மண்ணில் புதைந்த பேருந்து! மூச்சுத் திணறும் குழந்தை! போராளியாக நயன்தாரா! மிரட்டும் ‘O2’ டிரெய்லர்!

0
286

நயன்தாரா  நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் GS இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு இணைந்து தயாரித்திருக்கும் த்ரில்லர் டிராமா திரைப்படம்  “O2”. பரபரப்பான த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

விபத்து ஒன்றில் முழுப் பேருந்தும் மண்ணுக்குள் புதைந்து விடுகிறது. அதனால் பேருந்தில் இருக்கும் பயணிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. சுவாச பிரச்சனைக்காக எப்போது தன் மகனுடன் இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை பேருந்தில் இருக்கும் சக பயணிகள் குறி வைப்பதை, அம்மாவான நயன்தாரா எப்படி போராடி சமாளிக்கிறார் என்பதே படத்தின் கதை.

தமிழ்நாடு , கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.  எந்த ஒரு தாயும் தான் குழந்தைக்கு ஆபத்துனா பாத்துட்டு சும்மா இருக்க மாட்டா.. எனும் வசனத்துடன் டிரெய்லர் அமைந்துள்ளது.

இப்படத்தில் தாய் பார்வதியாக நடிகை நயன்தாரா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாராவின் 8 வயது பையனாக ரித்விக் நடித்துள்ளார். ரித்விக் ஏற்கெனவே யூடியூப்பில் பல வேடங்களில்  ஆண், பெண், வாலிபர், முதியவர், போலீஸ் என்று பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர்.

இவருடைய காமெடி வீடியோக்களுக்கு செம்ம ரசிகர் பட்டாளம் உள்ளனர். போன தீபாவளிக்கு போத்திஸ் ஜவுளிக்கடையின் விளம்பரத்தில் நடித்து புகழ் பெற்றார். இவருடைய முக பாவனைகள், வசன உச்சரிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. நாட்டாமை பாணியில் அமைந்த இந்த விளம்பரம் டிவிக்களில் சூப்பர் ஹிட் அடித்தது.

இவர்களுடன் லீணா, RNR மனோகர், ஆடுகளம் முருகதாஸ், ஜாஃபர் இடுக்கி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் வில்லனாக இயக்குனர் பரத் நீலகண்டன் நடித்துள்ளார். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விக்னேஷ் GS எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தமிழ் A அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா RK படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் மற்றும் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ட்ரைலரும் டிரெண்டாகி உள்ளது. விறுவிறுப்பான த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம் வரும் 17 ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry