வன்னியர் இடஒதுக்கீடு குறித்த ஆர்.டி.ஐ. தகவலால் சர்ச்சை! சந்தேகம் கிளப்பும் சமூக ஆர்வலர்கள்! மண்டலங்களாகப் பிரித்து இடஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை!

0
75
Vanniyar activists demand caste census and implementation of region-wise reservation. They said, the RTI report says that we are asking for less reservation in the MBC category. File Image : Dr. Ramadoss, Founder - PMK.

பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டுக்குள் 10.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாமக கூறுவதுபோல மாநில அரசு வேலைகள் மற்றும் தொழிற்கல்வியில் வன்னியர் சமூகத்தின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளதா?

தமிழ்நாட்டில் தற்போது 69% இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. எம்.பி.சி., டி.என்.சி. 20%, பி.சி. (பி.சி. முஸ்லிம் 3.5% உள்பட) 30%, எஸ்.சி. 15%, அருந்ததியர்கள் 3%, எஸ்.டி. 1% என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை கொண்டையன் கோட்டை மறவன் சங்கத்தைச் சேர்ந்த பி.பொன்பாண்டியன் ஜூலை 31 அன்று பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் பொது தகவல் அலுவலரிடமிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், மருத்துவம் (எம்.பி.பி.எஸ் மற்றும் முதுநிலை படிப்புகள்) மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் போன்ற அரசு நிறுவனங்களில் ஆட்சேர்ப்பு மற்றும் தொழிற்கல்வி படிப்புகளில் வன்னியர் சமூகத்தின் பிரதிநிதித்துவம் தெரியவந்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியற்றில் பாமக கோரிய 10.5 சதவீத இடஒதுக்கீட்டை வன்னியர்களின் பிரதிநிதித்துவம் அதிகமாக உள்ளது.

Also Read : ரயில் பயணத்துக்கு காப்பீடு இருப்பது தெரியுமா? வெறும் 35 பைசாதான்… ரூ.10 லட்சம் வரை இழப்பீடு! பதிவு செய்வது ரொம்ப ஈஸிதான்!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பதிலின்படி, தமிழ்நாட்டில் 2018 மற்றும் 2022 க்கு இடையில் எம்பிபிஎஸ்-ல் அனுமதிக்கப்பட்ட 24,330 மாணவர்களில், 4,873 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான (எம்பிசி) / சீர்மரபினர் (டிஎன்சி) 20 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களில், வன்னியர்கள் பாதிக்கும் மேற்பட்ட இடங்களை (2,781 அல்லது 11.4%) பிடித்துள்ளனர். அதே நேரத்தில் 1,414 மாணவர்கள் (5.8%) மற்ற அனைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ள 678 இடங்கள் சீர்மரபினர் மாணவர்களுக்கு சென்றுள்ளன.

2018-22 எம்.பி.பி.எஸ். சேர்க்கை தரவுகளானது, தனி இட ஒதுக்கீட்டுக்கான கோரிக்கையை நியாயப்படுத்த பா.ம.க.வால் மேற்கோள் காட்டப்பட்டதாகும். எம்.பி.சி. / டி.என்.சி. ஒதுக்கீட்டில் பெரும்பகுதியை வன்னியர் சமூகம் அனுபவித்ததைக் புள்ளி விவரம் காட்டுகிறது. உண்மையில், 2018 மற்றும் 2022 காலகட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 24,330 எம்.பி.பி.எஸ். மாணவர்களில், வன்னியர்கள் 13.8% (3,354) ஆவர். இதன் மூலம் வன்னியர் சமூகம் 10.5% காட்டிலும் அதிக பயனடைவது தெளிவாகிறது. எனவே 10.5% உள் இடஒதுக்கீட்டை செயல்படுத்துவது வன்னியர் சமுதாய மக்களுக்கான வாய்ப்புகளை குறைக்கவே செய்யும்.

Also Read : கோரிக்கைகளைக் கேட்டால் கோரத்தாண்டவமாடுவதா? ஐபெட்டோ அண்ணாமலை ஆவேசம்!

இதேபோல், இந்த காலகட்டத்தில் 20 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் முதுநிலை மருத்துவ சேர்க்கை பெற்ற 1,363 எம்பிசி / டிஎன்சி மாணவர்களில் (மொத்தம் 6,966), வன்னியர்கள் 694 (10.2%) இடங்களையும், மற்ற எம்பிசி மற்றும் சீர்மரபினர் முறையே 636 (9.1%) மற்றும் 279 (4%) இடங்களையும் பெற்றுள்ளனர்.
கடந்த பத்தாண்டுகளில் அரசுப் பணிகளில் வன்னியர்களின் பிரதிநிதித்துவம் குறித்த புள்ளிவிவரங்கள் இன்னும் தெளிவாக உள்ளன. 2013 மற்றும் 2022 க்கு இடையில் TNUSRB ஆட்சேர்ப்பு செய்த 1,919 துணை ஆய்வாளர்களில், 327 (17%) பேர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அதே நேரத்தில் DNC மற்றும் பிற MBCக்கள் முறையே 152 (7.9%) மற்றும் 126 (6.6%) மட்டுமே உள்ளனர்.

இதேபோல், 2013 மற்றும் 2022 க்கு இடையில் TNMSRB ஆல் தேர்வு செய்யப்பட்ட 8,379 உதவி மருத்துவர்களில், வன்னியர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டின் கீழ் 1,185 (10.8%) மற்றும் மொத்த நியமனத்தில் 1,433 (17.1%) ஆக உள்ளனர். ஆசிரியர்களைப் பொறுத்தவரை, 2021 ஆம் ஆண்டில் மட்டும் TRB ஆல் MBC/DNC ஒதுக்கீட்டின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 634 முதுகலை ஆசிரியர்களில் 383 பேர் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள். மொத்தம் நியமிக்கப்பட்ட 3,044 முதுகலை ஆசிரியர்களில் வன்னியர்களின் பங்கு 17.5% ஆகும்.

Also Read : வயநாடு நிலச்சரிவு! இஸ்ரோ புகைப்படங்களால் வெளியான பகீர் உண்மை! எச்சரிக்கையை புறக்கணித்ததா கேரள அரசு? 86,000 சதுர மீட்டர் நிலம் குளோஸ்!

2012 மற்றும் 2023 க்கு இடையில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட வன்னியர்கள் குறித்த குறிப்பிட்ட கேள்விக்கான பதிலில், 2013 மற்றும் 2018 க்கு இடையில் நிரப்பப்பட்ட மொத்த 2,682 பதவிகளில் 481 (ஒதுக்கீட்டிலிருந்து 11.2%) மற்றும் 366 (13.6%) வன்னியர்கள் பெற்றுள்ளதாக கூறியுள்ளது. 2013 முதல் 2022 வரை நிரப்பப்பட்ட 26,784 குரூப்-4 வேலைகளில், வன்னியர்கள் 5,215 (19.5%) மற்றும் டிஎன்சிக்கள் 2,882 (10.8%) ஆக உள்ளனர். 2013 முதல் 2022 வரை டி.என்.பி.எஸ்.சி நடத்திய சிவில் நீதிபதிகள் ஆட்சேர்ப்பு தேர்வில், எம்.பி.சி. / டி.என்.சி.க்கு 20 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 79 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், 39 (9.9%) மற்றும் 16 (4.1%) முறையே வன்னியர்கள் மற்றும் டி.என்.சி. பிரிவினர் ஆவார்கள்.

இதுகுறித்து வன்னியர் சமூக ஆர்வலர்களிடம் பேசியபோது, நாங்கள் 16% உள் ஒதுக்கீடு பெற தகுதியானவர்கள். ஆனால் 10.5% தான் கேட்கிறோம். நாங்கள் குறைவாகக் கேட்பதைத் தருவதற்குக்கூட தமிழக அரசு ஏன் மறுக்கிறது? இந்தப் புள்ளிவிவரங்களின் தன்மை குறித்து ஆராயப்பட வேண்டும். பொதுப்பிரிவு இடஒதுக்கீட்டில் வரும் வன்னியர்களையும் கணக்கில் சேர்த்து இந்த புள்ளிவிவரம் கொடுக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை?

Also Read : நீங்க Hard Worker or Smart Worker? வெற்றிக்கான சிம்பிள் டிப்ஸ்! இனி எல்லாமே சக்ஸஸ்தான்!

சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேசும்போது, இந்தத் தரவுகளை இல்லை என்று சொன்னார். இப்போது பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இந்தப் புள்ளிவிவரங்களை ஆர்.டி.ஐ. மூலம் கொடுத்துள்ளது. முதலமைச்சர் சொல்வதை நம்புவதா? அல்லது பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை புள்ளி விவரங்களை நம்புவதா? என்ற கேள்வி எழுகிறது. அதேநேரம், இந்தத் தரவுகளை கொடுத்ததன் மூலம் உள்ஒதுக்கீடு சதவிகிதத்தைப் பொறுத்தவரை நாங்கள் குறைவாகத்தான் கேட்கிறோம் என்பது இப்போதாவது அரசாங்கத்திற்கு புரிந்திருக்கும்.

இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்றால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம். சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசும் நடத்தலாம், மாநில அரசும் நடத்தலாம். மாநில அரசுக்கு அந்த அதிகாரமிருக்கிறது. பீகார், கர்நாடகா போன்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. அங்கெல்லாம் நடத்தும்போது, சமூகநீதியின் பிறப்பிடம் என்று சொல்லும் தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திமுக அரசு ஏன் மறுக்கிறது? என்பது தெரியவில்லை.

Also Read : கூகுள் மேப்ஸ்-ல் அட்டகாசமான அப்டேட்! ஒத்தையடி பாதை, ஃப்ளைஓவர் பிரச்சனைகளுக்குத் தீர்வு!

இதுமட்டுமல்ல, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டபின், தமிழ்நாட்டை சமூக அடிப்படையில், நான்கு மண்டலங்களாக பிரித்து இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் எந்தச் சாதியும் வஞ்சிக்கப்படாமல் இட ஒதுக்கீட்டின் பலனைப் பெற முடியும். ஒட்டுமொத்த தமிழ்நாடு என்ற அடிப்படையில்தான் நாங்கள் 10.5% கேட்கிறோம், ஆந்திராவைப் போல மண்டலமாக பிரித்து இடஒதுக்கீடு வழங்கப்பட்டால் எங்களுக்கு அதிகமாகக் கிடைக்கும். மற்ற சாதியினர் வன்னியர் என்ற சான்றிதழ் பெற்று இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவிப்பதையும் தடுக்க முடியும். இது வன்னியர்களுக்கு மட்டுமல்ல, ஏனைய சாதியினருக்கும் பொருந்தும். தெற்கு, வடக்கு, கிழக்கு, டெல்டா என 4 மண்டலங்களாகப் பிரித்து எந்தச் சாதியினரும் வஞ்சிக்கப்படாத வகையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.” என்று கூறினார்.

10.5% உள் ஒதுக்கீடு குறித்து கருத்து தெரிவித்திருந்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், “போராடித்தான் 10.5% இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க வேண்டும் என்றால் அதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி தயாராகத்தான் இருக்கிறது. இதை உணர்ந்து வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும். ஏற்கனவே 7 நாட்கள் நடத்திய சாலை மறியலை விட மிகப்பெரிய போராட்டமாக இது இருக்கும். கடுமையான போராட்டத்தை நடத்தினால் தான் இந்த அரசு கொடுக்கும் அல்லது பணியும் என நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

With Input DT Next.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry