கோதுமை ரவா பிசிபேளாபாத்! நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ளது!

0
256

கோதுமை ரவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. கோதுமை ரவாவைக் கொண்டு பல ரெசிப்பிக்கள் செய்யலாம். அந்த வகையில், கோதுமை ரவா பிசிபேளாபாத் செய்வதைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

கோதுமை ரவை பிசிபேளாபாத் செய்வதற்கு தேவையான பொருட்கள் :-

கோதுமை ரவை – 100 கிராம்,

துவரம் பருப்பு – 50 கிராம்,

பிசிபேளாபாத் பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்,

பச்சை பட்டாணி – 30 கிராம்,

கரைத்த புளி – 2 ஸ்பூன்

பச்சை மிளகாய் – 3

கொத்தமல்லிசிறிதளவு,

வெங்காயம் – 3

தக்காளி – 3,

நறுக்கிய கேரட், பீன்ஸ், முருங்கைக்காய் – 2 கப்,

உப்புதேவையான அளவு.

தாளிக்க: கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, முந்திரி, நெய்தேவையான அளவு.

பிசிபேளாபாத் பொடி தயார் செய்ய:-

தேங்காய் துருவல்ஒரு மேசைக்கரண்டி

கடலைப்பருப்புஒரு மேசைக்கரண்டி

உளுந்துஒரு மேசைக்கரண்டி

மிளகுஅரை தேக்கரண்டி

சீரகம்அரை தேக்கரண்டி

வெந்தயம்கால் தேக்கரண்டிக்கும் குறைவு

மிளகாய் வற்றல் – 6

கறிவேப்பிலைசிறிது (விரும்பினால்)

பட்டை, லவங்கம்சிறிது

தனியா (மல்லி விதை) – ஒரு மேசைக்கரண்டி

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு தேங்காய் துருவலை வறுத்து எடுக்கவும்.  பிறகு மிளகாய் வற்றலை வறுத்து எடுக்கவும். அதன் பிறகு தனியா (மல்லி விதை), உளுந்து மற்றும் கடலைப்பருப்பை வறுக்கவும்.

அதன் பிறகு மீதமுள்ள பட்டை, லவங்கம், மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை வறுத்து கடைசியாக கறிவேப்பிலையை வறுத்து எடுத்து அனைத்தையும் சேர்த்து ஆறவிடவும். வறுத்த பொருட்கள் அனைத்தும் ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடியாகவோ அல்லது விழுதாகவோ அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பிசிபேளாபாத் செய்முறை:

துவரம் பருப்பை நன்றாக கழுவி 30 நிமிடங்கள் ஊறவைத்த பிறகு குக்கரில் வேக வைத்து இறக்கி வைக்கவும். கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து, குக்கரில் 2 விசில் வரும்வரை வேக வைத்து கொள்ளவும்.

கொத்தமல்லி, தக்காளி, காய்கறிகள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய்விட்டு சூடானதும் தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து பொன்னிறமாக தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதங்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும், பட்டாணி, காய்களை சேர்த்து வேகவைக்கவும்.

காய்கறிகள் நன்றாக வதங்கியதும், புளிக் கரைசல், உப்பு, பிசிபேளாபாத் பவுடர் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும். 10 நிமிடங்கள் கழித்து வேகவைத்த பருப்பு, கோதுமை ரவை இரண்டையும் சேர்த்துக் 5 நிமிடம் கிளறவும். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கினால், சூப்பரான சுவையும் வாசனையும் மிகுந்த பிசிபேளாபாத் ரெடி. பொதுவாக பிசிபேளாபாத் அரிசியில்தான் செய்வார்கள். இது கர்நாடக மாநில உணவுவகையைச் சேர்ந்ததாகும்.

வீட்டு மசாலா மற்றும் பருப்பு சேர்ப்பதால், இதில் நிறைய புரதம் கிடைக்கிறது. பல வகை காய்கறிகள் சேர்ப்பதால், நிறைய வைட்டமின், தாது உப்புகள் என வளரும் பிள்ளைகளுக்குப் பொருத்தமான வெரைட்டி ரைஸாக பிஸிபேளாபாத் இருக்கிறது. இதை கோதுமை ரவையில் செய்வதால் கூடுதலாக அதிக அளவிலான நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின் பி கிடைக்கிறது. மேலும், குறைந்த கலோரி இருப்பது இதன் கூடுதல் சிறப்பு. இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படும். கோதுமை ரவையைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களின் உடல் எடை கணிசமாகக் குறையும். இது, நமது உடலில் மெதுவாக உடைக்கப்பட்டு மெள்ள மெள்ளக் கரைவதால், எடையைக் குறைக்க உதவுகிறது. ரத்த சர்க்கரையின் அளவைச் சமநிலையில் வைத்திருக்கவும் கோதுமை ரவை பெரிதும் உதவும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry