வாரத்தில் 4 நாள் வேலை! மத்திய அரசின் திட்டத்தால் வேலை வாய்ப்புகள் பறிபோகுமா?

0
9

விருப்பத்தின் அடிப்படையில், வாரத்தில் நான்கு நாள் மட்டுமே வேலை நாட்களாக அறிவிக்கும் புதிய வசதி விரைவில் வர உள்ளது. அதே நேரத்தில், வாரத்தில், 48 மணி நேர பணி முறையில் எந்த மாற்றமும் இருக்காது.

ஊழியர்களின் வேலை நேரம் தொடர்பாக மாற்றங்களை கொண்டு வர மத்திய தொழிலாளர் அமைச்சகம் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. புதிய நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்தால், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே, ஆனால், தற்போதுள்ளதுபோல வாரத்தில் 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும்.

இப்போது அனைத்து நிறுவனங்களிலும் வாரத்தில் 6 நாட்கள், தினமும் 8 மணிநேரமும் என்ற வகையில் வேலை நேரம் உள்ளது. இதன் காரணமாக அவர்கள் வாரத்தில் 48 மணிநேரம் வேலை செய்கிறார்கள். தற்போது ஒரு வாரத்தில் 1 நாள் விடுப்பு உள்ளது. ஆனால் புதிய விதியின் கீழ், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை இருக்கும்.

அதாவது, ஒரு ஊழியர் ஒரு நாளைக்கு 12 மணிநேரமும், வாரத்தில் நான்கு நாட்களில் 48 மணி நேரமும் பணிபுரிந்தால், மீதமுள்ள மூன்று நாட்களுக்கு அவர் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். ஊழியர் வாரத்தில் 5 நாட்கள் அல்லது 6 நாட்கள் வேலை செய்யத் தேவையில்லை என்பதற்கு நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட வேண்டும்.

 எனினும் புதிய நடைமுறைக்குள் வருமாறு ஊழியர்களையோ அல்லது முதலாளிகளையோ மத்திய அரசு கட்டாயப்படுத்தவில்லை. இது மாறிவரும் கலாசாரத்துக்கு ஏற்ப இருக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது. அதோடு இந்த விதிமுறைகள் தொழிலாளர் சட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும். வாரத்திற்கு நான்கு அல்லது ஐந்து நாள் வேலை திட்டத்திற்கு மாற அரசின் அனுமதி தேவையில்லை.

வாரத்தில் நான்கு நாட்களை ஊழியர்கள் தேர்வு செய்தால், அடுத்த வார இடைவெளி மூன்று நாட்கள் இருக்க வேண்டும். இதே ஐந்து நாள் என்றால், இரண்டு நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்பதையும் முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும்.

இந்த புதிய விதியால், பல ஊழியர்களுக்கு ஓய்வு நேரம் கூடுதலாக கிடைக்கும். வேலை அழுத்தத்தில் இருந்து மீள்வதற்கும் வாய்ப்புள்ளதாக, வேலை நாட்களில் வேலை நன்றாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நடவடிக்கையின் மூலம் குறைந்த அலுவலக வாடகை மற்றும் அதிக ஆற்றல், உற்பத்தி என பல வகையிலும் ஊழியர்களிடமிருந்து நிறுவனங்கள் பயனடையலாம் என அவர்கள் பரிந்துரைக்கின்றனர். எனினும்  12 மணி நேர சிஃப்டுக்கு மாறினால், வேலை வாய்ப்புகளும் குறைய வாய்ப்புள்ளது. ஏனெனில் மூன்று சிஃப்டுகளில் இருந்து 2 ஷிஃப்ட்டாக மாறும் போது வேலை வாய்ப்புகள் குறையலாம் என்று கருதப்படுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry