9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்! அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு!

0
29

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தியும்,  9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு இன்றி தேர்ச்சி செய்யப்படுவதாகவும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மே மாதம் தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், 110-வது விதியின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில்தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த உத்தரவு தற்போது அரசுப் பணியில் இருக்கும் அனைவருக்கும் மற்றபும் இந்த ஆண்டு அதாவது 31.05.2021 அன்று பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும்என அறிவத்துள்ளார்.

110-வது விதியின் கீழ் அவர் வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், தமிழகத்தில் 2020-21 ஆம் கல்வியாண்டில் 9, 10, 11-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளார்.

இந்த கல்வி ஆண்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரண சூழலை கருத்தில் கொண்டும், பொற்றோரின் கோரிக்கையை கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்துகளை பரிசீலித்தும் 9, 10, 11-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.

கடந்த 17 ஆம் தேதி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகள் குறித்து மாணவர்களும், அசிரியர்களும் கேள்வி எழுப்பி இருந்தனர். 10,11 மாணவர்களுக்கு நடப்பு ஆண்டில் பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தின் வந்தனர்

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry