நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றுள்ள பணி நியமன முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை(பொறுப்பு) தலைவருக்கு அமலாக்கத்துறை அனுப்பியுள்ள 232 பக்க ஆவணத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (MAWS) அமைச்சர் கே.என்.நேரு மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகத்துறை வேலை நியமன ஊழல்: ₹800 கோடி பணப் பரிமாற்றம் – வழக்கு பதிய EPS வலியுறுத்தல்!
நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், தமிழக பொறுப்பு டிஜிபி இந்த ஊழலில் யாரையும் காப்பாற்ற முயற்சிக்காமல் நடுநிலையோடு வழக்கு பதிய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் – தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக இயங்கும் திமுக! – விளக்கம் விவகாரமானதால் தமிழக அரசு பதற்றம்!
சென்னையில் பெரும்பாக்கத்தை ஒட்டியுள்ள, சர்வதேச ராம்சார் அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில், சட்டத்துக்குப் புறம்பாக ₹2000 கோடி மதிப்பிலான அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட, அரசு நிர்வாகமே அனுமதி வழங்கியுள்ளது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களையும், ராம்சார் ஒப்பந்தத்தையும் மீறிய செயல் என அறப்போர் இயக்கம் கடுமையாகக் குற்றம் சாட்டியது. இது குறித்து சில ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. இதன்பிறகே பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் அறிக்கை வெளியானது.
நகராட்சி நிர்வாகத் துறையில் பெரும் ஊழல்! ஒரு பணி நியமனத்துக்கு ₹35 லட்சம் வரை வசூல்! முதலமைச்சரே நியமன ஆணைகள் வழங்கிய அவலம்!
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது கிடைத்த ஆதாரங்களைக் குறிப்பிட்டு, அமலாக்கத்துறை (Enforcement Directorate – ED) திங்கள் கிழமையன்று தமிழ்நாடு காவல்துறைக்குக் கடிதம் எழுதியுள்ளது. அதில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MAWS) துறையில் உள்ள 2,538 பதவிகளுக்கு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தெரிவு செய்யப்பட்டதில் ‘வேலைக்குக் காசு’ என்ற அடிப்படையில் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
🔥 பள்ளிக்கரணை ராம்சார் நில ஊழல்: ₹250 கோடி லஞ்சம்? பெரும் சிக்கலில் 3 அமைச்சர்கள், அதிகாரிகள்?
சென்னையில் பெரும்பாக்கத்தை ஒட்டியுள்ள, சர்வதேச ராம்சார் அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில், சட்டத்துக்குப் புறம்பாக ₹2000 கோடி மதிப்பிலான அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட, அரசு நிர்வாகமே அனுமதி வழங்கியுள்ளது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களையும், ராம்சார் ஒப்பந்தத்தையும் மீறிய செயல் என அறப்போர் இயக்கம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளன.
விஜய் சவால்: “விளம்பர திமுக அரசுக்கு” மக்கள் பதிலடி தருவது உறுதி! – நெல் கொள்முதல் விவகாரத்தில் ஸ்டாலினுக்கு நேரடிக் கேள்வி!
கரூர் சம்பவத்துக்குப் பிறகு ஒரு மாத காலமாக எந்தவித அரசியல் நகர்வுகளிலும் ஈடுபடாமல் இருந்த த.வெ.க. தலைவர் நடிகர் விஜய், நெல் கொள்முதல் விவகாரம் குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தொடர் மழையால், விவசாயிகளின் கடின உழைப்பால் விளைவிக்கப்பட்ட நெல்மணிகள் முதல்முறை வீணான போதே துரிதமாகச் செயல்பட்டு மீதமுள்ள நெல்மணிகளைப் தமிழக அரசு பாதுகாத்திருக்க வேண்டாமா?
