பெரு ஊடகங்கள் சொல்ல மறந்த செய்தி! நடிகர் விஜய் உறவினரான பாலியல் பாதிரியாரை காப்பாற்ற துடிக்கும் லயோலா நிர்வாகம்!

0
20

சென்னை லயோலா கல்லூரி நிர்வாகத்தில் உள்ள பாதிரியார் ஒருவரால், பெண் ஊழியர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். அந்த ஊழியர் அளித்த புகாரை கல்லூரி நிர்வாகம் நிராகரித்ததுடன், அவரை பணி நீக்கமும் செய்துள்ளது. இதை எதிர்த்து அந்த பெண் ஊழியர் நான்கு ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தியும் நீதி கிடைக்கவில்லை.

லயோலா கலை அறிவியல் கல்லூரியில் 2010-ம் ஆண்டு நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் மேரி ராஜசேகரன். அந்த கல்லூரியின் முதல்வராக இருந்தவரும், கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க இயக்குநராக செயல்பட்டு வந்த ஏசுசபை பாதிரியார் சேவியர் அல்போன்ஸ், சங்கத்துக்கு வந்த ஒரு கோடி ரூபாய் நிதியை, தனது அறக்கட்டளைக்கு மாற்றியதாக புகார் எழுந்தது.

அதுமட்டுமின்றி கல்லூரி வழங்கும்  ஸ்காலர்ஷிப் தொகையையும், சில பலன்களை பெற்றுக்கொண்டு தகுதியற்ற மாணவர்களுக்கு சேவியர் அல்போன்ஸ் வழங்கியதை மேரி கண்டுபிடித்துள்ளார். கல்லூரிப் பாதை என்ற நிகழ்ச்சியில் முறைகேடாக அவர் பணம் வசூலித்ததாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதுபோன்ற முறைகேடுகள் பற்றி கல்லூரி நிர்வாகத்தின் கவனத்துக்கு மேரி கொண்டு சென்றுள்ளார். எனவே, 2013-ம் ஆண்டு சேவியர் அல்போன்ஸின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன.

இதனால், ஆத்திரமடைந்த பாதிரியார், மேரியை பல விதங்களிலும் துன்புறுத்தியுள்ளார். அதாவது பாதிரியாருக்கான நியதிகளை அவர் மீறியதாக தெரிகிறது. இதுபற்றி கல்லூரி நிர்வாகத்திடம் மேரி புகார் கூற, நிர்வாகமோ மேரியை சமாதானப்படுத்த முயற்சித்துள்ளது. அதன்படி, 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கல்லூரி தலைவரின் செயலாளராக சேவியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற பாதிரியார், மேரியை பாலியல் ரீதியாக துன்புறுத்த தொடங்கியுள்ளார். காவல்துறையில் புகார் கொடுத்தால் கல்லூரியின் பெயர் கெட்டுவிடும் எனக் கூறி, மேரியை மீண்டும் சமாதானம் செய்த கல்லூரி நிர்வாகம், சேவியர் அல்போன்ஸை வேறொரு கல்வி நிறுவனத்துக்கு மாற்றுவதாக உறுதியளித்துள்ளது.

அல்போன்ஸை இடமாற்றம் செய்தவுடன் கல்லூரிக்கு வந்தால் போதும் என மேரியை அனுப்பிய நிர்வாகம், பாதிரியாரை மதுரைக்கு மாற்றிய பிறகும் பணிக்கு அழைக்கவில்லை. நேரில் சந்தித்து முறையிட்ட போது, பணிக்கு வரவேண்டாம் என நிர்வாகம் கூறியுள்ளது. பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் சட்டப்படி ஏசுசபை பாதிரியார் சேவியர் அல்போன்ஸை விசாரிக்காத நிர்வாகம், திடீரென தன்னை பணியிலிருந்து நீக்கியது தவறு என மேரி ராஜசேகரன் கூறியுள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவை அனைத்தையும் குறிப்பிட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேரி புகாராக தாக்கல் செய்தார். நான்கு ஆண்டுகளாக, கல்லூரி நிர்வாகமோ, மேரி குற்றம்சாட்டிய நபர்களோ எந்தவித பதிலும் அளிக்கவில்லை.

இதையடுத்து பாம்பே மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றங்களில் பணியாற்றிய நீதிபதி மைக்கேல்  எஃப் சல்தானா, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி. சாஹிக்கு கடந்த 21-ந் தேதி கடிதம் எழுதியிருக்கிறார். அதில், வழக்கின் தாமதம் வருத்தம் அளிப்பதாகவும், தாமதமானாலும் நீதி கிடைக்கும் எனக் கருதுவதாகவும் கூறியுள்ளார்.

மேரியின் புகார், தேசிய மகளிர் ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அகில இந்திய கிறிஸ்தவ மன்றமும் மேரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. மேரிக்கு நீதி கிடைக்க போராடுவோம் என அந்த அமைப்பு கூறியுள்ளது.

இத்தனையையும் மீறி, லயோலா கல்லூரி நிர்வாகம் பாதிரியார் சேவியர் அல்போன்ஸை காப்பாற்றுவது ஏன் என்பதும், லயோலாவுக்கு எதிரான செய்திகளை பெரு ஊடகங்கள் கவனமாக தவிர்ப்பது ஏன் என்பதும் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. புகாருக்குள்ளான பாதிரியார் சேவியர் அல்போன்ஸ், லயோலா கல்லூரி முன்னாள் மாணவரான நடிகர் விஜய்யின் உறவினர் என கூறப்படுகிறது. இது தவறு என மறுத்தால் அதை வெளியிடவும் தயாராக உள்ளோம்.

Source: Goa Chronicle, Swarajya