பல கோடி மக்கள் பயன்படுத்தும் செயலியாக இருந்து வரும் வாட்ஸ்அப்பில் தரம் குறையாத போட்டோக்களை அனுப்ப முடியாதது பெரும் குறையாகவே இருந்து வந்தது.
இதற்காகவே டெலிகிராம் உள்ளிட்ட பல செயலிகளை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. ‘Document’ ஆக வாட்ஸ்அப்பில் படங்களைத் தரம் குறையாமல் அனுப்பலாம் என்றாலும், அது என்ன படம் என்பதை அறிய ஒவ்வொன்றையும் டவுன்லோடு செய்துதான் பார்க்கவேண்டும்.
Also Read : சுவையான நஞ்சா அஜினோமோட்டோ? அதென்ன ‘சைனீல் ரெஸ்டாரன்ட் சின்ட்ரோம்’? THE HARMFUL EFFECTS OF AJINOMOTO!
இந்நிலையில் நீண்ட நாள்களாக இருந்து வந்த இந்த ‘HD படப்பகிர்வு’ குறையைச் சரிசெய்ய புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ்அப் வெளியிட்டுள்ளது. இதன்படி குறிப்பிட்ட வாட்ஸ் அப் கணக்கிற்குள் சென்றதும், மேலே HD என்று தெரியும் பட்டனை கிளிக் செய்து ஃபோட்டோக்களை அனுப்பலாம். தற்போதைக்கு WhatsApp beta for iOS 23.11.0.76, WhatsApp beta for Android 2.23.12.13 இந்த அப்டேட்டில்தான் தரம்குறையாத படங்களை அனுப்ப முடியும். இது பீட்டா வெர்ஷன் என்பதால், பொது பயன்பாட்டிற்கு வர சில வாரங்கள் ஆகலாம்.
இதன் மூலம் இனி ‘HD – 2268×4032’ ரிசல்யூசனில் தரம் குறையாத ஃபோட்டோக்களை அனுப்பலாம். இந்தப் புதிய அப்டேட் இப்போதைக்கு ‘IOS’ மற்றும் ‘ஆண்ட்ராய்டு பீட்டா’ வெர்ஷனில் மட்டுமே அறிமுகமாகியுள்ளது. முழுமையான பரிசோதனைக்குப் பிறகு அனைவரும் பயன்படுத்தும் வகையில் இந்தப் புதிய வசதி செயல்பாட்டிற்கு வரவுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry