போதை மாஃபியா ஜாபர் சாதிக்குடன் என்ன தொடர்பு? ‘வெள்ளை குடை ஏந்திய பொம்மை’ என ஸ்டாலினை வறுத்தெடுத்த எடப்பாடியார்!

0
56

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிவசாமி வேலுமணியை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, “எமர்ஜென்சியின் போது சிறையில் அடைத்ததாக கூறும் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்திருப்பது தான் திமுகவின் இரட்டை வேடம். 

எதிர்கட்சியாக இருக்கும் போதுகோ பேக் மோடிஎன்று கருப்பு கொடி காட்டிய திமுக, ஆளும் கட்சியான பின்புவெல்கம் மோடிஎன்று வெள்ளை பலூனை காண்பிக்கிறது. திமுகவை போல் பதவி வெறி பிடித்த கட்சி அதிமுக அல்ல. முதலில் பா...வுடன் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக, 5 ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியில் பங்குபெற்றது. திமுக எம்.பி.,க்கள் மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கவில்லை.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் அமர்ந்து கொள்ளையடிப்பது தான் திமுகவின் திட்டம். திமுகவிற்கு ஆட்சி பெரிது, அதிமுகவிற்கு மக்கள் தான் பெரிது. மக்களின் பிரச்னைகளை தீர்ப்பது தான் அதிமுகவின் லட்சியம் எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலினுக்குவெள்ளை குடை ஏந்திய பொம்மைஎனப் புதுப் பெயர் சூட்டினார்.

முதல்வர் ஸ்டாலின் எப்போது பேசினாலும் அதிமுக கள்ளக் கூட்டணி வைத்திருப்பதாக விமர்சனம் செய்து வருகிறார். அவருக்கு கள்ளக் கூட்டணி வைத்துக்கொள்கிற பழக்க தோஷம் இருக்கும்போலத் தெரிகிறது. இதுவரைக்கும் எந்த கட்சித் தலைவரும் இப்படி கூறியது கிடையாது. கள்ளக் கூட்டணி வைத்தது யார் என்பதை இந்த நேரத்தில் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்தான் பிரதமர் மோடியுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ளனர். சிரித்தால் என்ன தெரியும்? பல்லு தானே தெரியும். உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார். 2019-ல் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மதுரையில் அடிக்கல் நாட்டினார் பிரதமர். அப்போது பிரதமருடன் அமர்ந்திருந்த நான் சிரித்துக் கொண்டிருந்தேன். அதை உதயநிதி ஸ்டாலின் கொச்சைப்படுத்தி, நான் பல்லைக் காட்டிக்கொண்டு இருப்பதாக கூறினார். நீங்கள் காட்டினால் சரி, நான் காட்டினால் தவறா?” என்று கூறி, உதயநிதி பிரதமருடன் சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை எடுத்துக் காட்டினார்.

போதை கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக், ஸ்டாலின், உதயநிதியுடன் எடுத்த படத்தை மேடையில் எடப்பாடி பழனிசாமி காட்டினார். வெளியில் வீர வசனம் பேசினாலும் ஸ்டாலின், உதயநிதி பிரதமரை பார்த்ததும் சரணாகதி அடைகின்றனர். தேர்தல் பத்திரத்தின் மூலம் திமுகவுக்கு 656 கோடி ரூபாய் வந்துள்ளது. ஊழல் செய்த பணத்தை முதலீடு செய்வதற்காகத்தான் முதல்வர் அடிக்கடி வெளிநாடு செல்கிறார். 656 கோடி ரூபாயை யாராவது சும்மா கொடுப்பார்களா? போதை கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் உடன் ஸ்டாலினுக்கு என்ன தொடர்பு என்ற கேள்விக்கு இதுவரையில் பதில் இல்லை

திமுக கூட்டணியில் கட்சிகளே இல்லை, ஒரே கட்சி தான் அதுவும் திமுக மட்டும் தான். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஜால்ரா போடுகின்றன. எந்த போராட்டத்திற்கும் வாய்திறப்பதில்லை. திமுகவோடு ஐக்கியமாகிவிட்டன. முதல்வர் ஸ்டாலினுக்கு பில்டிங் ஸ்டார்ங்க். பேஸ்மென்ட் வீக். ஆனால் அதிமுக தலைமையிலான கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி. கூட்டணியில் உள்ள கட்சிகள் தனித்துவம் வாய்ந்தவை.

நான் சிரித்தால் பல் தெரிகிறது என்கிறார் உதயநிதி. நீ என்னப்பா காட்டுற, நீயும் பல்லைத்தானே காட்டுறே, நீ காட்டுனா சரி, நான் காட்டுனா தப்பா? (பிரதமருடன் உதயநிதி சிரித்துப் பேசும் படத்தைக் காட்டி பேசினார்). ஸ்டாலினுக்கு சிரிப்பே வராது. என்னைக்காவது ஸ்டாலின் சிரிப்பதை பார்த்துக்கிறீங்களா? இதுதான் கள்ளக் கூட்டணிக்கான சான்று. இது சாட்சி. அதிமுகவைப் பொறுத்தவரை மறைமுகமாக நாங்கள் யாருக்குமே ஆதரவு தரமாட்டோம். நாங்கள் நினைத்திருந்தால், பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்போம். எங்களுக்கு அவசியம் இல்லை. பதவிவெறி பிடித்த கட்சி அதிமுக அல்ல. மக்களுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்ட கட்சி அதிமுகஎன்று எடப்பாடி பழனிசாமி பேசினார். இந்த பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.