ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, சசிகலா குறித்து தரம் தாழ்ந்த பேச்சு! மீண்டும் சர்ச்சையில் ஆர்.எஸ்.பாரதி!

0
83

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் குறித்து, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி. பேசிய பேச்சு முகம் சுளிக்க வைக்கிறது. தரம்தாழ்ந்து, எல்லை மீறி, கொச்சையாக பேசுவதையே ஆர்.எஸ். பாரதி வழக்கமாகக் கொண்டுள்ளார் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

அம்பத்தூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, கட்சியினர் தம்மை மூத்த தலைவராக கருதுகிறார்கள், தாம் ஒரு எம்.பி. என்பதையெல்லாம் மறந்து கேவலமாகப் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை மூதேவி என்றும், முதலமைச்சர் எடப்பாடியை மிகவும் கேவலமாகவும் அவர் விமர்சித்திருப்பது அதிமுகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. உங்களுக்கு வாரிசு இல்லைனா நாங்களா ஏற்பாடு செய்து கொடுக்க முடியும்? எனவும் அவர் ஆபாசமாக பேசியிருக்கிறார்.

ஆர்.எஸ். பாரதி இதுபோன்று பேசுவது இது முதல் முறையல்ல. தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் நீதியரசர்களாக இருப்பது, திராவிட இயக்கம் போட்ட பிச்சை என அவர் பேசியிருந்தார். அதேபோல், தமிழ்நாட்டில் ஊடக அலுவலகங்கள் விபச்சார விடுதிகள் போல செயல்படுவதாகவும் சர்ச்சைக்குரிய வகையில் ஆர்.எஸ். பாரதி கருத்து தெரிவித்திருந்தார். இதுபோன்று தொடர்ந்து திமுகவினர் ஆபாசமாக பேசிவருவது மக்கள் மத்தியில் அறுவறுப்பை ஏற்படுத்தி வருகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherryå