ஜோதிடம், நல்ல நேரம், நாள், கிழமை மீது நம்பிக்கை கொண்டவரா நீங்கள்? அப்படியென்றால் ‘குளிகை’, ‘குளிகன்’ இந்த பெயர்களை கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
அது என்ன குளிகை நேரம்..! யார் அந்த குளிகன்?
‘குளிகன்’ என்றால் சனிபகவானின் மகன் என்கிறது புராணம். குளிகனை மாந்தி என்றும் சொல்வார்கள். ராகு காலம் ராகுவையும், எமகண்டம் கேதுவையும் குறிப்பதை போல, குளிகை நேரம் சனிபகவானின் மைந்தன் குளிகனை (மாந்தி) குறிப்பிடுகிறது. எப்படி ஒருநாளில் ராகு காலம், எமகண்டத்திற்கு ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதோ அதேபோல், குளிகைக்கும் ஒன்றரை மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை – 3.00 PM – 4.30 PM
திங்கட்கிழமை – 1.30 PM – 3.00 PM
செவ்வாய்கிழமை – 12.00 PM – 1.30 PM
புதன்கிழமை – 10.30 AM – 12.00 PM
வியாழக்கிழமை – 9.00 AM – 10.30 AM
வெள்ளிக்கிழமை – 7.30 AM – 9.00 AM
சனிக்கிழமை – 6.00 AM – 7.30 AM
குளிகை நேரம் என்ன செய்யும்?
ராகுகாலம், எமகண்டத்தில் நல்ல காரியத்தை செய்ய மாட்டார்கள். ஆனால் குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்த ஒரு காரியமும் வளர்ந்து கொண்டே போகும். அதாவது மாநாடு படத்தில் “வந்தான்… சுட்டான்… ரிப்பீட்டு…! வந்தான்… சுட்டான்… ரிப்பீட்டு…னு” எஸ்.ஜே.சூர்யா டயலாக் மாதிரி, திரும்பத் திரும்ப ரிப்பீட் மோடில் நடைபெறும் என்று சொல்வார்கள்.
Also Read : மகாளய பட்சம் என்றால் என்ன? இல்லம் தேடி வரும் முன்னோர்களுக்கு என்ன செய்ய வேண்டும்? Mahalaya Patcham!
ஒரு செயலை செய்தால் வளர்ந்து கொண்டே போகும், திரும்பத் திரும்ப நடைபெறும் என்பதற்காக அனைத்து காரியங்களையும் குளிகையில் செய்யக்கூடாது. குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பதில் சூட்சமம் ஒளிந்துள்ளது.
குளிகையில் என்ன செய்யக் கூடாது?
கடன் வாங்குவது, நகை அடகு வைப்பது, வீடு, நிலம் விற்பது, வீட்டை காலி செய்வது, வீட்டை உடைப்பது, அறுவை சிகிச்சை செய்வது, இறந்தவர் உடலை எடுப்பது, பெண் பார்க்க செல்வது, திருமணம் செய்வது போன்றவற்றை குளிகை நேரத்தில் செய்யக்கூடாது.
குளிகையில் என்ன செய்யலாம்?
குளிகை நேரத்தில் கடனை திருப்பிக் கொடுப்பது, வீடு, நகை வாங்குவது, வீடு கிரகப்பிரவேசம், வங்கி கணக்கு தொடங்கி பணம் டெபாசிட் செய்வது, புதிதாக தொழில் தொடங்குவது போன்ற சுப நிகழ்ச்சிகளை செய்தால், தொடர்ந்து செய்வதாக அமையும். குறிப்பாக எந்த ஒரு செயலை திரும்பத் திரும்ப செய்தால் நமக்கு நன்மை கிடைக்குமோ, அந்தச் செயல்களை குளிகையில் செய்யலாம்.
தொடர்புக்கு:- ‘ஜோதிட சிரோன்மணி’ ஆர்.கே.வெங்கடேஸ்வரர். ஸ்ரீ மாருதி ஜோதிட ஆராய்ச்சி மையம், சென்னை. astrovenkataeswar@gmail.com, அலைப்பேசி – 91590 13118.
ஜோதிடம் தொடர்பான சந்தேகங்கள், கேள்விகளை astrovenkataeswar@gmail.com என்ற மெயிலுக்கு அனுப்பினால், வரும் நாட்களில் வேல்ஸ் மீடியா இணைய இதழில் பதில்கள் வெளியாகும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry