ரிஷிவந்தியத்தில் முதுமக்கள் தாழி ஓடுகள்! தொல்லியல்துறை ஆய்வுக்கு கோரிக்கை!

0
3398

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் – தியாகதுருகம் செல்லும் பிரதான சாலையில் இருந்து கிழக்கு நோக்கி 2 கிலோ மீட்டர் தொலைவில் தைல மரக்காடு உள்ளது. இந்தக் காட்டில் செட்டிகுளத்தின் அருகில் செம்மண் மேட்டில் சிதைந்த நிலையில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.

பழங்காலத்தில் இறந்தவர்களின் உடலை பெரிய தாழியில் வைத்து மண்ணில் புதைப்பது வழக்கமாக இருந்தது. முதுமக்கள் தாழி கிடைத்தது குறித்து ரிஷிவந்தியம் பண்பாடு, கலை மற்றும் தொல்லியல் மீட்பு பேரவை ஒருங்கிணைப்பாளரும், விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி மாணவருமான சுரேஷ் மணிவண்ணன் கூறும்போது, நூறு ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்த முதியவர்களை தாழியில் அமர வைத்து, அவருக்கு விருப்பமான பொருட்களுடன் சேர்த்து சுடப்பட்ட மண் தாழியில் வைத்து புதைப்பது வழக்கம். அகண்ட வாய்பகுதி கொண்ட பெரிய அளவிலான தாழியில் அமர வைத்து பெரிய அளவிலான கல்லை வைத்து மூடும் வழக்கம் பண்டைய காலங்களில் உள்ளது.

Also Read : திருவள்ளூர் அருகே விடுதியில் மாணவி தற்கொலை! அடுத்தடுத்த தற்கொலைகளால் அதிர்ச்சி!

பொதுவாக இது ஆற்றங்கரை ஒரத்தில் தான் கிடைக்கும். ஆனால் ஆறு இல்லாத ரிஷிவந்தியம் பகுதியில் கிடைத்துள்ளது ஆச்சரியமாக உள்ளது. தடினமான, சற்று தடிமன் குறைவாக, மெல்லியதாக என பல்வேறு அளவுகளில் ஓடுகள் கிடைத்துள்ளன. மேலும், இரும்பு கல்லும் கிடைத்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் வாழ்ந்த வாழ்விடப் பகுதியாக காணப்படுவதால், இப்பகுதியில் முறையான தொல்லியல்துறை ஆய்வு செய்து, இதன் வரலாற்று காலத்தை நிர்ணயம் செய்யலாம்”. இவ்வாறு அவர் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry