சபாநாயகர் அப்பாவு, திமுக எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் மற்றும் சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்ஃபோன்ஸ் ஆகியோர் கடந்த மாதம் 28ம் தேதி திருச்சியில் செயிண்ட் பால் சர்ச்சில் நிடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், “கிறுஸ்தவ பாதிரியார்கள் சிஸ்டர்களும் இல்லையென்றால் தமிழ்நாடு பீகார் போல் ஆகியிருக்கும். நான் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு காரணமே கத்தோலிக்க பாதிரியார்கள் மற்றும் சிஸ்டர்கள்தான். இந்த அரசை உருவாக்கியது நீங்கள்தான். திராவிட மாடல் அரசாங்கம் மற்றும் சமூக நீதிக்கு கத்தோலிக்க பாதரியார்கள் மற்றும் கத்தோலிக்க கிறுஸ்தவர்கள் தான் முக்கிய காரணம். இந்த அரசாங்கத்திற்கு நீங்கள் தான் காரணம் என்பது முதலமைச்சருக்கு தெரியும். இது உங்கள் அரசாங்கம் மற்றும் உங்கள் முதலமைச்சர். தமிழகத்தின் வளர்ச்சிக்கு கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் முக்கிய காரணம். இன்றைய தமிழகம் உங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் பேசியுள்ளார். இது பெரும் சர்ச்சையாகி வருகிறது.
திமுக அரசு கிறிஸ்தவர்களால் உருவாக்கப்பட்டது, சமூக நீதி – திராவிட மாடலுக்கு மூல காரணமே கிறிஸ்தவ பாதிரியார்கள்தான். தமிழ்நாடு வளர்ச்சிக்கு காரணம் கிறிஸ்தவர்கள்தான், அவர்கள் மேல்தான் தமிழகம் கட்டப்பட்டுள்ளது. @Indumakalktchi @sansbarrier @Selvakumar_IN @raaga31280 @jkgche pic.twitter.com/nlKgvJG3Bv
— VELS MEDIA (@VelsMedia) July 26, 2022
அப்பாவு பேச்சுக்கு இந்து அமைப்புகள் மற்றும் பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பாஜக துணைத் தலைவரும், செய்தி தொடர்பாளருமான நாராயணன் திருப்பதி ’இதுதான் திமுகவின் மதச்சார்பின்மையா? தங்களை மதச்சார்பற்ற கட்சி என்று சொல்லிக்கொள்ளும் உரிமையை அவர்கள் இழந்துவிட்டனர். திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்பதை இப்போது இது நிரூபித்துள்ளது’ என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
“திராவிட மாடல் என்று சொல்கின்ற இந்த அரசுக்கு மூல காரணமாக இருந்தது கத்தோலிக்க கிருஸ்தவ மதம் தான், கிருஸ்த்துவ பாதிரியார்கள் தான் , உங்களால் உருவாக்கப்பட்டது தான் இந்த அரசு என்று முதல்வருக்கு தெரியும். தமிழ்நாட்டின் வளர்ச்சியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் முக்கிய காரணமானவர்கள்
— Narayanan Thirupathy (@Narayanan3) July 25, 2022
கிருஸ்துவ மத போதகர்கள் மதமாற்றத்திற்கு காரணமானவர்கள் என்பதால் தமிழகம் அவர்களின் மேல் கட்டப்பட்டது என்கிறாரோ?
நாராயணன் திருப்பதி.(3/3)
— Narayanan Thirupathy (@Narayanan3) July 25, 2022
இந்த சர்ச்சை தொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு விளக்கம் அளித்துள்ள சபாநாயகர் அப்பாவு, பாஜக எனது பேச்சை விளம்பரப்படுத்தினால் அது நல்லது. நான் அப்படி சொல்லவில்லை என்று சொல்லமாட்டேன். ஆம், நான் அப்படித்தான் சொன்னேன். ஆனால் சமூக வலைதளங்களில் ட்ரிம் செய்யப்பட்ட பதிப்புகள் மட்டுமே பரப்பப்படுகின்றன. நான் பேசியது வரலாற்று உண்மை. இதில் அரசியல் இல்லை’ எனக் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry