பஞ்சபூத தத்துவங்களை உள்ளடக்கியது வாஸ்து. மக்கள் நிம்மதியாகவும், செழிப்பாகவும் வாழ அவர்கள் வசிக்கும் வீடு, தொழிற்சாலை, தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏனைய கட்டடங்கள் வாஸ்து சாஸ்திர விதிகளை அனுசரித்துக் கட்டப்பட வேண்டியது மிகவும் அவசியம். வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு பொருளுக்கும் அதன் சொந்த திசை உள்ளது. அதன் அடிப்படையில் வீட்டில் பொருட்களை வைத்தால், வீட்டில் வசிக்கும் நபர்களுக்கு நல்ல ஆற்றலையும் கொடுக்கும் என்பது ஐதீகம்.
Also Read : பூஜையறையில் இந்த போட்டோவை மட்டும் வைக்கவே கூடாது..! ஏன் தெரியுமா?
வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் வாஸ்து படி வைத்திருந்தால், அது வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை பரப்பும். நம் வீட்டின் ஒவ்வொரு பொருளுக்கும் வாஸ்துவில் ஒரு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. எல்லாவற்றையும் சரியான திசையில் வைப்பதன் மூலம், வீட்டின் வாஸ்து சரியாக இருக்கும். ஒரு பொருளை தவறான திசையில் வைப்பதன் மூலம், வீட்டில் வாஸ்து தோஷங்கள் ஏற்படும். அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை சரியான திசையில் வைத்துள்ளோமா என எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா?
ஜோதிட சாஸ்திரப்படி ராகுவும், சனியும் வீட்டில் உள்ள அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். அவற்றை சரியான இடத்திலும், சரியான திசையிலும் வைக்காவிட்டால் அவை எதிர்மறை சக்தியை உருவாக்கும். அதுமட்டும் அல்ல, வீட்டில் வாஸ்து குறைபாடுகளையும் உருவாக்குகிறது. வீட்டில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்களை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதை இங்கே காணலாம்.
Also Read : சின்ன வயசுல புத்தகத்துல மயிலிறகை வைத்த அனுபவம் இருக்கா? ஆமான்னா இது உங்களுக்கானதுதான்!
AC வைக்க சரியான திசை எது?
வடமேற்கு திசை காற்றின் திசையாக கருதப்படுகிறது. அதாவது, வடக்கு மற்றும் மேற்கின் நடுவில் அமைந்துள்ள வடமேற்கு திசையானது வடமேற்கு கோணமாக கருதப்படுகிறது. இந்த திசையில் ஏர் கூலர் மற்றும் ஏசியை நிறுவுவதன் மூலம், அதன் ஆயுட்காலம் அதிகரிக்கிறது. இல்லையெனில், அதை வடக்கு திசையில் நிறுவலாம். அது வீட்டில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வாஸ்து படி, வீட்டின் மேற்கு திசையில் AC பொருத்தக்கூடாது. இவ்வாறு செய்வதால் வருமானத்தில் நிலையற்ற தன்மை ஏற்பட்டு வீட்டில் பணம் தங்காது.
வாட்டர் பியூரிஃபையர் வைக்க ஏற்ற திசை எது?
தற்போதையை காலத்தில் ஒவ்வொரு வீட்டு சமயலறையிலும் ஆர்.ஓ. எனப்படும் வாட்டர் பியூரிஃபையர் இருக்கும். வாட்டர் பியூரிஃபையரை சமையலறையின் வடக்கு சுவரில் வைக்க வேண்டும். இந்த திசை நீரின் திசை என அழைக்கப்படுகிறது. வீட்டின் வடக்குப் பகுதியில் தண்ணீர் சம்பந்தமான விஷயங்கள் இருப்பது சுபமாக கருதப்படுகிறது. கிழக்கு, வடகிழக்கு, அல்லது வடக்கு திசையிலும் வைக்கலாம். இது வீட்டில் வசிப்போரின் ஆரோக்கியம் மற்றும் பொருளாதார நிலையிலும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
TV வைக்க ஏற்ற திசை எது?
அனைவரது வீட்டு வரவேற்பு அறையிலும் டிவி இருக்கும். டிவி-யை மேற்கு திசையில் வைக்கவும். இதன் மூலம் டிவி பார்க்கும் போது உங்கள் முகம் கிழக்கு திசையை நோக்கி இருக்கும். இதனால், உங்களுக்குள் நேர்மறை உணர்வு ஏற்படும். சில காரணங்களால் இது சாத்தியமில்லை என்றால் வடக்கு சுவரில் டிவியை மாட்டலாம்.
ஃப்ரிட்ஜ் வைப்பதற்கு ஏற்ற திசை எது?
சந்திரன், சனி, ராகு மற்றும் புதன் ஆகிய நன்கு கிரகங்களும் குளிர்ச்சியுடன் தொடர்புடையது. ஜோதிட சாஸ்திரத்தின்படி காற்றின் திசை மற்றும் சந்திரனின் திசை வடமேற்காக கருதப்படுகிறது. எனவே, குளிரூட்டியை வடமேற்கு திசையில் வைக்கலாம். இல்லையெனில், கிழக்கு திசையிலும் குளிரூட்டியை வைக்கலாம்.
இந்த திசை மின் சாதனங்களுக்கு சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த திசையில் குளிர்சாதன பெட்டியை வைத்திருப்பதன் மூலம், அதன் ஆயுள் நீட்டிக்கப்படும். நீங்கள் பிரிட்ஜ் கதவைத் திறக்கும் போதெல்லாம், அதன் வாய் கிழக்கு நோக்கித் திறக்கும், இதன் காரணமாக அதில் வைக்கப்பட்டுள்ள பொருட்களில் நேர்மறையான தன்மை வருகிறது. சுவர்கள் மற்றும் வீட்டின் மூலைகளில் இருந்து குறைந்தபட்சம் ஒரு அடி தூரத்தில் பிரிட்ஜை வைக்க வேண்டும்.
முக்கியமாக ஃப்ரிட்ஜை வீட்டின் எந்த வாசலுக்கு முன்பும் வைக்கக்கூடாது. கதவுக்கு முன் ஃப்ரிட்ஜை வைக்கும் போது, அது நேர்மறை ஆற்றலின் ஓட்டத்தைத் தடுக்கும். அதேப்போல் மைக்ரோஓவன், ஸ்டவ் போன்றவற்றையும் ஃப்ரிட்ஜிற்கு அருகே வைக்கக்கூடாது. ஏனெனில் ஸ்டவ் நெருப்பு உறுப்பு, ஃப்ரிட்ஜ் நீர் உறுப்பு. இவை இரண்டையும் அருகருகே வைக்கும் போது, அது வாஸ்து குறைபாட்டை ஏற்படுத்தி, பல பிரச்சனைகளை வீட்டினுள் உருவாக்கும். குறிப்பாக ஃப்ரிட்ஜை வடகிழக்கு அல்லது தென்மேற்கு மூலையில் மட்டும் வைத்துவிடாதீர்கள்.
கம்ப்யூட்டர் வைக்கும் திசை
படுக்கை அறையில் தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் போன்றவைகளை வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் வடகிழக்கு பகுதியில் வைக்கலாம். எப்போதுமே கிழக்கு, வடக்கு திசை நோக்கி வேலை பார்ப்பது ஆர்வத்தை அதிகரிக்கும். ஆன்மிகம், ஜோதிடம் தொடர்புடைய துறையில் வேலை செய்பவர்கள் கம்ப்யூட்டரை தெற்கு திசையில் வைப்பது நல்லது. இந்த திசை மன நிம்மதியையும் தெளிவான சிந்தனையையும் தரும்.
சோபாவை எந்த திசையில் வைக்க வேண்டும்?
சோபாவை தெற்கு அல்லது மேற்கு திசையில் வைப்பது நல்லது. இதனால் வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும். அதோடு, வீட்டில் உள்ளோரின் வாழ்வில் வறுமை வராது மற்றும் லட்சுமி தேவியும் வீட்டில் நிலைத்திருப்பார்.
நுழைவு வாயில்
மகாலட்சுமி வரக்கூடிய பகுதி நுழைவு வாசல்தான். வீட்டின் நுழைவாயில் கதவானது வீட்டினுள் இருக்கும் மற்ற கதவுகளை விட மிகப்பெரியதாக இருக்க வேண்டும். இந்த நுழைவாயில் கதவானது கடிகார சுற்று முறையில் திறக்கும்படி அமைந்து இருக்க வேண்டும். நுழைவாயில் சுத்தமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நல்ல எண்ணங்கள் வீட்டிற்குள் வரும். குப்பை தொட்டிகள், உடைந்த நாற்காலிகள் அல்லது முக்காலிகள் போன்றவற்றினை வீட்டின் முன்கதவிற்கு அருகில் கண்டிப்பாக வைக்கக்கூடாது.
வீட்டின் நுழைவாயிலை சுற்றியுள்ள பகுதிகளில் எல்லாம் தேவையான அளவிற்கு வெளிச்சம் இருக்க வேண்டும். நுழைவாயில் பகுதியில் வாசலுக்கு எதிர்திசையில் கண்ணாடியினை வைக்கக்கூடாது அப்படியிருந்தால் அது நுழைவாயில் கதவின் பிம்பத்தினை அப்படியே பிரதிபலிக்கும், இதனால் வீட்டினுள் வரும் நல்ல ஆற்றலை அப்படியே திருப்பி அனுப்பி விடும்.
Image Source : Getty Image
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry