ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள்! காரோட்டி தினகரன்! மனம் திறக்கும் சசிகலா நடராஜன்!  பாகம்-1

0
105

ஜெயலலிதாவுக்கும் தமக்குமான பந்தம், அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் கடைசி நாட்களில் நடந்தது என்ன, நெருக்கமாக இருந்தும் ஜெயலலிதா தன்னை தள்ளி வைத்தது ஏன்? என்பதை சசிகலா நடராஜன் மனம் திறந்து பேசியுள்ளார். இதை இரண்டு பாகங்களாக பார்க்கலாம்.

மன்னார்குடியைச் சேர்ந்த விவேகாநந்தன்கிருஷ்ணவேணி தம்பதிக்கு 1957-ம் ஆண்டு பிறந்தவர் சசிகலா. 1973-ம் ஆண்டு எம்.நடராஜனை திருமணம் செய்துகொண்டார். அதிமுகவுக்கும், சசிகலாவுக்கும் ஆன உறவு சுமார் 33 ஆண்டுகள். மிசா காலகட்டத்தில் பொருளாதார கஷ்டத்தை அனுபவித்திருந்தாலும், பெங்களூரு சிறையில் இருந்த 4 ஆண்டுகள்தான் தமது வாழ்வின் கடினமான காலகட்டம் என்கிறார் சசிகலா.

ஜெயலலிதாவுடனான அறிமுகம்

1980-களின் தொடக்கத்தில் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, மதிய உணவுத் திட்டத்தை பிரபலப்படுத்த, கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். ஜெயலலிதாவின் கடலூர் வருகையை ஊடகங்கள் முழுமையாக கவர் செய்வதை உறுதி செய்யுமாறு தென்னாற்காடு மாவட்ட ஆட்சியராக இருந்த சந்திரலேகாவிடம் எம்.ஜி.ஆர். கூறினார். அப்போது நடராஜன் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றினார். அந்தப் பொறுப்பை சந்திரலேகா நடராஜனிடம் வழங்கினார்.  அவர் தனது மனைவி சசிகலா மூலம் ஜெயலலிதாவின் பயணத்தை சிறப்பாக்கினார். அப்போதுதான் நீண்டகால நட்புக்கு, உறவுக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. பின்னர் 1980களின் இறுதியில், சசிகலாவும், நடராஜனும், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திலேயே வசிக்கத் தொடங்கினார்கள்.

பந்தம் வலுவானது எப்போது?

இதுபற்றி சசிகலா சொல்வதை பார்ப்போம். “1987 டிசம்பர் 24-ந் தேதி அதிகாலை, எம்.ஜி.ஆர். மரணமடைந்த செய்தி அக்காவுக்கு(ஜெயலலிதா) கிடைத்தது. உடனடியாக நாங்கள் ராமாவரம் தோட்ட இல்லத்துக்கு சென்றோம். கேட் அடைக்கப்பட்டிருந்தது, நாங்கள் திறந்துகொண்டு உள்ளே போனோம். அக்கா கதறி அழுதார். வீட்டின் தரைதளத்தில் உள்ள ரூமில் அக்காவை அடைத்துவைக்க எம்.ஜி.ஆர். குடும்பத்தினர் முயற்சித்தனர். நாங்கள் இடத்தைவிட்டு நகராமல் இருந்தோம். முதல் தளத்தில் இருந்து எம்.ஜி.ஆர். உடல் கீழே கொண்டு வரப்பட்டது. ஸ்டெச்சரில் வைத்து ஆம்புலன்ஸ் மூலம் உடலை கொண்டு சென்றனர். அப்போது எங்கள் காரில் நாங்கள் பின்தொடர்ந்தோம். (TTV)தினகரன் தான் காரை ஓட்டினார்.

எம்.ஜி.ஆர். உடலை தாங்கிச் சென்ற வாகனத்தில் இருந்து அக்கா கீழே இழுத்துத் தள்ளப்பட்டார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்தவுடன், சந்தியா அம்மாவின் படத்தின் முன் நின்று அக்கா அழுதார். நான் அம்மாவை இழந்துவிட்டேன் என அவர் கதறினார். இதனால் மனமுடைந்த நான், இனி அக்காவுடனேயே இருப்பது என அந்தக் கனமே முடிவு செய்தேன்.

ஜெ. கட்சியை கைப்பற்ற உதவி

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அக்காவை ஓரங்கட்ட முயற்சி நடந்தது. ஆனால், அவருக்கே உரித்தான இயல்பில் கட்சி தலைமை பொறுப்பை அடைய அக்கா முயற்சித்தார்.  அப்போது கட்சி இரண்டாக பிளவுபட்டது. அக்கா தலைமையில் ஒரு அணியும், எம்.ஜி.ஆர். மனைவி ஜானகி அம்மா தலைமையில் ஒரு அணியுமாக செயல்பட்டது. எனது கணவர் மூலம் ஒரே இரவில், ஆழ்வார்பேட்டையில் கட்சிக்கான அலுவலகத்தை அடையாளம் கண்டோம். பாரிமுனையில் இருந்து பெரிய கொடிக்கம்பம் வாங்கி வந்தேன், அதில் கட்சி கலர் பெயின்ட் அடித்தோம்.

நானும் எனது கணவரும் ராமாவரம் தோட்டம் சென்று ஜானகி அம்மாவை சமாதானம் செய்ய முயற்சித்தோம். எதுவும் நடக்கப்போவதில்லை, எனவே போக வேண்டாம் என்று அக்கா சொன்னார். கட்சியை இணைப்பது பற்றி ஜானகி அம்மாவிடம் பேசப்போவதாக நான் பிடிவாதமாகக் கூறினேன். உன் விருப்பப்படி செய் என்று சொல்லிவிட்டு அக்கா மாடிப்படி ஏறிச் சென்றார். பிறகு ஜானகி அம்மாவை சந்தித்து சமாதானம் செய்தேன். கட்சியை ஒப்படைப்பதாக ஏ.வி. ரமணன் மூலமாக தூர்தர்ஷன் நியூசுக்கு ஜானகி அம்மா தெரிவித்தார். இதன்பிறகு அக்கா அஇஅதிமுக தலைமைப் பொறுப்பை ஏற்றார். (ஜெயலலிதாவுக்கு பிடித்த உடைகள், உணவுகள், மோடியுடனான நட்பு, பிஜேபி ஆட்சியை கவிழ்த்தபோது சசிகலா சண்டையிட்டது, மருத்துவமனையில் ஜெயலலிதாவின் கடைசி நிமிடங்கள் போன்றவற்றை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.)

For Part – II Click Here : – ஜெ. உடன் கடும் சண்டை! கட்சியை விட்டு நீக்கியதாக டிராமா! கோடநாடு மர்மம்! வாஜ்பாய் ஆட்சி கவிழ்ப்பு! பாகம் – 2

Inputs From ‘The Week’

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry