
உணவுக்குப் பிறகு உடற்பயிற்சி செய்யக்கூடாது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், மேலும் ஒரு பெரிய உணவை சாப்பிட்டுவிட்டு பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்வதும் நல்லதல்ல. ஆனால் உணவுக்குப் பிறகு நிதானமாக 15-20 நிமிட நடைப்பயிற்சி மேற்கொள்வது பாதுகாப்பானது மட்டுமல்ல, பல காரணங்களுக்காகவும் நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது.
இதைத்தான் தெர்மல் வாக் என்கிறார்கள். தெர்மல் வாக் என்பது உணவை முடித்த சிறிது நேரத்திலேயே நிதானமான அல்லது மிதமான வேக நடை ஆகும். இதில் தெர்மல் என்கிற வெப்பம் என்ற சொல் எங்கிருந்து வந்தது என்று நீங்கள் யோசிக்கலாம். உட்கொண்ட உணவை ஜீரணிக்க உங்கள் உடல் ஆற்றல், வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்கள் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கிறது. அந்த செயல்முறை உணவின் வெப்ப விளைவு என்று அழைக்கப்படுகிறது.
Also Read : காலையை விட மாலையில் நடப்பதுதான் ரொம்ப நல்லதா..? ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
நடப்பது உங்களின் வளர்சிதைமாற்ற வீதத்தையும் அதிகரிக்கிறது. மேலும், உணவுக்குப் பிறகு நீங்கள் நடந்தால் அது மேலும் அதிகரிக்கிறது. எனவே ஒரு “வெப்ப” நடை அதாவது தெர்மல் வாக் உணவின் வெப்ப விளைவை அதிகரிக்கிறது. தெர்மல் வாக் செய்வதால் உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பது மட்டுமல்ல வேறு சில நன்மைகளும் உள்ளன.
அன்றாட வழக்கத்தில் தெர்மல் வாக்கை இணைப்பதன் மூலம், உங்கள் மனம் ஓய்வெடுக்கவும், புதிய காற்றை சுவாசிக்கவும் சரியான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். நிதானமான நடக்கும்போது இயற்கைக்காட்சிகளை ரசிக்கலாம், பறவைகளின் ஓசைகளை கேட்கலாம், நண்பர்களுடன் பேசி மகிழலாம். வானிலை காரணமாக வெளியே செல்ல முடியாவிட்டால், வீட்டில் டிரெட்மில்லைப் பயன்படுத்தி நிதானமாக பயிற்சி செய்யும்போது மனதிற்கு ஓய்வு கிடைக்கும். தெர்மல் வாக் செய்த பிறகு நிதானமாகவும், புத்துணர்ச்சியுடனும் உணர முடியும்.
இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்கவும் தெர்மல் வாக் உதவுகிறது. உணவுக்குப் பிறகு நிதானமாக நடப்பது உணவை உட்கொண்ட பிறகு ஏற்படும் இரத்த சர்க்கரையின் அதிகரிப்பைக் குறைப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. உணவுக்குப் பிறகு நடந்தவர்களைவிட, நிதான நடை மேற்கொள்பவர்களுக்கு 12% இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு உணவிற்கும் பிறகு உணவுக்குப் பிந்தைய நடைபயிற்சி அல்லது ஓய்வு நேர நடவடிக்கைகள் அவசியம் தேவை என்று ஆராய்ச்சி ஊக்குவிக்கிறது.
குறிப்பாக ரொட்டி, உருளைக்கிழங்கு மற்றும் அரிசி போன்ற கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவுக்குப் பிறகு நிதான நடை மிகவும் அவசியமாகிறது. இரவு உணவில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக இருக்கும் நிலையில், உணவுக்குப் பிந்தைய நடைப்பயணங்களில் பங்கேற்ற நீரிழிவு நோயாளிகள், நிதான நடை மேற்கொள்ளதா நீரிழிவு நோயாளிகளைவிட 22% குறைவான குளுக்கோஸ் அளவைக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சி நிரூபிக்கிறது. இந்த எளிய வாழ்க்கை முறை மாற்றம் நீரிழிவு உள்பட பிற உடல்நலப் பிரச்சனைகளுக்கு பயிற்சி மூலம் கிடைக்கும் தீர்வாக இருக்கும்.
ஆயுர்வேதத்திலும் இந்த தெர்மல் வாக் பரிந்துரைக்கப்படுகிறது. சரக சம்ஹித சூத்ர ஸ்தானத்தின்படி, ஆயுர்வேதம் இதை ஷடபவாலி (Shatapavali – Shata -100, Pavali – Steps) என்கிறது. அதாவது உணவுக்குப் பிறகு 100 அடிகள் நடக்க வேண்டும். இதைத்தான் தெர்மல் வாக் என்கிறார்கள். இதுகுறித்து கூறும் மருத்துவர் அருண் பிள்ளை, உணவு வளர்சிதை மாற்றத்திற்கு காரணமான ஜடராக்னி(இரைப்பை தீ) தொடங்குவதற்கு 100 அடிகள் நடப்பது தேவைப்படுகிறது. இது செரிமானம் மற்றும் மனநிலையை உயர்த்த உதவுகிறது. வீக்கம், இரைப்பை அழற்சியை சீராக்குவதுடன் மற்றும் குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது.இது உணவில் இருந்து ஒலிகோ தாது உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது.” என்கிறார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry