சற்றுமுன்

இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து! விராஃபின் ஊசியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி!

இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து! விராஃபின் ஊசியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி!

இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் ஊசி மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. லேசான அறிகுறியால் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் இது வெற்றிகரமாக செயல்படுகிறது.

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தீவிரமடைந்துள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 263 பேர் உயிரந்தனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 86 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 13 கோடியே 54 லட்சத்து 78 ஆயிரத்து 420 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் சில மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, கொரோனா தடுப்பூசி தடுப்பாடு, ரெம்டெசிவிர் மருந்து, படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடுகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராபின் எனும் ஊசி மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த மருந்தை ஜைடஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விராஃபின், லேசான அறிகுறியால் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் வெற்றிகரமாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. ஆன்டிவைரலுடன்  சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகளில் 91.15 சதவீதம் பேர் 7 நாட்களுக்குள் ஆர்டிபி.சி.ஆர். சோதனையில்  கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டது.

நாடு முழுவதும் 20-25 மையங்களில் சோதனை நடத்தப்பட்டதில் விராஃபின் எடுத்து கொண்ட  நோயாளிகளுக்கு குறைவான துணை ஆக்ஸிஜன் தேவை என்பதைக் காட்டியது. கொரோனா வைரசுக்கு சிகிச்சையளிப்பதில் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருந்த சுவாசக் கோளாறு மற்றும் தோல்வியை இந்த  ஆன்டிவைரல் கட்டுப்படுத்த முடியும் என்பதை சோதனைகள் நிரூபிப்பதாக Zydus Cadila நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மருந்துக்கு இந்திய மருந்து அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. விராஃபின் மருந்தை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது ஊசிமருந்து தசை வழியாகவும் நரம்பு வழியாகவும் செலுத்தக் கூடியது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

CATEGORIES
error: Content is protected !!