தி.மு.க., பொதுக்குழு கூட்ட மேடையில், பொருளாளர் டி.ஆர்.பாலுவின் செருப்பை, தொண்டர் ஒருவர் கையில் எடுத்து வந்து காலில் மாட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Also Read : துன்பப்படுத்தும் வகையில் மூத்த அமைச்சர்கள் நடந்து கொண்டால்…! திமுக பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
தி.மு.க., பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அப்போது புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அவர்கள் காலணிகளை கழற்றி ஓரமாக விட்டு விட்டு, மேடையின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். மரியாதை செலுத்திய பின் காலணியை அணிந்துகொண்டு மேடையில் வந்து அமர்ந்தனர்.
ஆனால், பொருளாளர் டி.ஆர்.பாலு தன் செருப்பை அணிய மறந்து, இருக்கையில் அமர்ந்து விட்டார். அப்போது, தன் செருப்பை எடுத்து வரும்படி தொண்டர் ஒருவரிடம் கூற, அவரும் கையில் செருப்பை எடுத்து வந்து, அணிந்துகொள்ள ஏதுவாக டி.ஆர்.பாலு கால் அருகே வைத்தார்.
பொதுக்குழு கூட்ட மேடையில் அமர்ந்துகொண்டு, தொண்டர் ஒருவரை கையால் தனது செருப்பை எடுத்துவரச்சொல்லி காலில் மாட்டிக்கொண்ட டி.ஆர். பாலு. Video Courtesy : Thamarai TV #DMK #TNNews #velsmedia pic.twitter.com/EJ8gER3j9w
— VELS MEDIA (@VelsMedia) October 10, 2022
மூத்த நிர்வாகிகள், அமைச்சர்களால் தூக்கத்தை இழப்பதாக முதலமைச்சர் வேதனை தெரிவித்திருந்த நிலையில், இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதுதான் தி.மு.க.வின் சமூக நீதியா; திராவிட மாடலா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Also Read : புத்தகங்களை வைத்து பாடம் நடத்த அனுமதிக்காதது ஏன்? பெற்றோரின் அறச்சீற்றத்துக்கு பதில் சொல்லியாக வேண்டும்!
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry