கழுத்தை நெறிக்கும் கடனில் இருந்து விடுபட வேண்டுமா? மைத்ரேய முகூர்த்த நேரத்துல ஒரு சின்ன தொகையை கொடுங்க!

0
97
In Hindu astrology, Maithreya Muhurtham is considered an auspicious time for overcoming financial obstacles, including debt. This article explores the concept of Maitreya Muhurtham and how it can be leveraged to improve financial stability and achieve debt freedom.

கடன் சீக்கிரம் அடைய சித்தர்களால் நமக்கு அருளப்பட்ட நேரம்தான் மைத்ரேய முகூர்த்த நேரம். வாங்கிய கடன் தொகையிலிருந்து ஒரு சிறு தொகையை இந்த மைத்ர முகூர்த்தம் அல்லது மைத்ரேய முகூர்த்த நேரத்தில் செலுத்தினால் நம்முடைய கடன் சுமையானது படிப்படியாக சீக்கிரம் குறையும் என்பது நம்பிக்கை. எளிதில் தீர்க்க இயலாத மிகப்பெரும் கடன் சுமையை குறைக்க மைத்ர முகூர்த்தம் கைகொடுக்கும் என்று ‘காலபிரகாசிகை’ என்னும் ஜோதிட மூல நூலில் கூறப்பட்டுள்ளது.

கடனை சீக்கிரம் அடைப்பதற்கு நிறைய பரிகாரங்கள் இருக்கிறது. அதில் ஒரு சக்தி வாய்ந்த பரிகாரம் தான் இந்த மைத்ரேய முகூர்த்தம். இது ஒரு மாதத்தில் இரண்டு நாளோ அல்லது மூன்று நாளோ வரும். இந்த ஜனவரி மாதம் 2 நாட்கள் மைத்திரேய முகூர்த்த நேரம் கிடைத்திருக்கிறது. ஒன்று ஜனவரி 8ஆம் தேதி. மற்றொன்று வரும் 25ம் தேதி.

Also Read : கடனை அடைக்க முடியாமல் தவிக்கிறீங்களா? எளிமையான சொல்யூஷன்! நிம்மதிக்கு கேரன்ட்டி!

ஜனவரி 25ஆம் தேதி மதியம் 1:38 மணி முதல் 2:44 மணி வரை மைத்ரேய முகூர்த்தம் இருக்கிறது. இந்த நேரம் வங்கிகளில் பணத்தை செலுத்துவதற்கு உகந்ததாகும். ஆகவே இந்த நேரத்தை தவறவிடாதீர்கள். சில சமயம் அதிகாலை வேளையில், சில சமயம் நள்ளிரவில் கூட இந்த மைத்ரேய முகூர்த்த நேரம் ஆனது நமக்கு வரும்.

வங்கியில் கடன் வாங்கி இருந்தாலும் சரி, அல்லது யாரிடமாவது கைமாத்தாக பணம் வாங்கி இருந்தாலும் சரி, இந்த நேரத்தில் பணத்தை திருப்பிக் கொடுக்கலாம். நேரடியாக கொடுக்க இயலவில்லை என்றால் ஜி.பே, ஃபோன் பே மூலமாக கூட பணத்தை அனுப்பி வைக்கலாம். அந்த நேரத்தில் வட்டி தொகையை கூட நீங்கள் திருப்பி செலுத்தலாம், தவறு கிடையாது. நிறைய கடன் இருக்கிறது, அவ்வளவு தொகை உங்கள் கையில் இன்று இல்லை. என்ன செய்வது?

ஒரு வெள்ளை கவரில் யாரிடம் கடன் வாங்கினீர்களோ, அந்த நபரின் பெயரை எழுதி விடுங்கள், அல்லது அந்த வங்கியின் பெயரை எழுதிவிட்டு அந்த கவருக்குள் உங்கள் கையில் இருக்கும் பணத்தை போட்டு வைக்கவும். 500 ரூபாயாக இருந்தாலும் சரி, அந்த பெரிய கடனை திருப்பி செலுத்துவதற்காக இந்த ஒரு சின்ன தொகையை எடுத்து வைக்கிறீர்கள்.

மிக மிக முக்கியமான விஷயம் இந்த 500 ரூபாயை எடுத்து வேறு ஏதாவது ஒரு செலவிற்கு, அவசர தேவைக்கு செலவு செய்து விட்டு, மீண்டும் புது 500 ரூபாயை மாற்றி வைக்க கூடாது. இந்த 500 ரூபாயை கடன் காரர்களுக்குத்தான் திருப்பிக் கொடுக்க வேண்டும். எந்த கடனை திருப்பி அடைக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் இந்த பணத்தை எடுத்து வைத்தீர்களோ அந்த கடனை திருப்பிக் கொடுக்கும் போது இந்த 500 ரூபாயையும் சேர்த்து கடனை திருப்பித் தர வேண்டும்.

தவணை முறையில் நீங்கள் கடனை திருப்பி செலுத்துபவர்களாக இருந்தால் மைத்ர முகூர்த்தம் அல்லது மைத்ரேய முகூர்த்த நேரத்தில் அந்த தவணைத் தொகையை திருப்பிக் கொடுத்தால் ரொம்ப ரொம்ப நல்லது. வாகனக் கடன், வீட்டுக்கடன், தனிநபர் கடன், கிரடிட் கார்டு கடன் போன்றவைகளுக்கான தவணைகளை ஏற்கனவே கூறியடி நெட் பேங்க்கிங், ஃபோன் பே, ஜி.பே, மூலம் குறிப்பிட்ட அந்த நேரத்தில் செலுத்தலாம். ஜனவரி 25ஆம் தேதி மதியம் 1:38 மணி முதல் 2:44 மணியை ரிமைண்டர்ல போட்டு வைத்துக்கொள்ளுங்கள். அற்புதம் வாய்ந்த இந்த நேரத்தை தவற விடாதீர்கள். குலதெய்வத்தை வேண்டி இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நிச்சயம் உங்களுக்கு நல்லதே நடக்கும்.

Image Source : Getty Image

Disclaimer: This information does not constitute financial or legal advice.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry