பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 116 ஆவது ஜெயந்தி மற்றும் 61 ஆவது குரு பூஜை கடந்த 28 ஆம் தேதி தொடங்கியது. ஆன்மிக விழாவை தொடர்ந்து நடைபெற்ற லட்சார்ச்சனையில் பெண்கள் பால்குடம் எடுத்தும், இளைஞர்கள் ஜோதி ஓட்டம் சென்றும் தேவர் திருமகனாருக்கு மரியாதை செலுத்தினர். இந்நிலையில், தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜை அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டது.
தேவர் ஜெயந்தி விழா மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாக்களில் பங்கேற்க அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை விமானத்தில் சென்னையிலிருந்து மதுரை சென்றார். விமான நிலையத்தில் அவரை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்றனர். பின்னர் தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், காமராஜ், ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து பசும்பொன் கிராமத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பளித்தனர். பிறகு எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எம்.கே. அசோக், ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ. முனியசாமி உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் விழா அரசு விழாவாக அறிவிக்கப்பட்டது. மத்தியிலும் மாநிலத்திலும் மக்கள் பிரதிநிதியாக இருந்தவர் தேவர் திருமகனார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேவரின் திருவுருவப்படத்தை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் திறந்து வைத்தார்.
மக்கள் செல்வாக்கு மிகுந்தவராக திகழ்ந்தவர் பசும்பொன் தேவர் திருமகனார். அவருக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 13.50 கிலோ தங்க கவசத்தை அணிவித்து மரியாதை செய்தார். சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலையும் அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் அமைக்கப்பட்டது.” என தெரிவித்தார்.
பிறந்தநாளன்று தனது இன்னுயிரை நீத்த தேவர் பெருகமனாரின் திருவுருவச்சிலையும், அதற்குக் கீழே திருவுருவப் படமும் சென்னை நந்தனத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பொன்னையன், பச்சைமால், ஓ.எஸ்.மணியன், மாவட்டச் செயலாளர்கள் பாலகங்கா, விருகை வி.என்.ரவி, வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், வழக்கறிஞர் அணியைச் சேர்ந்தவரும், கழக செய்தித் தொடர்பாளருமான முன்னாள் எம்.எல்.ஏ. பாபு முருகவேல் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள்.
இதையடுத்து, தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் தேவர் திருமகனாரின் சிலை அருகே அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பொன்னையன், பச்சைமால், ஓ.எஸ்.மணியன், மயிலாப்பூர் வடக்குப் பகுதி செயலாளர் கணேஷ்பாபு, வேளச்சேரி பகுதி செயலாளர் சிசு என்கிற சிவ சுப்பிரமணியன் ஆகியோர் அன்னதானத்தை தொடங்கிவைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள் அண்ணா தொழிற்சங்க பேரவை மாவட்ட செயலாளர் என். வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ். முருகன், பாசறை செயலாளர் கிருஷ்ணராஜ், ஆர். சுரேஷ், கோஷா முரளி, எம். தயாளன், பட்டினப்பாக்கம் எல். மகேஷ்குமார், எஸ்.வி. ஜெயபார்த்தீபன், க.பா. நாகமணி, பிடிசி வீரா, நிழல் புஷ்பராஜ், ஆர். அறிவழகன், ஐ.டி.விங் ஷியாம்குமார், பொதுக்குழு உறுப்பினர் பேரவை எஸ். செல்வம், ஆர். துரைக்கண்ணு, தேனை கா. ராஜா, என்.ஆர். ரமேஷ், என். நிலவழகன், ‘அம்மா’ கோபி, இ. அசோக், எஸ். பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry