காலியாகும் பன்னீர் முகாம்! எடப்பாடியிடம் ஐக்கியமான மைத்ரேயன்! புலம்பல் மோடில் ஓபிஎஸ்!

0
409

அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறவிருக்கும் நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்றும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Also Read :அதிமுகவை பலவீனப்படுத்த சிலர் முயற்சி! நானே முன்னின்று காப்பேன் என எடப்பாடி பழனிசாமி சூளுரை!

ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளித்து வந்த பல நிர்வாகிகள் நேற்றும், இன்றும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்த வேளச்சேரி அசோக், இபிஎஸ்-ஐ இன்று சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். ஓபிஎஸ் அதிதீவிர ஆதரவாளரான மைத்ரேயனும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவருக்கு தனது ஆதரவை தெரிவித்து இருக்கிறார்.

அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரனும் எடப்பாடி பழனிசாமி பக்கம் சாய்ந்திருக்கிறார். இதனால் டெல்டாவில் ஈபிஎஸ்க்கு மேலும் வலு அதிகரித்திருக்கிறது.  ஓபிஎஸ் தீவிர ஆதரவாளரான மாஃபா பாண்டியராஜனும் எடப்பாடி பழனிசாமியை சந்த்து காலி விழுந்து வணங்கி ஆதரவு தெரிவித்தார்.

Also Read : பட்டென காலில் விழுந்த மாஃபா பாண்டியராஜன்! OPS உள்நோக்கத்துடன் செயல்படுவதாக ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

ஈபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்த தாமரை ராஜேந்திரன்

பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த திருவள்ளுவர் தெற்கு மாவட்டச் செயலாளர் அலெக்சாண்டர், பூந்தமல்லி நகர செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போது 6 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே ஓபிஎஸ்க்கு ஆதரவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என ஆவடி காவல் ஆணையரிடம் ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்திருந்தார். பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. “தனிநபரின் உள் அரங்கத்தில் கூட்டம் நடப்பதால் அதனை தடுத்து நிறுத்த முடியாது. மேலும் உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும்’’ என ஆவடி காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஓபிஎஸ் தனது டிவிட்டர் பதிவில், “மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்திற்குச் சென்றபோது, தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவரும், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளருமான திரு.கேசவன் அவர்கள் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் எனக் கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த தருணத்தில், `தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்’ என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்” என கூறியுள்ளார்.

Also Read : விவாதத்தை கிளப்பிய ‘விஜய் 66’ படத்தின் தலைப்பு! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியீடு!

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry