பெரும் வெற்றிபெற்ற மதுரை அதிமுக மாநாடு! சாதித்துக்காட்டிய எடப்பாடி பழனிசாமியின் தளகர்த்தர்கள்!

0
81
ஆர்.பி. உதயகுமார், செல்லூர் கே. ராஜு, வி.வி. ராஜன் செல்லப்பா.

மதுரையில் அதிமுக பொன்விழா எழுச்சி மாநில மாநாட்டை அக்கட்சி நிர்வாகிகள் வெற்றிகரமாக நடத்தி இருக்கின்றனர். சுமார் 15 லட்சம் தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகளால் மதுரையே விழாக்கோலம் பூண்டிருந்தது.

மாநாட்டில், பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு `புரட்சித் தமிழர்’ என்ற பட்டம் வழங்கி அதற்கான சான்றிதழ் அவரிடம் வழங்கப்பட்டது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பேசியதாவது: `புரட்சித் தமிழர்’ என்ற பட்டத்தை பழனிசாமிக்கு அவரது சேவையைப் பாராட்டி மக்கள் அளித்துள்ளனர். சர்வசமய பெரியோர்கள் இந்தப் பட்டத்தை வழங்கி உள்ளனர். புரட்சித் தலைவர் பட்டம் எம்ஜிஆருக்கு கிடைத்ததைப்போல், புரட்சித் தலைவி பட்டம் ஜெயலலிதாவுக்குக் கிடைத்ததுபோல், `புரட்சித் தமிழர்’ பட்டம் பழனிசாமிக்கு கிடைத்துள்ளது என்றார்.

மதுரை அதிமுக மாநாட்டில் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி

மாநாட்டில் பேசிய தலைவர்கள், “பொதுச் செயலாளர், மாநிலத் தலைவர் என்ற நிலையிலிருந்து, தேசிய தலைவர்களில் ஒருவராக எடப்பாடி பழனிசாமி உருவாகிவிட்டார். சித்திரை திருவிழாவை மதுரை கண்டிருக்கிறது. அதேபோல், இது அதிமுகவின் சித்திரை திருவிழா. இந்த மாநாடு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. எதிர்பார்த்ததற்கும் மேலாக பல லட்சம் தொண்டர்கள் குடும்பத்துடன் திரண்டு வந்து, மாநாட்டு திடலையே குலுங்கச் செய்துள்ளனர். திடலில் கொடி ஏற்றிய பழனிசாமி, விரைவில் கோட்டையில் முதல்வராக கொடி ஏற்றுவார் என்பதை இந்த மாநாடு வெற்றி உறுதிப்படுத்தியுள்ளது.

Also Read : அதிமுக பிரமாண்ட மாநாடு! குலுங்கியது மதுரை! மாஸ் காட்டிய ஈபிஎஸ்! லட்சக்கணக்கில் திரண்ட தொண்டர்கள்!

திமுக ஆட்சியை சம்ஹாரம் செய்ய அவதாரம் எடுத்துள்ளார் பழனிசாமி. ஆறுசாமியின் மறு வடிவமாக இருக்கிறார் பழனிசாமி. திமுக ஆளும் பொறுப்பில் இருக்கும்போதே, இந்த மாநாட்டின் மூலம் அச்சத்தை அளித்துள்ளார் பழனிசாமி. இனி தமிழக முதல்வர் ஸ்டாலின் தூங்கவே மாட்டார்.ஜெயலலிதாவின் ஆண் உருவமாகத் திகழ்கிறார். இம்மாநாடு அதிமுகவுக்கு திருப்புமுனையாக அமைந்துள்ளது.” இவ்வாறு தலைவர்கள் பேசினர்.

தொண்டர்களுக்கு உணவு விநியோகித்த மயிலாப்பூர் வடக்கு பகுதி செயலாளர் பி.கணேஷ்பாபு, வட்டச் செயலாளர் ஆர். சுரேஷ்.

முன்னதாக, எடப்பாடி கே. பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்றபோது, மதுரை அதிமுக மாநாட்டை அறிவித்தவுடன், அதற்கான பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், அமைப்பு செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மாநாட்டுக்கான இடம் தேடுவதில் இருந்து வாகன நிறுத்தம் வரை சுற்றுச்சாலையில் வலையங்குளம்தான் சரியான இடம் எனத் தேர்வு செய்தது வரை, 45 நாட்கள் அவர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.

பொதுச்செயலாளரை வரவேற்கும் ஆர்.பி. உதயகுமார், வி.வி. ராஜன் செல்லப்பா, செல்லூர் கே. ராஜு

தனியாருக்கு சொந்தமான அந்த இடத்தின் உரிமையாளர்களிடம் பேசி சட்டப்படி மாநாடு நடத்த அவர்கள் அனுமதி பெற்றனர். தொண்டர்கள், பல லட்சம் பேர் பங்கேற்பர் என்பதால் உணவு தயாரிப்புக் கூடம், கழிப்பறை, வாகன நிறுத்தும் இடம் அமைக்க வேண்டியது அவசியமானது. அதனால், வலையங்குளத்தில் மாநாடு நடத்த முடிவு செய்த இடத்தின் அருகருகே இருக்கும் இடங்களின் உரிமையாளர்களையும் அழைத்து பேசி மாநாட்டு பந்தல் மட்டும் 65 ஏக்கரில் அமைத்தனர். உணவு தயாரிக்கும் கூடம், வாகனங்கள் நிறுத்தும் இடங்களையும் சேர்த்தால், மொத்தம் 500 ஏக்கரில் மாநாடு நடத்தப்பட்டுள்ளது.

மதுரையில் மாநாட்டிற்கு திரண்ட அஇஅதிமுக தொண்டர்கள்
மதுரையில் மாநாட்டுத் திடலின் நுழைவு வாயிலில் தொண்டர்கள்

‘மாநாட்டு பந்தல், மேடை, ஒலிப்பெருக்கி, நிகழ்ச்சி நிரல், உணவு ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் தனித்தனி குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், அக் குழுவினருக்கு நாங்களே வழி காட்டிகளாக இருந்தோம். மாநாட்டுக்கு தடை கோரிய பிரச்சினை தொடர்பாக, சட்ட ரீதியான அணுகு முறைகளில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றோம்’ என்று செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் தெரிவித்தனர்.

மேலும், 3 மாவட்ட கட்சி நிர்வாகிகளுக்கும் ஒரு மாதத்துக்கும் மேலாக, பல்வேறு மாநாட்டு பொறுப்புகளை அளித்து வளாகத்திலேயே அவர்களை இரவு, பகலாக இருந்து செயல்பட வைத்தோம். அதனால், பொதுச்செயலாளர் முதல் அனைத்து மாவட்ட நிர்வாகிகளிடம் கிடைத்த பாராட்டையே எங்கள் பணிகளுக்கான கவுரவமாக கருதுகிறோம். இதற்கான பெருமை மதுரை மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்களையே சேரும்’ என்றும் அவர்கள் கூறினர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry