குளிர்காலத்துக்கு ஏற்ற ‘லெமன் கிராம்பு தேநீர்’! காலையில் காபி, டீக்குப் பதிலா டிரை பண்ணுங்க!

0
48
Lemon and clove water is a powerful natural remedy, packed with antioxidants and essential nutrients. This refreshing drink supports digestion, boosts immunity, and may aid in weight management, making it a simple yet effective addition to your wellness routine. Getty Image.

காலையில் எழுந்ததும் நாம் எடுத்துக் கொள்ளும் திரவ உணவு முறைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இது நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் வகையில் அமைந்துவிடக் கூடாது. எனவே காலை நேரத்தில் வழக்கமான காபி, டீக்குப் பதிலாக ஆரோக்கியமான பானங்களை அருந்தலாம். இதில் எலுமிச்சை கிராம்பு தேநீர் பல நன்மைகளைக் கொண்டுள்ளது.

குளிர்காலம் வந்து விட்டாலே நாம் சூடான பானங்களையே விரும்புவோம். இது நம் உடலை சூடாக வைத்திருப்பதுடன், குளிர்காலத்தில் ஏற்படும் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். மேலும் சளி, இருமலால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருப்பினும், அவர்கள் இந்த பானம் அருந்துவது சிறந்த தேர்வாகும். ஆயுர்வேதத்தின் படி, கிராம்பு செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் எலுமிச்சைச் சாறு அஜீரணத்திற்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இந்த கிராம்பு எலுமிச்சைச் சாறு தேநீர் அருந்துவதன் மூலம் குளிர்கால சளி மற்றும் இருமலை நிர்வகிக்கலாம்.

Also Read : ஒற்றை தலைவலியில் இருந்து விடுபட இந்த சிம்ப்பிள் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க! Effective remedies for migraine pain!

ஆரோக்கிய நன்மைகள்

தொண்டை அரிப்புடன் போராடுபவர்களுக்கு இந்த கிராம்பு எலுமிச்சை தேநீர் சிறந்த ஆறுதல் அளிக்கும். இதில் எலுமிச்சை, குரல்வளையின் சளியை வெளியேற்றுகிறது. அதேசமயம், கிராம்புவில் யூஜெனால் என்ற மயக்க மருந்து நிறைந்துள்ளது. இவை தொண்டை வலியைக் குறைக்க உதவுகிறது.

காஃபின் அருந்துவது சில சமயங்களில் சோர்வை குறைக்காமல் போகலாம். இதற்கு எலுமிச்சை மற்றும் கிராம்பு தேநீர் சிறந்த மாற்றாக இருக்கும். இது உடலுக்கு மென்மையான ஆற்றலை வழங்குகிறது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள், உடல் சோர்வை எதிர்த்துப் போராடுகிறது. கிராம்புகள் உடல் உணர்வுகளைத் தூண்டி, இயற்கையான ஊக்கத்தைத் தருகிறது.

மூக்கு நெரிசலாக(Nasal congestion) இருப்பதாக உணர்பவர்கள், கிராம்பு மற்றும் எலுமிச்சை தேநீரிலிருந்து வெளியேறும் நீராவியை உள்ளிழுக்கலாம். மேலும் இந்த சிட்ரஸ், சளியை உடைத்து அதை தளர்த்த உதவுகிறது. சுவாசத்துக்கு உதவும் இயற்கையான நீக்கியாக கிராம்பு செயல்படுகிறது.

எலுமிச்சையில் வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது. இவை சளியைக் குறைக்க உதவக்கூடிய மிகவும் நம்பகமான ஆக்ஸிஜனேற்றிகளில் ஒன்றாகும். மேலும், கிராம்புகளில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. எனவே குளிர்காலத்தில் பல்வேறு நோய்த்தொற்றுக்களிலிருந்து விடுபடவும், உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தவும் கிராம்பு எலுமிச்சை தேநீர் அருந்தலாம்.

Also Read : டேஸ்டியான மஞ்சள் பூசணி தோசை-பச்சை மிளகாய் மண்டி செய்யலாமா? Yellow Pumpkin Dosa Recipe!

எலுமிச்சை கிராம்பு தேநீர் செய்முறை

முதலில் அடுப்பில் பாத்திரம் வைத்து தண்ணீர் வைத்து கிராம்பு போட்டு நன்றாக கொதிக்க விடவும். இப்போது தண்ணீரை எடுத்து ஆற வைக்கவும். வெதுவெதுப்பான வெப்பநிலையில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்க்கவும். தண்ணீர் சூடாக இருக்கும்போது எலுமிச்சை சேர்ப்பதைத் தவிர்க்கவும். இப்படி செய்வது வைட்டமின் சி contentஐ பாதிக்கும், கசப்பை ஏற்படுத்தும். கடைசியாக சுவைக்கு தேன் சேர்க்கவும்.

பால் மற்றும் சர்க்கரையுடன் கூடிய ஒரு பொதுவான காபி, டீயில் 100-120 கலோரிகள் உள்ளன. அதேசமயம் எலுமிச்சை மற்றும் கிராம்பு தேநீருடன் ஒரு டீஸ்பூன் தேனில் 20 கலோரிகள் உள்ளன. கலோரி உட்கொள்ளலைக் குறைப்பது உங்கள் இலக்காக இருந்தால், இது நிச்சயம் உங்களுக்கு உதவும். இந்த பானம் பெரும்பாலானோருக்கு பாதுகாப்பானதாக இருப்பினும், வயிற்றுப் புண்கள், உணவுக்குழாய் பிரச்சினைகள் மற்றும் எலுமிச்சை ஒவ்வாமை கொண்டவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகே அருந்த வேண்டும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry