ஜென்டில்மேன் – 2! இவரா டைரக்டர்? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கே.டி. குஞ்சுமோன்!

0
282

அர்ஜூன், மதுபாலா நடிப்பில் ஏ,ஆர். ரஹ்மான் இசையமைப்பில் ஷங்கர் இயக்கிய முதல் படம் – ஜென்டில்மேன். 1993-ல் வெளியான இப்படத்தை கே.டி. குஞ்சுமோன் தயாரித்தார். பிறகு காதலன், காதல் தேசம், ரட்சகன் போன்ற பிரமாண்டப் படங்களைத் தயாரித்து 90களில் பிரபலமான தயாரிப்பாளராக விளங்கினார். 1999-ல் என்றென்றும் காதல் படத்தைத் தயாரித்ததுடன் அவர் வேறு படங்களைத் தயாரிக்கவில்லை.

21 வருடங்கள் கழித்து கடந்த 2020-ல் மீண்டும் படம் தயாரிக்க முடிவெடுத்தார். ஜென்டில்மேன் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ஜென்டில்மேன் 2 படம் பற்றிய அறிவிப்பை அவர் வெளியிட்டார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் எனவும், நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால் போன்ற நடிகைகள் நடிக்க இருப்பதாகும், கீரவாணி இசை அமைக்க உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

படத்தின் இயக்குநரை அவர் அறிவிக்காததால், இயக்குனர் யாராக இருக்கும் என்பது ரசிகர்கள் மத்தியிலும் திரைப்பட வட்டாரத்திலும் சஸ்பென்ஸ் தொடர்ந்தது. தற்போது அந்த சஸ்பென்சுக்கு முற்று புள்ளி வைத்து இயக்குனர் பெயரை அறிவித்துள்ளார். நானி கதாநாயகனாக நடித்த வெற்றி படமான ‘ஆஹா கல்யாணம்’ இயக்கிய A.கோகுல் கிருஷ்ணா, ஜென்டில்மேன் 2ஐ இயக்குவார் என தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தெரிவித்துள்ளார்.

பிரபல டைரக்டர் விஷ்ணு வர்தனிடம் பில்லா, அறிந்தும் அறியாமலும், சர்வம், பட்டியல் ஆகிய படங்களின்ல் கோகுல் கிருஷ்ணா இணை இயக்குநராகவு பணியாற்றியவர். படத்தின் ஹீரோ, மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்ற அறிவிப்பையும் விரைவில் எதிர்பார்க்கலாம் என்று கே.டி.குஞ்சுமோன் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry