நம் உடலில் முக்கிய உறுப்புகளில் ஒன்று நுரையிரல். மாசு நிறைந்த காற்று, வாகனப் புகை, சிகரெட் புகையும் நுரையீரலில் அழுக்காகப் படியும். நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், சீரான உடற்பயிற்சி செய்வது, புகைப்பழக்கத்தை கைவிடுவது மட்டுமின்றி உணவு முறையில் குறிப்பிட்ட சில உணவுகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதன் மூலம் உங்கள் நுரையீரலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுவதோடு, நுரையீரல் செயல்பாடும் அதிகரிக்கும். நுரையீரலை சுத்தப்படுத்தும் உணவுகளை தெரிந்துகொள்வோம்.
Also Read : நுரையீரல் புற்றுநோயை கண்டறிவது சிரமம்! தம் அடிக்கறவங்க உடனடியா CT SCAN செய்து பாருங்க!
சிலுவை காய்கறிகள் : முட்டைகோஸ் குடும்பத்தைச் சேர்ந்த இந்தக் காய்கறிகளின் இதழ்கள், சிலுவை போன்ற அமைப்பில், ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கடுக்காக வளர்வதால் இந்தப் பெயர். ப்ரோக்கோலி, காலிஃபிளவர், கிளைக்கோசு, காலே போன்ற காய்கறிகளை சிலுவை காய்கறிகள் என அழைக்கப்படுகின்றன. இந்தக் காய்கறிகளில் அதிகளவு ஆண்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளதோடு நுரையீரலின் நச்சுக்களை வெளியேற்றும் சல்ஃபர் கலவைகளும் அதிகமாக உள்ளது. இந்தக் காய்கறிகளில் உள்ள குளுகொசினேட்ஸ் (Glucosinolates) என்ற சத்து, புற்றுநோயை உருவாக்கும் கார்சினோஜன் என்ற காரணியை அழித்து, செல்களுக்குப் பாதுகாப்பைத் தரும். இவற்றை டயட்டில் சேர்த்துக் கொண்டால் உடல் வீக்கமும் குறையும்.
கார்டீனாய்ட்ஸ் (Cartenoids) : இது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் ஓர் சத்து. இதுவும் ஆன்டிஆக்ஸிடன்ட்தான். நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கக்கூடியது. இந்த சத்து ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் நிறப் பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும். சக்கரவள்ளிக் கிழங்கு, கேரட், பரங்கிக்காய், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்ரிகாட் ஆகியவற்றில் அதிக அளவில் கார்டீனாய்ட் சத்து உள்ளது. பீட்டாகரோட்டினும், வைட்டமின் ஏ-வும் சேர்ந்து இருப்பதால் கேரட் நுரையீரலின் நண்பன்.
ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் : நுரையீரலுக்கு மட்டும் அல்ல. உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நன்மைகளைச் செய்யக்கூடிய சத்து இது. நுரையீரல் செயல்பாட்டைச் சீராக்க உதவும். நுரையீரலில் ஏற்படும் வீக்கங்கள் போன்றவற்றைக் குறைப்பதற்கு உதவும். அனைத்துவகை மீன்கள், பாதாம், வால்நட் போன்ற நட்ஸ், பிளாக்ஸ் மற்றும் வெள்ளரி விதைகள் போன்றவற்றில் ஒமேகா 3 சத்து நிறைந்துள்ளது.
இஞ்சி : பூமிக்கு அடியில் விளையும் இந்தக் கிழங்கு, ஒர் பவுர்ஃபுல் ஆன்டிஆக்ஸிடன்ட். நுரையீரலில் படிந்திருக்கும் கழிவுகளை அகற்றும். நுரையீரல் வீக்கத்தைக் குறைக்கும். நுரையீரலில் இருக்கும் மியூகஸ் எனும் திரவத்தைக் குறைக்கும் தன்மை இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் சத்தில் உள்ளது. ஆஸ்துமா நோயாளிகள் சுலபமாக சுவாசிக்க இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சுவாசப் பாதையைச் சீராக்கும். டீ, ஜூஸ் போன்றவற்றில் சிறிதளவு இஞ்சியை சேர்த்துக்கொள்ளலாம். இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்பு இருப்பதால், அது நுரையீரலில் உள்ள கழிவுகளை முற்றிலும் வெளியேற்றி ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். இதனால் சுவாசப் பாதைத் தொற்று, ஆஸ்துமா, மூச்சுக் குழாய் அழற்சி தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
Also Read : கொய்யா பழங்களைச் சாப்பிடுவதால் கிடைக்கும் வியக்கத்தகு நன்மைகள்! கொய்யா பழத்தை எப்போது சாப்பிட வேண்டும்?
மஞ்சள் : மஞ்சளில் உள்ள குர்க்குமின் என்ற ரசாயனம் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டதாகும். இது நம் நுரையீரல் திசுக்களை பாதுகாத்து, நுரையீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.
க்ரீன் டீ : கேட்டசின் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் க்ரீன் டீயில் அதிகளவு உள்ளது. க்ரீன் டீயை பருகுவதால் நுரையீரலில் உள்ள வீக்கம் குறைவதோடு சுவாச செயல்பாடுகளும் மேம்படும். மேலும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் ஏற்படாமல் தடுக்கவும் க்ரீன் டீ உதவுகிறது.
பெர்ரி பழங்கள் : ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பழங்களில் ஆந்தோசைனின் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் அதிகளவு உள்ளது. இந்தப் பழங்கள் நம் நுரையீரல் திசுக்களில் ஏற்படும் பாதிப்புகளை குறைத்து நச்சுக்களை வெளியேற்றுகிறது.
சிட்ரஸ் பழங்கள், வைட்டமின் சி : ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் அதிகளவு வைட்டமின் சி உள்ளது. இவை நம் நுரையீரலில் உள்ள வீக்கத்தை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. உடலில் ஆக்சிஜனை முழுமையாகக் கடத்திச் செல்ல வைட்டமின் சி உதவும். நுரையீரலின் சீரான இயக்கத்துக்கு உதவும். ஆஸ்துமா, பிரான்சிடிஸ் போன்ற பிரச்னைகளின் தீவிரத்தைக் குறைக்கும். நெஞ்சக நோய் தொடர்பான பிரச்னைகளின் வீரியம் குறையும். கொய்யா, ஆரஞ்சு, கிவி, எலுமிச்சை, சாத்துகுடி, மாதுளை, பைன் ஆப்பிள் போன்றவை நுரையீரலின் பாடிகாட்ஸ்.
மாதுளை : புனிகாலஜின்ஸ்(Punicalagin) என்ற சக்திவாய்ந்த ஆண்டி ஆக்ஸிடெண்ட் மாதுளை பழத்தில் அதிகளவு உள்ளது. இவை நுரையீரல் திசுக்களில் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் ஏற்படுவதை தடுத்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
பசை இலை காய்கறிகள் : கீரைகளைத்தான் பச்சை இலைக் காய்கறிகள் எனச் சொல்வார்கள். கீரை, காலே, பெரும்பாளைக் கீரை (ஸ்விஸ் சார்டு) போன்ற பச்சை இலை காய்கறிகளில், நுரையீரலில் உள்ள கழிவுகளை அகற்ற உதவும் க்ளோரோபில் அதிகமாக உள்ளது.
பூண்டு : இது ஒரு மூலிகைப் பொக்கிஷம். அலிசின் என்ற அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் பூண்டில் அதிகளவு உள்ளது. இவை நம் சுவாச அமைப்பை சுத்தப்படுத்தி நுரையீரல் தொற்று ஏற்படுவதை குறைக்கிறது. உடலில் இயற்கையாக எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும். கெட்ட கொழுப்பைக் கரைத்து, ஆரோக்கியமாக வைக்கும். உணவில் அவ்வப்போது சிறிது பூண்டைச் சேர்த்துவர, நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். இதில் உள்ள அலிசின் (Allicin) சத்து, ஒரு நேச்சுரல் ஆன்டிபயாடிக். பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுகளிலிருந்து நுரையீரலைக் காக்கும்.
பிஸ்தா, வரமிளகாய் மற்றும் வெங்காயம் ஆகியவையும் நுரையீரலை பாதுகாக்கும் உணவுகள் ஆகும். நுரையீரல் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால், சோடா மற்றும் மதுபானத்தை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக வெறும் நீரை மட்டுமே பருக வேண்டும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry