நாட்டின் 18% செல்வத்தை கட்டுப்படுத்தும் 2000 குடும்பங்கள்! 1.8% மட்டுமே வரி செலுத்தும் அதிர்ச்சித் தகவல் அம்பலம்!

0
50
Shantanu Deshpande, founder and CEO of Bombay Shaving Company, has brought attention to a significant inequality in India’s economic structure. In a recent LinkedIn post, Deshpande revealed that just 2,000 families control 18% of the country’s wealth yet contribute only 1.8% of total taxes, a situation he described as “INSANE.” Pic : Gautam Adani & Mukesh Ambani.

பாம்பே ஷேவிங் கம்பெனியின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சாந்தனு தேஷ்பாண்டே, இந்தியாவின் பொருளாதாரக் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க சமத்துவமின்மை நிலவுவதை அம்பலப்படுத்தி உள்ளார்.

இந்தியாவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இது பொருளாதாரச் சமத்துவமின்மை எனக் குறிப்பிடப்பட்டுகிறது. அதாவது, பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள்; ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிறார்கள்.

மூன்றாவது முறையாக ஆட்சியில் இருக்கும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில், இந்த சதவிகிதம் வேகமாக அதிகரித்து வருகிறது என்றக் குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிரபல பாம்பே ஷேவிங் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சாந்தனு தேஷ்பாண்டே, இந்தியாவின் பொருளாதார கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க சமத்துவமின்மை குறித்த விவாதத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறார்.

Shantanu Deshpande, Founder of Bombay Shaving Company.

இது தொடர்பாக அவர் லிங்க்ட்இன் பதிவிட்டுள்ளதாவது: “நாட்டின் செல்வத்தில் 18 சதவிகிதத்தை வெறும் 2,000 குடும்பங்கள் மட்டுமே கட்டுப்படுத்துகின்றன. ஆனால் மொத்த வரிகளாக அவர்களிடமிருந்து 1.8 சதவிகிதம் மட்டுமே நாட்டுக்கு கிடைக்கிறது. இது பைத்தியக்காரத்தனமான சமத்துவமின்மை.

வெற்றிகரமான தொழில்முனைவோர் பலர், ‘கடினமாக உழைத்து மேலே வாருங்கள்’ என்று ஊக்குவிக்கும் அதே வேளையில், பெரும்பாலான இந்தியர்களின் யதார்த்தம் முற்றிலும் வேறாக இருக்கிறது. இந்தியாவில் பெரும்பாலானவர்கள் ஆர்வத்தினாலோ அல்லது விருப்பத்தினாலோ வேலை செய்வதில்லை. அவர்களுக்கு நிதிப் பாதுகாப்பு இல்லாததால், தங்கள் குடும்பங்களை ஆதரிக்க வேண்டிய அவசியத்தால்தான் வேலை செய்கிறார்கள். பெரும்பாலான மக்கள் தங்கள் வேலைகளை விரும்புவதில்லை என்பது எனக்குத் தெரியவந்த சோகமான, தாமதமான செய்திகளில் ஒன்று.

Shiv Nadar – Founder of HCL technologies and Shiv Nadar Foundation, Roshni Nadar Malhotra – Chairperson, HCL Technologies.
Jindal Group, whose interests include steel, power, cement and infrastructure, is chaired by Savitri Jindal, widow of founder Om Prakash Jindal.

இந்தியாவில் உள்ள அனைவருக்கும், உணவுக்கான பணமும், அவர்களின் தற்போதைய வேலைகள் வழங்கும் நிதிப் பாதுகாப்பும் வழங்கப்பட்டால், 99% பேர் அடுத்த நாள் வேலைக்கு வரமாட்டார்கள். இந்த அதிருப்தி பல்வேறு துறைகளில் பரவியுள்ளது. நீல காலர் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் முதல் தொழிற்சாலை தொழிலாளர்கள், காப்பீட்டு முகவர்கள், வங்கியாளர்கள், சிறு வணிக உரிமையாளர்கள், பொழுதுபோக்குத் துறையில் இருப்பவர்கள் வரை அனைவருக்கும் அடிப்படை பிரச்னை ஒன்றுதான். உண்மையான ஆர்வத்தைவிட அவர்களின் பொருளாதார நிர்பந்தம்தான் அவர்களை சோர்வாக்குகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Billionaire Dilip Shanghvi, Managing Director of Sun Pharmaceutical Industries Ltd., Asias largest generic drugmaker.
Chairman and Managing Director of Sun Group Kalanithi Maran.

சாந்தனு தேஷ்பாண்டேவின் கருத்து, இந்தியாவின் பொருளாதாரக் கட்டமைப்பில் ஆழமாக வேரூன்றியிருக்கும் ஏற்றத்தாழ்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஒரு சிறிய பகுதியான குடும்பங்கள் குறிப்பிடத்தக்க செல்வத்தை கட்டுப்படுத்தும் அதேநேரத்தில் குறைந்த வரிப் பங்களிப்பை வழங்குவது நியாயம்தானா? என்ற கேள்வி எழுகிறது. Forbes இதழ் வெளியிட்டபடி, கடந்த ஆண்டின் டாப் ஐந்து பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, சாவித்திரி ஜிண்டால், ஷிவ் நாடார், திலிப் ஷாங்கவி. இந்திய பணக்காரர்கள் வரிசையில், ஜோஹோ குழுமத்தின் ஸ்ரீதர் வேம்பு குடும்பம் 51-வது இடத்திலும், டிவிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த வேணு ஸ்ரீனிவாசன் 55-வது இடத்திலும், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் 83-வது இடத்திலும் உள்ளனர். 

Image Source : Getty Image

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry