அதிமுக-வை கைப்பற்ற தினகரன் சதி! சசிகலா, தினகரனை அதிமுக-வில் இணைக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி உறுதி!

0
9

.தி.மு..,வை கைப்பற்ற சதி நடப்பதாகவும், ஒரு குடும்பம் தமிழகத்தை ஆட்சி செய்வதற்கு அதிமுக தலை வணங்காது எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், “தினகரன், அதிமுகவில் 10 ஆண்டுகளாக உறுப்பினராக இல்லை. ஜெயலலிதா இருந்த போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். ஏதோ சந்தர்ப்பவாதத்தில் கட்சியில் இணைந்த அவர், இப்போது சதி வேலையில் ஈடுபட்டுள்ளார். ஒரு போதும் அவர்களை அதிமுகவில் இணைக்க முடியாது.

அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர்கள் கட்சிக்கு எதிராக சதி செய்கின்றனர். சிலர் அதிமுகவை கைப்பற்ற முயற்சி செய்கின்றனர். ஒரு குடும்பம் ஆட்சி செய்வதற்கு அதிமுக தலைவணங்காது. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவர்களை, ஒரு போதும் கட்சியில் இணைக்க முடியாது. கட்சி ஒரு போதும் அவர்களுக்கு தலைவணங்காது.

தினகரன் இப்போது கட்சியை கைப்பற்ற சூழ்ச்சி வலையை பின்னி கொண்டிருக்கிறார். அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து அந்த சூழ்ச்சி வலையில் சிக்கக் கூடாது. எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து நிறைவேற்ற வேண்டும்.

அடிப்படை தொண்டன் தான் இனி அ.தி.மு..,வில் முதல்வராக முடியும். இது தொண்டன் ஆட்சி செய்யும் கட்சி. உழைப்பால் உயர்ந்த கட்சி. அதிமுக தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து அந்த சூழ்ச்சி வலையில் சிக்கக்கூடாது. தினகரன் எத்தனை அவதாரம் எடுத்தாலும், அதிமுகவை கைப்பற்ற முடியாது. அதிமுகவை வீழ்த்த திமுகவுடன் திமுகவுடன் சேர்ந்து தினகரன் சதி செய்கிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி வேண்டும் என்றார்கள். அந்தக் கோரிக்கையை நிறைவேற்றி இப்பொழுது பிரம்மாண்டமாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. எண்ணேகோல் புதூர் திட்டத்திற்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விரைவில் அந்தத் திட்டம் நிறைவேற்றப்படும். அதேபோல பாரூர் ஏரியிலிருந்து ஊத்தங்கரையில் உள்ள முப்பது ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். பிரச்சாரத்தின்போது அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி எம்.பி., மாவட்ட செயலாளர் அசோக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherryå