12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் எங்கே? தமிழக அரசுக்கு சீமான் சரமாரிக் கேள்வி!

0
85

ஆதித்தமிழ்க்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் இப்போது எங்கே? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read : இட்லியும் கேன்சர் வரவழைக்கும்! வேகவைக்கும் விதம் குறித்து எச்சரிக்கும் நிபுணர்கள்!

அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். மேலும், “ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அன்றைய சென்னை மாகாணத்தில் வாழ்ந்த ஆதித்தமிழ்க்குடி மக்களுக்கு வழங்கப்பட்ட 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் இப்போது எங்கே? 55 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் சமூகநீதி ஆட்சிக்காலத்தில்தான் பெருமளவு பஞ்சமி நிலங்கள் ஆதித்தமிழ்க்குடி மக்களை ஏமாற்றி முறைகேடாக அபகரிக்கப்பட்ட நிலையில், அவற்றை மீட்க தமிழ்நாடு அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன? மீட்டுக்கொடுத்த நிலங்கள் எவ்வளவு?

பஞ்சமி நிலங்களை மீட்பதற்காக தமிழ்நாடு அரசு அமைத்த குழுக்கள் என்னவானது? பஞ்சமி நிலங்கள் மீட்பது தொடர்பாக ஏற்கெனவே ஆண்டவர்களும், இப்போது ஆள்பவர்களும், அவர்களுக்குத் துணை நிற்பவர்களும் என யாருமே வாய் திறக்க மறுப்பது ஏன்? பஞ்சமி நிலங்களை மீட்டு ஆதித்தமிழ்க்குடி மக்களிடம் அளிக்கும் போராட்டத்தை விரைவில் நாம் தமிழர் கட்சி தொடங்கும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry