலாம். தூங்குவதற்கு முன் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது உங்களுடைய தூக்கத்தை பாதிக்கலாம்.

Also Read : பாம்பு தனது தோலை உரிப்பது ஏன்? எத்தனை முறை தோல் உரிக்கும்? ஆச்சரியமூட்டும் தகவல்கள்!

பிளாக் காபியில் இலவங்கப்பட்டை சேர்த்து குடிப்பதன் மூலம் பசி கட்டுப்பம். அளவுக்கு அதிகமாக உணவு எடுத்துக் கொள்வதையும் தவிர்க்க முடியும். இலவங்கப்பட்டையில் கலோரிகள் கிடையாது. அதேநேரம் மிக அதிக அளவிலான ஆன்டி – ஆக்சிடண்ட்டுகளைக் கொண்டிருக்கிறது. அதனால் தொப்பை மற்றும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க உதவுவதோடு, அதிகமாக சாப்பிடும் மனநிலையையும் மாற்றுகிறது. இதனால் எடையையும் வேகமாகக் குறைக்கலாம்.

அவகேடோ பழம் : அவகேடோ பழம் ஆற்றல் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இதை பிளாக் காபியுடன் இணைக்கும்போது, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் காஃபின் ஆகியவற்றின் சீரான கலவையை வழங்குகின்றன. இது நமக்கு தேவையான ஆற்றலை வழங்குவது மட்டுமின்றி, பசியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது.

முட்டைகள் : பிளாக் காபியுடன் முட்டைகளை சேர்த்து சாப்பிடுவது உடற்பயிற்சி செய்பவர்களின் செயல்திறனை மேம்படுத்தவும், நாள் முழுவதும் உங்களை முழுமையாகவும், திருப்தியாகவும் உணர வைக்கும். எனவே தினமும் இரண்டு முட்டைகளை உங்கள் அன்றாட உணவு பட்டியலில் இணைத்து கொள்ளுங்கள்.

கிரேக்க தயிர் : கிரேக்க தயிர்(Greek Yogurt) காலை உணவு அல்லது சிற்றுண்டிக்கு திருப்திகரமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். கூடுதல் ஊட்டச்சத்திற்காக நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த பெர்ரிகள் அல்லது சிறிது சியா விதைகளைச் சேர்க்கவும். இதன் மூலம் உங்களுக்கு தேவையான சீரான உணவு கிடைக்கும்.

நட்ஸ் மற்றும் விதைகள் : பிளாக் காபியுடன் நட்ஸ் மற்றும் விதைகளை சேர்த்து சாப்பிடுவது பசியைத் தடுக்க உதவுகின்றன மற்றும் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கின்றன. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன. காலை காபியுடன் ஒரு சிறிய கைப்பிடி அளவு பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகள் மற்றும் ஆளி விதை, சூரிய காந்தி விதைகள் போன்ற விதைகளையும் சேர்த்து கொள்வது நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கவும், நாள் முழுவதும் பசியைக் கட்டுப்படுத்தவும் ஒரு சிறந்த வழியாகும்.

பெர்ரி : பெர்ரிகளை பிளாக் காபியுடன் இணைப்பது உங்கள் காலை பானத்தின் சுவையை அதிகரிக்கும். அதே நேரத்தில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு கொழுப்பை எரிக்கவும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் முக்கிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry