வலிமை பட மோஷன் போஸ்டர் வெளியீடு! தல சொல்லும் தகவல் இதுதானா? அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்!

0
40

அஜித் ரசிகர்கள் ஆண்டுக் கணக்கில் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தவலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் இந்த மோஷன் போஸ்டரை கொண்டாடி வருகின்றனர்.

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வலிமை படம் தயாராகி வருகிறது. படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டே தொடங்கியது. கொரோனா ஊரடங்கால் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டு, தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது படப்பிடிப்பு நடைப்பெற்றது.

வலிமை மோஷன் போஸ்டர் இன்று வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து #ValimaiMotionPoster என்ற ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வந்தனர். தற்போது வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. Power is a State of Mind என்ற கருத்தை தாங்கியபடி இந்த மோஷன் போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இளமையான, சக்திவாய்ந்த, ஆற்றல்மிக்க, கவர்ச்சியான அஜித்தை இதில் பார்க்க முடிகிறது.

பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி இப்படத்தில் நடிக்கிறார். இவர் காலாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கிட்டத்திட்ட 2 ஆண்டுகள் ஆகியும் படத்தை பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் படக்குழுவினர் வெளியிடாததால் அஜித் ரசிகர்கள் சோர்வடைந்தனர். ஒரு கட்டத்தில்வலிமை அப்டேட்கேட்டு ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யத் தொடங்கினர்.

சில நாட்களுக்கு முன்பு அஜித் ரசிகர்கள் பார்க்கும் பிரபலங்களிடம் எல்லாம் வலிமை அப்டேட் கேட்டனர். கிரிக்கெட் மைதானத்தில் வலிமை அப்டேட் என்ற எழுதிய பதாகையுடன் ரசிகர்கள் அமர்ந்திருந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வலிமை மோஷன் வெளியானதால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அஜித்தின் 60-வது படமான வலிமை மோஷன் போஸ்டரை சமூக வலைதளங்களில் அவர்கள் பெரிய அளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry