வித்தியாசமான ரெசிபி, நேரமும் குறைவா எடுத்துக்கனும்…! அதான உங்க விருப்பம்..! உங்கள் வீட்டில் 1 1/2 கப் அவல் உள்ளதா? அப்படியானால் அட்டகாசமான சுவையில் ஒரு புதுமையான இட்லியை செய்து பார்க்கலாமா? இந்த இட்லிக்கு சைடு டிஷ்ஷே தேவை இல்லை, அப்படியே கூட சாப்பிடலாம்.
அவல் இட்லி ரெசிபி செய்முறை:
தேவையான பொருட்கள்:
* அவல் – 1 1/2 கப்
* ரவை – 1/4 கப்
* கெட்டி தயிர் – 1/4 கப்
* இஞ்சி – 1 டீஸ்பூன்
* சீரகம் – 1 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது (பொடியாக நறுக்கியது)
* கேரட் – 1 (துருவியது)
தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்:
* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் – 1/2 டீஸ்பூன்
* கடுகு – 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு – 1/2 டீஸ்பூன்
* பூண்டு – 4 பல்
* பெருங்காயத் தூள் – சிறிதளவு
* கறிவேப்பிலை – சிறிதளவு
* உப்பு – சிறிதளவு
செய்முறை:
* ஒரு வடிகட்டியை எடுத்து, அதில் 1 1/2 கப் அவலை போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி ஒருமுறை அலசி, அப்படியே 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, மிக்சர் ஜாரில் அலசி வைத்துள்ள அவலை எடுத்து, அத்துடன் ரவை, தயிர், இஞ்சி, சீரகம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அத்துடன் மிளகுத் தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் துருவிய கேரட் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.
* பிறகு இட்லி தட்டை எடுத்து, குழிகளில் எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் எடுத்து உருண்டையாக உருட்டி, இட்லி தட்டில் வைத்து தட்டையாக தட்டியபின் நடுவே ஒரு துளையிட வேண்டும்.
* பின்னர் இட்லி பாத்திரத்தில் சிறிது நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.
* பின்பு இட்லிகள் நன்கு குளிர்ந்ததும், அவற்றை ஒரு ஸ்பூன் கொண்டு எடுத்து, ஒரு தட்டில் வைக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எணணெய் ஊற்றி சூடானதும், சீரகம், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பூண்டு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை மற்றும் சிறிது உப்பு சேர்த்து தாளித்து, இட்லியின் மேல் ஊற்றினால், அவல் இட்லி தயார்.
Also Read : கோதுமை ரவா பிசிபேளாபாத்! நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ளது!
அவல் இட்லியின் சிறப்பம்சங்கள்
மாவை புளிக்க வைக்கத் தேவையில்லை.
குறைவான நேரத்தில் தயாரிக்கலாம்.
ஆரோக்கியமான, மென்மையான காலை உணவு.
டிபன் மற்றும் லஞ்ச் பாக்ஸிலும் பேக் செய்யலாம்.
அனைத்து பொருட்களும் எளிதாக கிடைக்கும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry