
சில நேரங்களில் சின்னச் சின்ன விஷயங்களின் மூலம் கூட அதிர்ஷ்டம் நம்மைத் தேடி வரும். உங்கள் படுக்கையறையில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்பதையும், நேர்மறை ஆற்றலை அதிகரித்து தம்பதியரிடையே நெருக்கத்தைக் கூட்ட சரியான திசையில் படுக்கையை அமைப்பது போன்ற பல வாஸ்து டிப்ஸ்களையும் தெரிந்துகொள்வோம்.
வாஸ்து சாஸ்திர விதிகளை உறுதியாக நம்பாதவர்கள் கூட வாஸ்து சாஸ்திரத்தைப் பயன்படுத்தி கட்டப்படும் வீடு, அந்த இடம் முழுவதையும் சுற்றி ஏற்படும் நன்மைகளை புரிந்துகொண்ட பிறகு, வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்ற முனைகிறார்கள். வாஸ்து சாஸ்திரம் குடும்ப உறவுகளை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிலும் மிக முக்கியமாக தம்பதியர்கள் இடையே உறவுகள் சீரடைய உதவியாக உள்ளது.
Also Read : வாஸ்துப்படி வீட்டில் டிவி, ஏசி, ஃப்ரிட்ஜ் வைப்பதற்கு சரியான திசை எது? Vasthu for Electronics Appliances!
வாஸ்து முறைப்பபடி சரியான திசையில் படுக்கையும், சரியான தூங்கும் திசையும் அமைப்பதன் மூலம் ஒருவர் நேர்மறை ஆற்றலை உணர முடியும். இதனால் படுக்கையறையை வடிவமைக்கும்போது படுக்கையின் திசை, அறைக்கு அடிக்கக்கூடிய பெயின்டின் வண்ணம் ஆகியவை வாஸ்து முறைப்படி அமைக்கபட்டுள்ளதா என சரிபார்க்க வேண்டும். அத்துடன், வாஸ்து விதிகளை பின்பற்றி தூங்கும் திசையை நிர்ணயிக்க வேண்டும்.
வீட்டில் நமது தனிப்பட்ட விஷயங்களுக்கான மிக முக்கியமான அறையாகவே படுக்கையறை உள்ளது. அந்த இடத்தை அமைதி, ஓய்வு மற்றும் புத்துணர்ச்சி தரக்கூடிய இடமாக வாஸ்து மூலம் மாற்றலாம். பழமை மிக்க வாஸ்து சாஸ்திர விதிகளின்படி தூங்குவதற்கு ஏற்ற வாஸ்து திசையாக தெற்கு திசையே உள்ளது. அதாவது, நீங்கள் தூங்கும்போது உங்கள் தலை தெற்கு திசையை நோக்கியவாரும், கால்பகுதி வடக்கு திசையை நோக்கியபடியும் இருக்க வேண்டும்.
கட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும்?
வாஸ்து முறைப்படி வீட்டில் படுக்கையைறையை தென்மேற்கு மூலையில் அமைப்பது சிறந்தது. மேலும், தூங்கும்போது தலை, தெற்கு அல்லது கிழக்கு திசை நோக்கியவாறும், கால்கள் வடக்கு அல்லது மேற்கு திசையை நோக்கியவாறும் படுக்கை அமைப்பது சிறந்தது.
வாஸ்து முறைப்படி மாஸ்டர் படுக்கையறையில் கட்டில் வைக்கபட்டுள்ள இடம் மிகவும் முக்கியமானது. ஏனெனில், அது குடும்ப ஆரோக்கியத்துக்கும் ஆழ்ந்த உறக்கத்துக்கும் அடிப்படையாக உள்ளது. வாஸ்து முறைப்படி, மாஸ்டர் படுக்கையறையில் உறங்க ஏதுவான திசை தெற்கு அல்லது மேற்கு ஆகும். தெற்கு அல்லது மேற்கு திசையில் உள்ள சுவருக்கு எதிராக கட்டில் வைக்கப்பட வேண்டும். அப்போதுதான் கால் பகுதி வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கியவாறு இருக்கும்.
விருந்தினர் அறையில், தூங்கும்போது தலை மேற்கு திசையை நோக்கி இருக்குமாறு படுக்கையை அமைக்க வேண்டும். மேலும், மரத்தால் ஆன படுக்கை / கட்டில்தான் சிறந்தது. மெட்டல் படுக்கைகள் / கட்டில்கள் எதிர்மறை ஆற்றலை உருவாக்கும்.
படுக்கையறையின் மூலையில் படுக்கையை அமைப்பதை தவிர்க்கலாம். ஏனெனில், இது நேர்மறை ஆற்றலை அறை முழுவதும் பரவாமல் தடுக்கிறது. வாஸ்து முறைப்படி படுக்கை அறையில் படுக்கையை சுவற்றின் மையப் பகுதியில் அமைக்கலாம். இவ்வாறு அமைக்கும்போது அறையைச் சுற்றிலும் நேர்மறை ஆற்றல் பரவ போதுமான இடம் இருக்கும்.
தம்பதியருக்கான படுக்கையறை
தம்பதிகள் வீட்டின் உரிமையாளராக இருந்தால், வாஸ்து முறைப்படி அவர்கள் தென்மேற்கு திசையில் அமைக்கபட்ட படுக்கையறையில் உறங்கலாம். புதுமணத் தம்பதியராக இருந்தால் வாஸ்து முறைப்படி அவர்கள் வடமேற்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ள படுக்கை அறையைத் தேர்ந்தெடுக்கலாம்.
வாஸ்து விதிகளின் அடிப்படையில் வடகிழக்கு திசையில் அமைந்துள்ள படுக்கையறையை பயன்படுத்தக் கூடாது. இது, பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். மாஸ்டர் படுக்கையறையில் படுக்கையின் நிலையானது வாஸ்து முறைப்படி தெற்கு அல்லது தென்மேற்கு திசையில் அமைக்கலாம். ஆனால், இந்த இரண்டு திசைகளுக்கும் இடையில் அமைக்க கூடாது. ஏனெனில், இது உறவு நிலைகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
சீரான உறவு நிலைக்கு கணவனது இடது பக்கமே மனைவி உறங்க வேண்டும். மேலும், படுக்கையறையின் வடகிழக்கு திசை அலங்கோலமாக இருக்கக் கூடாது. படுக்கையறையில் ஷோ பீஸ் அல்லது கலைப் பொருட்களை வைக்க விரும்பினால், ஜோடி அல்லாத பொருட்கள், அதாவது ஒற்றை விலங்கு அல்லது ஒரே ஒரு பறவை போன்ற கலைப் பொருட்களை வைக்க வேண்டாம். அவற்றுக்கு பதிலாக ஜோடி புறாக்கள் அல்லது லஷ்மி தேவி நாராயணர் கடவுள் தம்பதிகள் போன்று ஜோடிகளாக உள்ள கலைப் பொருட்களை வைக்கலாம்.
படுக்கையறையில் அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டுமெனில், வாஸ்து முறைப்படி போர்க் காட்சிகள், அரக்கர்கள், ஆந்தைகள், பருந்துகள், கழுகுகள் ஆகியவற்றை சித்தரிக்கும் படங்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக மான்கள், அன்னப் பறவைகள், கிளிகள் ஆகியவை அடங்கிய படங்களை வைக்கலாம்.
மேலும், நல்ல நினைவுகளை நினைவூட்டும் வகையிலான படங்கள், குடும்பத்துடன் உல்லாசப் பயணங்களில் எடுத்த படங்கள், நினைவுப் பரிசுப் பொருட்கள், நிக்-நாக்ஸ் ஆகியவற்றை வைப்பதன் மூலம் அந்த நல்ல நேரங்களை நினைவூட்டுவதாக அமையும். வாத்துகள், லவ் பேர்ட்ஸ், புறாக்கள், ராதாகிருஷ்ணன் படம் போன்றவற்றை வைக்கலாம். புதுமணத் தம்பதிகளின் படுக்கையறையில் மார்பிள் தரையை அமைப்பதை தவிர்க்கலாம்.
வாஸ்துவும் கருத்தரித்தலும்
தம்பதியர்கள் வடகிழக்கு திசையை நோக்கிய படுக்கையறையில் உறங்கினால், வாஸ்து முறைப்படி அவர்கள் கருத்தரிப்பது கடினமாக இருக்கும் அல்லது தொடர்ந்து அதே அறையை பயன்படுத்தினால் கருச்சிதைவும் ஏற்படலாம். மேலும், பெண் கருவுற்ற பின் தம்பதியர்கள் தென்கிழக்கு திசையை நோக்கி உள்ள படுக்கையறையில் வசிக்கக் கூடாது என்றும் நம்பப்படுகிறது. ஏனெனில் இந்த அறை வெப்பத்தை அதிகளவு ஈர்க்கக் கூடியதாக இருக்கும்.
கட்டிலின் எந்தப் பக்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்?
கட்டிலில் ஒருவர் படுப்பதற்குத் தேர்ந்தெடுக்கும் பக்கத்தை வைத்தே அவரது ஆளுமையையும் குணாதிசயத்தையும் அறிந்துகொள்ள முடியும். கட்டிலின் வலப்புறத்தில் படுப்பவர்களைவிட இடது பக்கத்தில் படுப்பவர்களே அதிக மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. ஃபெங் சுய் முறையைப் பொறுத்தவரை, கட்டிலின் இடது பக்கத்தில் படுப்பதையே பரிந்துரைக்கிறது. இதன்மூலம் சொத்து, அதிகாரம் மற்றும் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்கிறது அந்த வாஸ்து முறை. கிளாஸ்ட்ரோபோபிக் போன்ற பய உணர்வு கொண்டவர்கள் சுவர் அருகே படுப்பதைத் தவிரக்கலாம். மாறாக, அவர்கள் ஜன்னல்களை ஒட்டி படுப்பது நல்லது.
Image Source : Getty Image. Input Kalki.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry