பொதுவாகவே பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அந்தவகையில் கொய்யா, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்களை நிறைவாகக் கொண்டுள்ளது. இதனுடன் வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற சத்துக்களும் உள்ளன. நூறு கிராம் கொய்யாவில் சுமார் 300 மில்லி கிராம் அஸ்கார்பிக் அமிலம் அதாவது வைட்டமின்-சி உள்ளது.
இது தவிர, கொய்யாவில் ஏராளமான பைட்டோநியூட்ரியன்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தாதுக்கள் என ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கொய்யாவின் பயன்பாடு பல வகையான உடல்நலப் பிரச்சனைகளை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. குறிப்பாக வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்குவதில் கொய்யா நல்ல பங்கு வகிக்கிறது.
Also Read : டீ, காபி குடிப்பதற்கு முன் கட்டாயம் தண்ணீர் அருந்த வேண்டும்! ஏன் தெரியுமா?
ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம் போன்று பெருமளவில் விரும்பிச் சாப்பிடும் பழங்களில் கொய்யா முக்கியமானது. இதில் விதைகள் அதிகம் இருப்பதால் சில நேரங்களில் குழந்தைகள் வேண்டாம் என்று அடம்பிடிப்பார்கள். பெற்றோரும் பல நேரங்களில் கொய்யா பழங்களைச் சாப்பிடுவதற்கு வற்புறுத்துவதில்லை. இது தவறு. எந்தளவிற்கு கொய்யா பழங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகிறீர்களோ? அந்தளவிற்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
வயிற்றுக்கு நல்லது
கொய்யாவில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது. இதனால் செரிமானம், வயிற்றுக்கோளாறு பிரச்சனைகளுக்கு கொய்யாவை சாப்பிடலாம். சிலருக்கு கொய்யாவை விதையுடன் சாப்பிட்டால் வயிறு வலி வரலாம். அவர்கள் விதையை எடுத்துவிட்டு சாப்பிட வேண்டும். அதேசமயம் அளவுக்கு அதிகமாக கொய்யா சாப்பிட்டாலும் வயிறு வலி வரலாம்.
மலச்சிக்கலை போக்கும்
நார்ச்சத்து நிறைந்த கொய்யா மலச்சிக்கல் பிரச்சனையை நீக்க உதவுகிறது. அதோடு செரிமானமும் மேம்படும். எனவேதான் மலச்சிக்கல் இருக்கும்போது கொய்யாவை சாப்பிட பல மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர்.
அமிலத்தன்மை நீக்க உதவும்
கொய்யாவை சாப்பிட்டால் வாயு மற்றும் அசிடிட்டி பிரச்சனை தீரும். ஏனெனில் கொய்யாவும் அமில தன்மை கொண்ட பழம். எனவே, கொய்யாவை உண்பதன் மூலம் வாயுவை வெளியேற்றுவது எளிது.
மூலத்திற்கு நல்லது
கொய்யாப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூலத்திற்கு நல்லது. உண்மையில், மூலத்திற்கு மிகப்பெரிய காரணம் மலச்சிக்கல். கொய்யா சாப்பிடுவதால் மலச்சிக்கலும் நீங்கும். அதோடு மூலமும் சரியாகலாம்.
அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி
இன்றைய சூழலில் பருவநிலை மாற்றங்களைக் கூட பலரது உடல் ஏற்றுக் கொள்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது தான். இந்நேரத்தில் கொய்யா பழங்களை உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது இதில் வைட்டமின் சி பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் அனைத்து சூழல்களிலும் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
Also Read : படுக்கையறை வாஸ்து! கட்டில் வைக்கும் திசை முதல் படுக்கை அறை வரை..! பயனுள்ள வாஸ்து டிப்ஸ்!
இதய ஆரோக்கியம்
கொய்யா பழங்களில் குறைந்த அளவில் கொழுப்பு சத்துக்கள் உள்ளது. இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைத்து இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது மற்றும் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துதல்
கொய்யாவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது இரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது. இந்த பழத்தின் இலைகளில் பாலிபினால்கள் மற்றும் ட்ரைடர்பீன்கள் நிறைந்துள்ளன, அவை கிளைகோஜனின் வளர்சிதை மாற்றத்தை நிர்வகிக்க உதவும்.
புற்றுநோயைத் தடுக்கும்
கொய்யா இலை சாறு ஆக்ஸிஜனேற்ற மற்றும் கட்டி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் நுரையீரல், பெருங்குடல், கர்ப்பப்பை வாய், மார்பகம் மற்றும் இரைப்பை போன்ற சில வகையான புற்றுநோய்களைத் தடுக்க உதவுகிறது.
கண் ஆரோக்கியம்
கொய்யா பழங்களில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் கண்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்கு உதவுகிறது.
எடையைக் கட்டுக்குள் வைத்தல்
உடல் பருமன் என்பது நம்மில் பலரும் சந்திக்கும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று. என்ன தான் ஜிம்மிற்குச் சென்றாலும் உணவு முறையிலும் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். இவற்றிற்கு கொய்யா சாப்பிடுவது சிறந்த தீர்வாக அமையும். ஒரு கொய்யாவில் சுமார் 54 கலோரிகள் மட்டுமே இருப்பதால் தேவையில்லாத கொழுப்புகள் உடலில் சேர்வதைத் தடுக்கிறது.
LDL ஐக் குறைத்தல்
கொய்யாவில் பெக்டின் மற்றும் வைட்டமின் சி போன்ற கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. கரையக்கூடிய நார்ச்சத்து, மலத்தின் வழியாக கொழுப்பை வெளியேற்ற உதவுகிறது, அதன் உறிஞ்சுதலைக் குறைக்கிறது மற்றும் இரத்தத்தில் அளவைக் குறைக்கிறது. மேலும், கொய்யாவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், இது எல்டிஎல் கொழுப்பின் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்கவும், HDL கொழுப்பின் நல்ல அளவை பராமரிக்கவும் உதவுகிறது.
Also Read : இலக்குகளை அடைய ஆதிக்க மனப்பான்மை ஏன் அவசியம்? The Secret to Success: Cultivating a Dominant Mindset!
இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துதல்
கொய்யாவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், குறிப்பாக பாலிபினால்கள் நிறைந்துள்ளன. இது இரத்த நாளங்களை தளர்த்தி இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இதில் பொட்டாசியம் உள்ளது, இது சிறுநீரின் மூலம் சோடியத்தை வெளியேற்றுவதை ஊக்குவிக்கிறது. இது இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.
சரும ஆரோக்கியம்
இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு கொய்யாவை சாப்பிடுவது சருமத்திற்கு சிறந்தது, ஏனெனில் அதில் லைகோபீன் நிறைந்துள்ளது. இது ஆக்ஸிஜனேற்ற கலவையாகும். இது சூரியனின் புற ஊதா கதிர்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது. இது உடலில் சுழலும் ஃப்ரீ ரேடிக்கல்களின் அளவைக் கட்டுப்படுத்துகிறது, இதனால் முன்கூட்டிய தோல் வயதானதைத் தடுக்கிறது. கூடுதலாக, கொய்யாவில் வைட்டமின் சி உள்ளது, இது உடலில் கொலாஜன் உற்பத்திக்கு தேவையான நுண்ணூட்டச்சத்து ஆகும். கொலாஜன் என்பது சருமத்தின் நெகிழ்ச்சி மற்றும் உறுதியை பராமரிக்க அடிப்படையான ஒரு புரதமாகும்.
வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும்
சில அறிவியல் ஆய்வுகள் கொய்யா இலைச் சாறில், வாயுத் தணிப்பு மற்றும் கிருமி எதிர்ப்பு பண்புகள் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும் நுண் உயிரிகளை குறைக்க உதவுகிறது. இந்த பயனைக் கிடைக்கச் செய்ய கொய்யா இலையை கொதிக்க வைத்து தேநீராக பருகலாம்.
மாதவிடாய் வலியைக் குறைக்கும்
சில ஆய்வுகள், கொய்யா இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு, வலி மற்றும் அசௌகரியத்தை போக்கக்கூடிய வலி நிவாரணி பண்புகளைக் கொண்டிருப்பதால், மாதவிடாய் பிடிப்புகளின் தீவிரத்தை குறைக்க உதவும் என்று குறிப்பிடுகின்றன.
இரத்த சோகையைத் தடுக்கும் மற்றும் மேம்படுத்துதல்
கொய்யாவில் உள்ள வைட்டமின் சி, குடலில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்சுவதை ஊக்குவிக்கிறது. எனவே, இந்த பழத்தை தாவர அடிப்படையிலான இரும்பு ஆதாரங்களுடன் சேர்த்து உண்ண வேண்டும்.
கொய்யாவை எப்போது சாப்பிட வேண்டும்..? மாலை அல்லது இரவில் கொய்யா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர். கொய்யாவை இரவில் சாப்பிடுவதால், அதன் செரிமானமும் சரியாக நடைபெறாது. கொய்யாவை பகல் மற்றும் மதியம் மட்டுமே உட்கொள்ள வேண்டும். மதிய உணவுக்கு ஒன்றரை மணி நேரம் கழித்து கொய்யாப்பழத்தை உட்கொள்வதால் அனைத்து வயிற்றுப் பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry