கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது. திமுக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
வகுப்பறையிலேயே ஆசிரியை படுகொலை! திமுக ஆட்சியில் கொலை சாதாரணமாகிவிட்டதாக ஈபிஎஸ் கண்டனம்!
தஞ்சையில் அரசுப் பள்ளியில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ள அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் கொலை என்பது சர்வசாதாரணம் என்ற அவல நிலை வரும் அளவுக்கு நிர்வாகத் திறனற்ற திமுக அரசு சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறியுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களுக்கு திமுக அரசு சாதகமானதா? பாதகமானதா? ஐபெட்டோ கேள்வி!
ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள புலன அறிக்கையில், “தமிழ்நாடு அரசு சாதக அரசா? அல்லது பாதக அரசா? மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு என்றால், திராவிட மாடல் அரசு சொன்னதையும் செய்யவில்லை! சொல்லாததையும் செய்யவில்லை! இதை அறியாதவர் எவரும் இல்லை.
டெங்குவை பரப்பும் கொசுக்கள் உடலின் எந்த இடத்தில் அதிகம் கடிக்கும் தெரியுமா? Dengue Prevention!
மழைக்காலத்தில் பரவும் முக்கியமான ஆபத்தான நோய்களில் ஒன்று டெங்கு காய்ச்சல். தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் டெங்குவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதற்குரிய தடுப்பு நடவடிக்கைகளை நாமும் மேற்கொள்வது அவசியம்.
கோவில்களில் திருமணம் நடத்துவதுதற்கான காரணம் தெரியுமா? யாரெல்லாம் கோவில்களில் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும்?
திருமணங்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என நம்முடைய சாஸ்திரங்கள் சில முறைகளை வைத்துள்ளது. திருமணங்களில் கடைப்பிடிக்கப்படும் ஒவ்வொரு சம்பிரதாய சடங்குகளுக்கும் ஆன்மிக மற்றும் அறிவியல் காரணங்கள் உள்ளன. அதேபோல் கோவில்களில் திருமணங்கள் நடத்துவதற்கும், யாரெல்லாம் கண்டிப்பாக கோவில்களில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
மக்களை மிரட்டும் ‘டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி’! தப்பிப்பதற்கான பவர்ஃபுல் டிப்ஸ்!
பேஸ்புக்கில் உங்கள் பெயரில் போலியாக கணக்கைத் தொடங்கி உங்கள் நண்பர்கள் வட்டத்தில் இணையவழி மோசடியாளர்கள் பணம் பறித்திருக்கிறார்களா? இப்போது ஃபேஸ்புக் வழியாக யாராவது பணம் கேட்டாலே, இது போலிக் கணக்கு என்று நினைக்கும் அளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இப்படிப் பலரும் விழிப்புணர்வு பெற்றுவிட்டால், இணையவழி மோசடியாளர்கள் பேசாமல் இருந்துவிடுவார்களா? புதிது புதிதாக எப்படித் திருடலாம் என்றும் யோசிப்பார்கள். அப்படி அவர்கள் யோசித்ததன் விளைவுதான் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி. (Digital Arrest Scam).
சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த தேவதாசிகள்! மறைக்கப்பட்ட வரலாறு!
சுதந்திரப் போராட்டத்தில் பங்காற்றிய ஒரு பிரிவினரை காரணமில்லாமல் இந்திய வரலாறு மறைத்துவைத்துள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் தவைஃப்கள்(Tawaifs) அல்லது தேவதாசிகளின் பங்கு நம்மில் பெரும்பாலோருக்கு தெரிவதில்லை.