மெட்டை திருடி பாட்டமைத்தாக ‘கர்ணன்’ படக்குழு மீது குற்றச்சாட்டு! தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் வாரிசுகள் புகார்!

0
243

தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் எழுதி, இசையமைத்தகண்டா வர சொல்லுங்க. மணிகண்டனை கண்டா வர சொல்லுங்கஎன்ற பாடலின் சில வரிகள், மெட்டை, அப்படியே, தனுஷின்கர்ணன்திரைப்படத்தில் பயன்படுத்தியிருப்பதாக தேக்கம்பட்டி சுந்தர்ராஜனின் வாரிசுகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

தேனி மாவட்டம் தேக்கம்பட்டியைச் சேர்ந்த நாட்டுப்புற பாடகர் சுந்தரராஜன், 1970களிலேயே புகழின் உச்சியில் இருந்தவர். எட்டுப்பட்டி ராசா, பருத்திவீரன், கண்ணே கலைமானே என வசூலை வாரிகுவித்த திரைப்படங்கள் பலவற்றிலும் தேக்கம்பட்டி சுந்தரராஜனின் பாடல் இருப்பதாக கூறப்படுகிறது.

Image Courtesy: Puthiya Thalaimurai

உளவாளி படத்தில் இவர் பாடியமொச்ச கொட்ட பல்லழகிஎன்ற பாடல் அவரது குறிப்பிடத்தகுந்த பாடலாகும். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் 2002ல் உயிரிழக்க, அவரது குடும்பத்தினர் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஆனால், அவர் இயற்றி, இசையமைத்த பாடல்களை தமிழ் சினிமாவில் பயன்படுத்தி பலர் லாபமடைவதாக அவரது வாரிசுகள் ஆதங்கப்படுகின்றனர். இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் கர்ணன் படத்தில் வரும் கண்டா வரச் சொல்லுங்க பாடலின் லிரிக்கல் வீடியோவை அண்மையில் வெளியிட்டனர்.

இந்தப் பாடல் தனுஷ் ரசிகர்களால் பெரியளவு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வெற்றி பற்றி தனுஷும், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் ஒருவரையொருவர் பாராட்டிக்கொண்டனர்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ, இது மறைந்த தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய கண்டா வரச் சொல்லுங்க, மணிகண்டனை கண்டா வரச் சொல்லுங்க பாடலாச்சே என ஆதங்கப்பட்டனர். இப்படி மனசாட்சியே இல்லாமல் ஐயப்பன் பாடல் வரிகளை மாரி செல்வராஜும், டியூனை சந்தோஷ் நாராயணனும் காப்பியடித்திருக்கிறார்களே என புகார் எழுந்தது. அந்த பாடலில், தேக்கம்பட்டி சுந்தர்ராஜுனுக்கு நன்றி என்று குறிப்பிட்டிருந்தார்கள். நன்றி சொன்னால் அது திருட்டு இல்லை என்றாகிவிடுமா என இசை ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இந்நிலையில் இந்த இசை திருட்டால் தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் குடும்பத்தார் வேதனை அடைந்துள்ளனர். தந்தையின் பாடலை பயன்படுத்திவிட்டு நன்றி என தெரிவித்துள்ளனர், தங்களுக்கு பணமோ, பொருளோ கிடைக்கவில்லை என்று சுந்தர்ராஜனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது பாட்டை பயன்படுத்தி கோடிகளில் சம்பாதிக்கிறார்கள், ஆனால் நாங்கள் வறுமையில் அல்லாடிக் கொண்டிருக்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளனர்.  சூப்பர் சிங்கரில் பயன்படுத்தியதற்கும், சினிமாவில் பயன்படுத்துவதற்கும் யாரும் எதுவும் கொடுப்பதில்லை, தங்களுக்காக இது குறித்து கேட்கவும் ஆள் இல்லை, அவரின் உழைப்பை யாரோ பயன்படுத்துவது வேதனையாக இருக்கிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry