மனித உறுப்புகளில் மிக முக்கியமானது நகங்களும்தான். உடலுறுப்புகளில் ஏற்படும் நோய்களை காட்டும் அறிகுறியாக நகங்கள் செயல்படுகின்றன. நமது உடலிலுள்ள கெரட்டின் எனும் உடல் கழிவே நகங்களாக வளர்கின்றன. மனித உடலில் மிகவும் பலமானது நகங்கள் தான். நகங்களை பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியம். உடல் ஆரோக்கியத்தில் நகங்களின் பராமரிப்பும் இன்றியமையாத ஒன்றாகும்.
பல் துலக்குதல், குளித்தல் போன்று நகங்களை வெட்டுதலும் முக்கிய பணியாகும். அதேபோல, நகங்களை சுத்தமாக வைத்திருப்பதும் முக்கியம். ஏனெனில், நகங்களின் மூலம் தான் கிருமிகள் நம் வாய் வழியாக நேரடியாக வயிற்றை சென்றடைகிறது. இதனால், பல்வேறு உபாதைகள் ஏற்படும். பல நோய்களுக்கும் வழிவகுக்கும்.
Also Read : பேப்பர் கப்பில் டீ, காபி அருந்துவதில் உள்ள ஆபத்துகள்! குடல் புற்றுநோய் வரை வரக்கூடும் என எச்சரிக்கை!
நகங்களை வெட்டும் முன் அதனை மென்மைப்படுத்த வேண்டும். சிலர் குளித்துவிட்டு நகம் வெட்டுவதை பழக்கமாக வைத்திருப்பார்கள். சிலர் நகம் வெட்டிவிட்டு குளிப்பார்கள். நகங்களை நீரில் நனைத்துவிட்டு வெட்டுவதுதான் நல்லது. வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் விரல்களை ஊறவைத்த பின் நகங்களை வெட்டுவதால் நகங்கள் மென்மையாக்கப்படுவதோடு இலகுவாகவும் வெட்டலாம். ஒரு முனையிலிருந்து மற்ற முனையை நோக்கியவாறே நகங்களை வெட்டவேண்டும். இதனால் நகங்கள் வளரும் போது சீராக வளரும்.
சிலர் ஸ்டைலுக்காக வெவ்வேறு விதமாக நகங்களை வெட்டுவார்கள். இவ்வாறு வெட்டுவதால் நகங்கள் பலவீனமடையும். வளரும் நகங்கள் வெட்டும் முன்னே உடைந்துவிடும். கைவிரல் நகங்களை விட கால் விரல் நகங்களை வெட்டுவது கொஞ்சம் கடினம் தான். காலை உப்பு நீரில் ஊறவைத்து நகங்களை வெட்டலாம். அதாவது ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி உப்பைக் கரைத்துக்கொண்டு அந்தத் தண்ணீரில் கால் விரல்களை சுமார் பத்து நிமிடங்களுக்கு ஊற வைத்தபின் வெட்டுவதற்கு எளிதாக இருப்பதோடு நகத்திலுள்ள கிருமிகளும் அகற்றப்படும்.
Also Read : கருப்பு பூஞ்சைகள் உள்ள வெங்காயத்தை சாப்பிடலாமா? Black Fungus on Onion and Mucormycosis!
நகங்களை ஒட்ட வெட்டக்கூடாது. அதாவது நகமும் சதையும் இணையும் பகுதியை ஒருபோதும் வெட்டக்கூடாது. காரணம் அந்த பகுதி தான் நகங்களின் வேர் பகுதியை பாதுகாப்பதோடு நோய் தொற்றுக்களிலிருந்தும் நகங்களை பாதுகாக்கின்றன. நகம் வெட்டும் போது தவறுதலாக காயம் ஏற்பட்டால் எண்ணெய் தடவவேண்டும். மருந்துகள் வாங்கி வைப்பதற்கு பதிலாக எண்ணெய் பூசுவதால் காயம் விரைவில் குணமடையும். வலியும் குறையும். நகம் வெட்டப் பயன்படுத்தும் நக வெட்டியை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். நகத்தை வெட்டும் முன்னரும் நகத்தை வெட்டிய பின்னரும் நகவெட்டியை நன்றாக கழுவி சுத்தப்படுத்தவேண்டும்.
நெயில் கட்டரை நாம் நகங்களை வெட்ட மட்டும் தான் பயன்படுத்துவோம். ஆனால், நக வெட்டியில் இரண்டு கத்தி போன்ற இணைப்பு இருக்கும். அது எதற்கு என்று நம்மில் பலருக்கு தெரியாது. ஆனால், அது கொடுக்கப்பட்டுள்ளதுக்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.
நகங்களை வெட்டுவதற்கு மட்டுமே நெயில் கட்டர் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர மனிதனுக்கு எந்தப் பயனும் இல்லை. இக்கட்டான சில சூழ்நிலைகளில் அதன் பயன்பாட்டை அதிகரிக்கத்தான் கத்தி போன்ற 2 சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், நகங்களை வெட்டுவது மட்டுமின்றி வேறு பல பணிகளுக்கும் பயன்படுத்தலாம்.
நெயில் கட்டாரில் இருக்கும் கூர்மையான வளைந்த கத்தி நகத்தில் இருக்கும் அழுக்கை சுத்தம் செய்ய கொடுக்கப்பட்டுள்ளது என நம்மில் பலர் நினைத்திருப்போம். ஆனால், அது எதற்காக கொடுக்கப்பட்டுள்ளது தெரியுமா?அவை சிறிய பொருட்களை கையாள கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்ல, பாட்டில் மூடியைத் திறக்கவும் அதனை பயன்படுத்தலாம்.
Also Read : சிபில் ஸ்கோர் குறைஞ்சிடுச்சா? கவலையே வேண்டாம்… இதைப் பின்பற்றினால் ஈஸியா வங்கிகளில் கடன் வாங்கலாம்!
உண்மையில், நெயில் கட்டரில் இரண்டு கத்திகளை சேர்த்த பிறகு, இதன் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. நீங்கள் எங்கு பயணம் செய்தாலும் உங்களுடன் அதை எடுத்துச் செல்லலாம். ஏனென்றால் இது மிகவும் சிறியது மற்றும் பல நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தலாம். வெட்டுவது, துளையிடுவது, பாட்டிலை திறப்பது என பல விஷயங்களுக்கு பயன்படுத்தலாம்.
நீங்கள் ஒரு பயணத்தில் இருந்தாலும் சரி, வெளியே சென்றாலும் சரி, இந்த சிறிய கத்தியால் எலுமிச்சை, ஆரஞ்சு அல்லது வேறு எதையும் எளிதாக வெட்ட முடியும். மேலும், சிலர் இந்த கத்திகளின் கூர்மையான முனைகளை நக அழுக்குகளை சுத்தம் செய்ய பயன்படுத்துகின்றனர். இருப்பினும், அவ்வாறு செய்வது நல்லதல்ல, ஏனென்றால் சிறிய கவனச்சிதறல் இருந்தாலும், அதன் கூர்மையான விளிம்புகள் உங்கள் விரலைத் துளைத்து, உங்களை நீங்களே காயப்படுத்திக் கொள்ள நேரிடும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry