முடிவுக்கு வருகிறது மகாராஷ்டிர சிவசேனா அரசு! ராஜினாமா செய்கிறார் உத்தவ் தாக்கரே!

0
327

மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே 40க்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்களுடன் பாஜக பக்கம் சாய்ந்துவிட்டார்.

அவர்களை அஸ்ஸாமில் வைத்து பாஜக பாதுகாத்து வருகிறது. ஏக்நாத் ஷிண்டேயுடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தொலைபேசி மூலம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து காங்கிரஸ், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றன.

PHOTO CREDIT – GETTY

சிவசேனாவுக்கு இப்போது சொற்ப எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருக்கின்றனர். உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே ட்விட்டர் பக்கத்தில், தனது அமைச்சர் பதவி குறித்த பதிவை நீக்கிவிட்டார். அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு உத்தவ் தாக்கரே தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தவிர அவருக்கு வேறு வழியில்லை என்றே தெரிகிறது. சட்டமன்றத்தை கலைக்க பரிந்துரைக்கவும் தாக்கரே திட்டமிட்டு இருப்பதாக சிவசேனாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Shiv Sena leader Sanjay Raut

சிவசேனா மூத்த தலைவரும், செய்தி தொடர்பாளருமான சஞ்சய் ராவத் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், “தற்போது மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை சட்டமன்றத்தை கலைப்பதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சமரசம் செய்து கொள்வதை விட ஆட்சியை இழப்பது மேல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கட்சியை ஏக்நாத் ஷிண்டே கைப்பற்றும் வாய்ப்பு இல்லை என்றும், அதிகாரம் நிலையானது இல்லை என்றும் நாங்கள் இப்போது அதிகாரத்தை இழக்கலாம் மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏக்நாத் ஷிண்டேயுடன் காலையில் ஒரு மணி நேரம் பேசினேன். அவர் தன்னிடம் சிவசேனாவை உடைக்க போதுமான எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக குறிப்பிட்டார். ஏக்நாத் ஷிண்டே எங்களின் நெருங்கிய நண்பர்.

அவருடன் பல ஆண்டுகள் நெருங்கி பணியாற்றி இருக்கிறோம். அவருடன் எளிதில் உறவை முறித்துக்கொள்ள முடியாது. தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். சிவசேனா உடையும் பேச்சுக்கே இடமில்லை” என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதால் வீடியோ கான்பெரன்ஸ் மூலம் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry