விஜய்யின் 48-வது பிறந்த நாளையொட்டி, தளபதி 66 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6.01-க்கு வெளியிடப்பட்டுள்ளது. டைட்டிலும், டேக் லைனும் விவாதத்திற்கு வித்திட்டுள்ளது.
தளபதி 66 படத்திற்கு வாரிசு என்று பெயர் வைத்துள்ளார்கள். இதையடுத்து சோஷியல் மீடியாவில் #Varisu, #வாரிசு என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகிறது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் தளபதி 66 ஃபர்ஸ்ட் லுக்கை ஷேர் செய்து படம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அடுத்ததாக இன்னொரு அப்டேட் இன்று நள்ளிரவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Varisu pic.twitter.com/b2bwNNAQP8
— Vijay (@actorvijay) June 21, 2022
பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருக்கும் வம்சியின் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். தளபதி 66 என்ற டைட்டிலில் இந்தப் படம் உருவாகி வந்தது. தெலுங்கில் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பு, ஜெயசுதா, ஷாம், யோகிபாபு உள்ளிட்டோர் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளார்கள். தளபதி 66 படம் குடும்பக்கதை மற்றும் ஃபீல் குட் மூவியாக உருவாக்கப்படுகிறது.
ஐதராபாத் மற்றும் சென்னையில் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தெலுங்கு சினிமாவில் மோஸ்ட் வான்ட்டடாக இருக்கும் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நீண்ட நாட்களுக்கு பின்னர் விஜய் படத்திற்கு நடன காட்சிகளை பிரபுதேவா வடிவமைக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது இந்தப் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் தலைப்பும், டேக் லைனும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அரசியல் பிரவேசத்துக்காக விஜய் காத்திருக்கும் நிலையில் ‘வாரிசு’ என படத்தின் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ‘THE BOSS RETURNS’ என டேக் லைன் வைத்துள்ளனர். இதன் மூலம் அரசியல் பிரவேசம் விரைவில் இருக்கும் என்று விஜய் கூறுகிறாரா? யாருடைய வாரிசாக அவர் களமிறங்கப்போகிறார் என்று அரசியல் வட்டாரத்தில் விவாதிக்கப்படுகிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry