அசத்தலாக வரும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! ரூ.499க்கு முன்பதிவு! ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கி.மீ. ஓட்டலாம்! 

0
109

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புக்கிங் தொடங்கியிருக்கிறது. ரூ.499 என்ற மிகக் குறைந்த தொகையில் புக்கிங் நடைபெற்று வருகிறது

ஓலா இஸ்கூட்டர் ஆலை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்படுகிறது. ஆண்டுக்கு 10 மில்லியன் மின் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறனில் ஆலை உருவாகி வருகின்றது. இங்கு வைத்தே ஓலா மின்சார ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள் மற்றும் வெளி நாடுகளுக்கு விநியோகம் செய்யப்பட இருக்கின்றன.

தனது ஆன்லைன் தளமான http://olaelectric.com வாயிலாகவே புக்கிங் பணிகளை ஓலா தொடங்கியிருக்கின்றது. இந்த தளத்திற்குள் நுழைந்த உடன் Reserve For 499 என்பதை கிளிக் செய்து செல்போன் எண்ணை பதிவிட்டு அக்கவுண்டை உருவாக்கலாம். பின்னர் வழக்கம்போல் பெயர், மின்னஞ்சல் ஆகியவை  கேட்கப்படுகின்றன. பின்னர் முன்பதிவிற்கான கட்டணத்தைச் செலுத்த டெபிட், கிரெடிட் அல்லது யுபிஐ ஆகிய மூன்று விதமான ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. கட்டணம் செலுத்தியவுடன் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புக்காகிவிடும். இதை உறுதி செய்ய, வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படுகிறது

புக்கிங் செய்யும்போதே நிற தேர்வு மற்றும் வீட்டுக்கே டெலிவரி செய்ய வேண்டுமா என்கிற தேர்வையும் ஓலா வழங்குகின்றது. (மேட் பிளாக், மேட் பிங்க், மேட் ஸ்கை ப்ளூ உள்ளிட்ட நிறங்கள் கிடைக்கின்றன). ஆர்டரை ரத்து செய்தால், முன்பதிவு தொகை முழுமையாக திருப்பித் தரப்படும். வாடிக்கையாளர் விரும்பினால், அவர் தனது முன்பதிவை வேறொருவர் பெயரிலும் மாற்றலாம். இதற்கு  support@olaelectric.com என்ற மின்னஞ்சல் மூலம் கோரிக்கையை அனுப்ப வேண்டும்.

அலாய் வீல், டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன், கிளவுட் இணைப்பு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், சாவியில்லா இயக்கம், செல்போன் செயலி வாயிலாக கட்டுப்படுத்தும் வசதி, ப்ளூடூத் கனெக்டிவிட்டி என ஏராளமான சிறப்பு வசதிகளுடன் இந்த மின்சார ஸ்கூட்டர் வர உள்ளது. மிகப்பெரிய அளவில் பூட் ஸ்பேஸ், 2 ஹெல்மெட் வைக்கும் அளவுக்கு டிக்கி ஆகியவற்றை இது கொண்டிருக்கிறது. ஒரு முழுமையான சார்ஜில் 150 கி.மீ. ரேஞ்ஜை வழங்கும் திறனில் ஓலா மின்சார ஸ்கூட்டர் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

18 நிமிடங்களில் 50% சார்ஜ் ஆகும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 400 நகரங்களில் ஒரு லட்சம் சார்ஜிங் பாயின்ட்டுகளை நிறுவவும் ஒலா திட்டமிட்டுள்ளது. இந்த இஸ்கூட்டரை வீடுகளில் பயன்படுத்தப்படும்  5A ஸ்டாண்டர்ட் சாக்கெட் மூலமோ அல்லது நிறுவனத்தின் ஹைப்பர் சார்ஜர் சார்ஜிங் ஸ்டேஷன்களிலிருந்தோ சார்ஜ் செய்து கொள்ளலாம். இதன் விலை ஒரு லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்படலாம் என்று தெரிகிறது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் விரைவில் சென்னையில் விற்பனைக்கு வரவுள்ளது.  தற்போதைய நிலையில் புனே, பெங்களூர், மைசூர், மங்களூர் மற்றும் அவுரங்காபாத் உள்ளிட்ட நகரங்களில் இந்த ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தபடியாக மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரில் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாக்பூர் தவிர, சென்னை மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களிலும் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு பஜாஜ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அர்பன் மற்றும் பிரீமியம் என மொத்தம் 2 வேரியண்ட்களில் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கிறது. அர்பன் வேரியண்ட்டின் விலை 1,42,620 ரூபாய் ஆகவும், பிரீமியம் வேரியண்ட்டின் விலை 1,44,620 ரூபாய் ஆகவும் உள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இதன் மூலம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலை உயர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்றாக பஜாஜ் சேத்தக் திகழ்கிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry