வைட்டமின் பி12 அதிகமானால் கேன்சர் வரலாம்! Vitamin B12: Overdose and Side Effects

0
51
What are some effects of vitamin B12 on health? | Getty Image

வைட்டமின் பி 12 மனித உடலுக்கு ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து என்பது அனைவரும் அறிந்தததுதான். பி12 நீரில் கரையும் ஒரு உயிர்ச்சத்து ஆகும். சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்வது, டி.என்.ஏ தொகுப்பு மற்றும் நரம்பு மண்டல செயல்பாடு உள்ளிட்ட பல முக்கிய செயல்பாடுகளில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

உடலில் வைட்டமின்கள் குறைபாடு ஏற்படும் போது, அதனை உணவு மூலமாகவும், சப்ளிமெண்ட் மாத்திரைகள் வடிவிலும் எடுத்துக் கொள்ளும் வழக்கம் உள்ளது. இறைச்சி, கோழி, கடல் உணவுகள், முட்டை, பால் பொருட்கள் மற்றும் வலுவூட்டப்பட்ட தானியங்கள் போன்ற பல உணவுகளில் பி 12 காணப்பட்டாலும், இந்த முக்கியமான வைட்டமின் பலருக்கு போதுமானதாக இல்லை.

குடல் அழற்சி நோய், சில மருந்துகள், மரபணு பிறழ்வுகள் மற்றும் உணவுக் கட்டுப்பாடுகளை பின்பற்றுவோருக்கு பி 12 தேவை சற்றே அதிகமாக இருக்கும். வைட்டமின் பி 12 குறைபாடு இருந்தால் நரம்பு பாதிப்பு, இரத்த சோகை மற்றும் சோர்வு போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இவர்கள் தங்கள் உணவில் உயர்தர பி 12 சப்ளிமெண்ட் சேர்ப்பது குறித்து மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

Also Read : மூளைக்கும் வயிற்றுக்கும் நடக்கும் சிக்னல் பரிமாற்றம்! உணவுக்கும் மூளைக்குமான சிலிர்க்கவைக்கும் தொடர்பு! Can nutrition affect your mental health?

துரதிருஷ்டவசமாக, வைட்டமின் பி 12 சரியான அளவு மற்றும் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளப்படாவிட்டால் ஆபத்தாக மாறிவிடும். வைட்டமின் பி 12ஐ அதிக அளவில் எடுத்துக் கொண்டால், அது சிறுநீரின் மூலம் உடலில் இருந்து ஓரளவு வெளியேறிவிடும். அதேநேரம், வைட்டமின் பி 12 ஓவர் டோஸ் முகப்பரு மற்றும் ரோசாசியாவின் வெடிப்புகளுக்கு இது வழிவகுக்கும். முகத்தில் சிவத்தல் மற்றும் சீழ் நிறைந்த புடைப்புகளை ஏற்படுத்தும்.

நீரிழிவு அல்லது சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு, வைட்டமின் பி 12 டோஸ் அதிகமாகும்போது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு சில சான்றுகள் உள்ளன. ஒரு ஆய்வில், நீரிழிவு நெஃப்ரோபதி (நீரிழிவு காரணமாக சிறுநீரக செயல்பாடு இழப்பு) பாதிப்பு உள்ளவர்களுக்கு, அதிக அளவு பி வைட்டமின் இருப்பது தெரியவந்துள்ளது.

அதிக அளவு பி வைட்டமின்களை எடுத்துக்கொள்வோருக்கு மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இறப்புக்கான ஆபத்து அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு வைட்டமின் பி 12 சப்ளிமெண்ட்ஸ் அதிகமாகும்போது, வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறின் அபாயம் அதிகரிக்கும் என மருத்துவ கட்டுரைகள் மூலம் தெரியவருகிறது. தாய்ப்பால் கொடுத்தால் வைட்டமின் பி -12ஐ பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் மட்டும் எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது. ஓவர் டோஸாகும் வைட்டமின் பி -12 ஊசி பின்வரும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

Also Read : சாராயத்துக்குக் குறைவில்லாத இணைய போதை! மாணவர்கள், இளைஞர்களை அச்சுறுத்தும் ‘இன்டெர்நெட் அடிக்‌ஷன் டிஸார்டர்’! What Is Internet Addiction Disorder?

லேசான வயிற்றுப்போக்கு, அரிப்பு, தோல் சொறி, தலைவலி, தலைச்சுற்று, குமட்டல், வாந்தி, நுரையீரல் வீக்கம் மற்றும் இதய செயலிழப்பு, நரம்பு த்ரோம்போசிஸ் வீக்கத்தின் உணர்வு, அரிதான மெதுவாக வளரும் இரத்த புற்றுநோய் போன்றவை ஏற்படலாம். வைட்டமின் பி -12 மிகவும் அரிதான ஆனால் கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகளையும் (அனாபிலாக்ஸிஸ்) ஏற்படுத்தும். முகம், நாக்கு மற்றும் தொண்டை வீக்கம் மற்றும் விழுங்குவதற்கும் சுவாசிப்பதற்கும் சிரமம் ஆகியவை இதில் அடங்கும்.

ஃபோலிக் அமில சப்ளிமெண்ட்ஸ் வைட்டமின் பி -12 இல் வினைபுரியம். எனவே ஃபோலிக் அமிலம் உள்ள மருந்துகள் எடுத்துக் கொண்டால் அதை மருத்துவரிடம் அவசியம் சொல்ல வேண்டும். வைட்டமின் பி -12 நீரில் கரையக்கூடியது மற்றும் குடலால் உறிஞ்சப்படுகிறது. இது உறிஞ்சப்பட்ட பிறகு, டி.என்.ஏ மற்றும் சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க பயன்படுகிறது. பயன்படுத்தப்படாத வைட்டமின் பி -12 கல்லீரலில் சேமிக்கப்படுகிறது.

Also Read : நாய்கள் கடிப்பதற்கு முன் என்னவிதமான சிக்னல் கொடுக்கும்? நாய் கடித்துவிட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்? Dog bite prevention!

வைட்டமின் பி 12 பொதுவாக பாதுகாப்பானதாகக் கருதப்பட்டாலும், சில நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் கீமோதெரபி மருந்துகள் போன்ற சில மருந்துகளுடன் எதிர்மறையாக செயல்படக்கூடும். எனவே, வைட்டமின் பி 12 மற்றும் வேறு எந்த மருந்துகளையும் இணைப்பதற்கு முன்பு, மருத்துவரின் ஆலோசனையை பெறுவது மிக மிக அவசியம். இரத்த சோகை உள்ளவர்களுக்கு உணவில் இருந்து வைட்டமின் பி 12ஐ முழுமையாக உறிஞ்சுவதில் சிரமம் இருக்கலாம், எனவே அவர்கள் அதிகப்படியான டோஸை எடுக்க வேண்டி வரலாம். அவர்களும் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். வயது வாரியாக கீழ்கண்ட அளவே வைட்டமின் பி12 தேவைப்படும்.

Source:https://ods.od.nih.gov/factsheets/VitaminB12-Consumer/

சைவ உணவு உண்பவர்களுக்கு வைட்டமின் பி 12 குறைபாடு ஏற்படக்கூடும். எனவே, அவர்களுக்கு இந்த ஊட்டச்சத்து கூடுதலாக தேவைப்படலாம். இருப்பினும், வைட்டமின் பி 12 சரியான அளவு எடுக்க வேண்டும் என்பதால், மருத்துவரின் ஆலோசனை பெறுவது முக்கியம். ஒட்டுமொத்தமாக பார்த்தால், வைட்டமின் பி 12 ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து என்பதில் சந்தேகமில்லை, அதேநேரம் அதை அதிகமாக எடுத்துக்கொள்வதால் ஏற்படக்கூடிய அபாயங்களைப் பற்றி அறிந்திருப்பதும் அவசியம்.

Disclaimer : The purpose of this article is to raise awareness about vitamin B12. This article has been compiled from information available on the Internet. The information contained herein is debatable. No medication should be taken on its own without a doctor’s advice.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry