2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. இந்த இஸ்லாமிய அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் போன்றவற்றில் ஈடுபடுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதன்பேரில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 22-ம் தேதி திடீர் சோதனை நடத்தினர். அப்போது106 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சோதனைக்கு கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டத்தில் பல இடங்களில் கல்வீச்சு, வன்முறை சம்பவங்களும் அரங்கேறியது. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளாவில் பெட்ரோல் வீச்சு சம்பவங்களும் அரங்கேறியது.
Also Read : என்.ஐ.ஏ.வின் 2வது கட்ட மெகா சோதனை! 8 மாநிலங்களில் பி.எப்.ஐ. நிர்வாகிகள் பலரும் கைது!
வங்கிகளில் பிஎஃப்ஐ அமைப்பு ரூ.120 கோடி டெபாசிட் செய்திருப்பதும், வளைகுடா நாடுகளில் இருந்து ஹவாலா முறையில் அதிக அளவிலான தொகையை கொண்டு வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், நாடு முழுவதும் 2-வது முறையாக பிஎஃப்ஐ அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா, அசாம் ஆகிய 8 மாநிலங்களில் 8 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நீடித்தது.
Also Read : உச்சத்தில் வெடிகுண்டு கலாச்சாரம்! திறனற்ற முதல்வரை பெற்றுள்ளது வேதனைக்குரியது! ஈபிஎஸ் குற்றச்சாட்டு!
தலைநகர் டெல்லியில் ஷாகின்பாக், ஜாமியா நகர் பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள், டெல்லி சிறப்பு படை போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கையாக இந்த பகுதிகளில் 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டெல்லியில் 32 பேர் பிடிபட்டனர்.
இந்தநிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு ஐந்தாண்டுகள் தடை விதித்துள்ளது. இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மட்டுமல்ல, அதன் துணை அமைப்புகள் மற்றும் அதற்கு உதவும் அமைப்புகளுக்கும் ஐந்து வருடம் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன்படி Rehab India Foundation (RIF), Campus Front of India (CFI), All India Imams Council (AIIC), National Confederation of Human Rights Organization (NCHRO), National Women’s Front, Junior Front, Empower India Foundation and Rehab Foundation, Kerala ஆகிய அமைப்புகளும் தடைப்பட்டியலில் உள்ளன.
சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) மற்றும் அதன் மாணவர் பிரிவான கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா (சிஎப்ஐ) உள்ளிட்ட முன்னணி அமைப்புகளை “சட்டவிரோத அமைப்பாக உள்துறை அமைச்சகம் (எம்எச்ஏ) அறிவித்துள்ளது.
Also Watch : ஒரு கொடி, 4 தொண்டனை வைத்துக்கொண்டு RSSஐ விமர்சிப்பதா? Annamalai challenges Thirumavalavan
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது, “உடனடியாக தடை விதிக்கப்படாவிட்டால், அந்த அமைப்பு தனது நாசகார நடவடிக்கைகளைத் தொடரும், பொது ஒழுங்கை சீர்குலைக்கும் மற்றும் நாட்டின் அரசியலமைப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.
தேசத்திற்கு எதிரான அதிருப்தியை உருவாக்கும் நோக்கத்துடன், தேசவிரோத உணர்வுகளை தொடர்ந்து பரப்புவது மற்றும் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவை தீவிரமயமாக்குவது ஆகும். பிஎப்ஐ உறுப்பினர்களில் சிலர் இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் (சிமி) தலைவர்கள் மற்றும் ஜமாத்–உல்–முஜாஹிதீன் வங்காளதேசம் (ஜேஎம்பி) உடன் தொடர்பு கொண்டுள்ளனர்.இவை இரண்டும் தடைசெய்யப்பட்ட அமைப்புகளாகும்.
Also Read : ஆம்பூரில் பற்றி எரிந்த காலணி தொழிற்சாலை! ஐ.டி. ரெய்டு நடந்த நிலையில் நேரிட்ட விபத்தால் சர்ச்சை!
இந்த குழுவுக்கு ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் போன்ற உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும், ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளது.
சஞ்சித் (கேரளா, நவம்பர் 2021), வி. ராமலிங்கம், (தமிழ்நாடு, 2019), நந்து, (கேரளா, 2021), அபிமன்யு (கேரளா) சரத் (கர்நாடகா, 2017), ஆர். ருத்ரேஷ் (கர்நாடகா, 2016), பிரவீன் பூஜாரி (கர்நாடகா, 2016), சசி குமார் (தமிழ்நாடு, 2016), பிரவீன் நெட்டாரு (கர்நாடகா, 2022) உள்ளிட்ட பலரின் கொலைகளிலும், பல பயங்கரவாதச் செயல்களிலும், பிஎப்ஐ உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.” உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry