
அயோத்தி ஸ்ரீ ராம் லல்லா கோயில் பிராண பிரதிஷ்டை அபிஜித் முஹூர்த்தத்தில் நடத்தப்பட்டது. இந்த அபிஜித் முஹூர்த்தத்திற்கு அப்படி என்ன விசேஷம் தெரியுமா? ஒரு தேசத்தின் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு ஏன் அந்த முஹூர்த்தத்தில் நடத்தப்பட வேண்டும்?
பிரம்ம முஹூர்த்தத்தை எப்படி நாம் நிர்மலமான மிகப் புனிதமான நேரமாகக் கருதுகிறோமோ, அதேபோல் அபிஜித் காலமும் மிகப் புனிதமான வெற்றிக்கான பூஜைகள் செய்திடும் காலம் ஆகும். ‘ஜித்’ என்றால் ஜபித்தல், அபிஜித் என்றால் மிகச் சிறப்போடு வெற்றி பெறுதல் எனப்படும். அதாவது வழிபட்டால் வெற்றி கிட்டும் காலம். காலையில் சூரிய உதய காலத்திலிருந்து ஆறு மணி நேரம் கழித்து வருகின்ற உச்சி வேளைதான் அபிஜித் காலம்.
Also Read : கழுத்தை நெறிக்கும் கடனில் இருந்து விடுபட வேண்டுமா? மைத்ரேய முகூர்த்த நேரத்துல ஒரு சின்ன தொகையை கொடுங்க!
பண்டைய இந்திய வேத நூல்கள் அபிஜித்தை எந்தவொரு மங்களகரமான செயலையும் செய்வதற்கு மிகவும் ஏற்ற நேரமாகக் குறிப்பிடுகின்றன. இதன் தெய்வம் பிரம்மா. 12.00 மணி நேரத்திற்கு 28 நிமிடங்களுக்கு முன்பும் 28 நிமிடங்களுக்கு பின்னும் உள்ள நேரம் (காலை மற்றும் பிற்பகல் இரண்டும்) அபிஜித் முஹூர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
அதேபோல உத்திராட நட்சத்திரமும் (இதன் கடைசி இரண்டு பாதமிருக்கும் நேரம்) திருவோணமும் (இதன் முதல் இரண்டு பாதமிருக்கும் நேரம்) இரண்டும் இணையும் காலம் அபிஜித் நட்சத்திர காலம் என்று சொல்லப்படுகிறது. வாழ்க்கையில் வெற்றி அடைய விரும்பும் அனைவரும் இந்த அபிஜித் நட்சத்திர காலத்தைப் பயன்படுத்தி வெற்றிக்கனியைப் பறிக்கலாம்.
ஜோதிடத்தின் ஆரம்ப காலத்தில் 28 நட்சத்திரங்கள் இருந்திருக்கின்றன. அதில் அபிஜித் நட்சத்திரமும் ஒன்றாம். பிற்பாடு நாழிகை கணக்குப் பிரகாரம் பார்த்ததில் ஒரு மாதத்தில் 27 நட்சத்திரங்கள் மட்டுமே இருக்கக்கூடிய சாத்தியக்கூறு இருந்ததால், நட்சத்திரக் கூட்டத்திலிருந்து அபிஜித் நட்சத்திரம் விடுபட்டுப் போனதாகத் தெரிகிறது. வம்சோத்திரி தேசா கணிதத்திற்குப் பிறகு நட்சத்திரங்கள் 27 நட்சத்திரங்களாக சுருக்கப்பட்டு விட்டன.

ஆனாலும், அபிஜித் கண்ணுக்குத் தெரியாத நட்சத்திரமாகவே போற்றப்படுகிறது. இதற்கு ஒரு சிறப்பு அந்தஸ்து கொடுத்து ஒரு நாளில் இருமுறை அபிஜித் காலம் என்பதாக நிர்ணயம் செய்யப்பட்டு அது வெற்றிக்குறிய காலமாகவும் குறிக்கப்பட்டது. புதுத் தொழிலை துவங்க இந்த நேரமானது மிக உன்னதக் காலமாகக் கூறப்படுகிறது. வாழ்வில் எந்த ஒரு செயலிலும் வெற்றிக்கொடி நாட்டிட அந்த செயலை அபிஜித் காலத்தில் செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது.
சிவனின் நட்சத்திரம்-திருவாதிரை, மகாவிஷ்ணுவின் நட்சத்திரம்- திருவோணம். பிரம்மாவின் நட்சத்திரம்-அபிஜித். அபிஜித் நட்சத்திரத்தின் அதிதேவதையாக ஸ்ரீ பிரம்மாவும், பிரத்யதி தேவதையாக ஸ்ரீ நரசிம்ம மூர்த்திப் பெருமாளும் விளங்குகின்றனர். உத்திராடம் நட்சத்திர மூன்று நான்காம் பாதங்கள், திருவோணம் நட்சத்திரம் 1, 2-ம் பாதகங்கள் வருகின்ற ஒரு கால கட்டத்திலேதான் நான்முகனாகிய பிரம்மதேவன் பூமியையும், ஈரேழு பதினான்கு லோகங்களையும் வென்றதாகப் புராணங்கள் சொல்கின்றன.
இந்த அபிஜித் காலத்தில்தான் பிரம்மதேவன் பூமியையும் ஈரேழு பதினான்கு லோகங்களையும் வெற்றி பெற்றதாகப் புராணங்கள் சொல்கின்றன. சிவபெருமான் இந்த அபிஜித் நேரத்தில்தான் முப்புரங்களையும் வென்று எதிரிகளை தோற்கடித்து ஓடச் செய்தார். இதிலிருந்து இறைவனுக்கே சோதனைகள் வந்தபோது அதிலிருந்து விடுபட்டு வெற்றி பெற அபிஜித் காலத்தை பயன்படுத்தினார்கள் என்று தெரிகிறது.
அபிஜித் உருவம் என்ன?
27 நட்சத்திரங்களுக்கும் உருவம் உள்ளதைப் போல இதற்கும் ஓர் வடிவம் இருக்கிறது. நான்கு தெருக்கள் சந்திக்கின்ற நாற்சந்தியே இதன் வடிவமாக உள்ளது. இதன் பொருள் ரிக், யஜீர், சாம, அதர்வண வேதங்களாகிய வாழ்வியல் தர்மத்தின் வழியே நாம் சென்று கொண்டிருந்தால் பார்போற்றும் நட்சத்திரங்களைப் போன்று வாழலாம் என்பதே இதன் ரகசியச் சொல் குறியீடு ஆகும். இதைத் தான் மனிதன் நான்கையும் தெரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்றார்கள்.

நமக்கு ஏதாவது குறிப்பிட்ட பணிகளில் தடை இருந்தால், அவை விலக அபிஜித் முஹூர்த்த கால பூஜைகள் வெற்றி பெற உதவுகின்றன. இந்த காலத்தில் ஜபிக்கப்படும் மங்கள மந்திரங்கள் இரட்டிப்பான பலன்களைத் தருகின்றன என்றும் சொல்லப்படுகிறது.
திருவோண நட்சத்திரத்தன்று அதிகாலையில் கேள்விக்குறி போன்ற தோற்றத்துடன் வானில் காணப்படும் நட்சத்திரமே அபிஜித் நட்சத்திரமாகும். இதனை சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்ளுதல் கடினமாக இருக்கும் என்று கூறுகின்றனர். ஆனால், இந்த நட்சத்திரத்தைப் பார்த்து விட்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றிதான்.
அபிஜித் முகூர்த்தம் வெற்றியைத் தரும் முகூர்த்தம் ஆகும். எல்லா நாட்களிலும் பிரம்ம முகூர்த்தம், அபிஜித் முகூர்த்தம் மற்றும் கோதூளி லக்னம் உண்டு. உச்சி காலம் 11.45 A.M to- 12.15 P.M அபிஜித் முகூர்த்தம், அஸ்தமான காலம் 5.45 P.M to- 6.15 P.M கோதூளி லக்னம். இந்த மூன்று முகூர்த்தங்களும் தோஷமற்ற முகூர்த்த காலங்கள் ஆகும். இந்த மூன்று வேளைகளுக்கும் நாள், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய பஞ்சாங்க தோஷம் கிடையாது. ராகுகாலம், எமகண்டம் போன்றவற்றை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
Also Read : நெற்றியில் குங்குமம் இடுவதால் இத்தனை பயன்களா? Medicinal benefits of Kumkum!
திடீரென்று அவசரமாக அதிமுக்கியமாக ஒரு செயலைச் செய்ய வேண்டும், ஆனால் அன்றைய நாள் அத்தனை விசேஷமாக இல்லை எனும்போது, அந்த நாளில் அபிஜித் முகூர்த்த நேரத்தில் செய்யலாம் என்றும், அவ்வாறு அபிஜித் முகூர்த்தத்தில் செய்கின்ற செயல் வெற்றி பெறும் என்றும், ஜோதிட விதிகள் உரைக்கின்றன. திங்கட்கிழமை அபிஜித் முகூர்த்த காலத்தில் நல்ல வேலை கிடைக்கவும், மேலதிகாரிகளின் தொந்தரவு தீரவும் வேண்டிக்கொள்ளலாம். அதே போல வீடு யோகம் அமையவும் கடன் தீரவும் செவ்வாய்கிழமை அபிஜித் முகூர்த்த காலத்தில் வேண்டிக்கொள்ளலாம்.
குழந்தை பாக்கியம் பெறவும், இழந்ததை மீட்கவும் புதன்கிழமை வேண்டிக்கொள்ளலாம். வியாழக்கிழமை அபிஜித் முகூர்த்த காலத்தில் வேண்டினால் வெளிநாடு செல்லும் யோகமும் கல்வியில் மேன்மையும் கிடைக்கும். திருமணம் நடைபெறவும் விரும்பியவரை திருமணம் செய்யவும் வெள்ளிக்கிழமைகளில் அபிஜித் முகூர்த்த காலத்தில் வேண்டிக்கொள்ளலாம். சனிக்கிழமை வேண்டினால் வம்பு வழக்குகளில் இருந்து வெற்றி கிடைக்கும். ஞாயிறு அபிஜித் முகூர்த்த வழிபாடு வினைகள் அகலவும் உடல் நலம் மேம்படவும் வேண்டிக்கொள்ளலாம். வாழ்வில் உள்ள அனைத்து விதமான துன்பங்களும் நீங்குவதற்கும் அபிஜித் முகூர்த்த நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் கிடைக்கும்.
Also Read : மன அழுத்தத்தை ஏற்படுத்தும் இந்த ஹார்மோன் பற்றி தெரியுமா? அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!
அபிஜித் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டம் மிக்கவர்கள். அன்பும், கண்டிப்பும் மிக்கவர். தலைமை பண்பும் சேவை மனமும் கொண்டவர்கள். தொழில் கெளரவம் மிக்கவர்கள், செய்யும் தொழில் மீது பற்றுக்கொண்டவர்கள். சுகமும் மகிழ்ச்சியும் மிக்கவர்கள்.
தாய், தந்தை இருவருக்கும் பிடித்த பிள்ளை. தாய், தந்தை இருவரின் குணமும் ஒருங்கே உள்ளவர். தாய், தந்தை இருவருவரின் சாயலும் உள்ளவர். கல்வி விசயத்தில் கவனம் தேவை, தடைபட வாய்ப்பு உண்டு. தொழிற்கல்வி சிறப்பு தரும். தர்ம குணம் உள்ளவர்கள். மருத்துவ துறையில் பணிபுரியும் வாய்ப்பு உண்டு. தொடர் முயர்ச்சியாளர். அறிவாளிகளை உடன் வைத்து இருப்பவர். திருமணத்திற்கு பிறகு தந்தை அன்பு தடைபடும் வாய்ப்பு உண்டு. ஆய்வு மனபன்மை உள்ளவர். சுய தொழில் நன்மை தரும். அதிக நட்பு வட்டாரம் இருக்கும். ஆன்மீக பற்றும் தன்னம்பிக்கையும் ஒருங்கே கொண்டவர்கள்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry