அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேஸான், சட்ட விதிமுறைகளை மீறி கிறித்துவ மிஷனரிகளுக்கு மட்டுமே நிதியுதவி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி பலரும் மத்திய அரசுக்கு ஆன் லைன் மூலம் புகார் அளித்து வருகின்றனர்.
Amazon.com–ஆல் AmazonSmile என்ற வெப்சைட் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த வெப்சைட்டிலும் அனைத்து விதமான பொருட்களையும் வாங்க முடியும். பொருளை வாங்குவோர், பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு அறக்கட்டளைக்கு 0.5 சதவிகித தொகையை நன்கொடையாக வழங்கலாம். ஆனால், அமேஸான் இந்தியா நிறுவனம் கிறித்துவ மிஷனரிகளை மட்டும் பட்டியலிட்டுள்ளதே சர்ச்சைக்குக் காரணம். இதில் சில அறக்கட்டளை நிறுவனங்கள் பிரச்சனைக்கு உரியவை என்று கூறப்படுகிறது.
Mid India Christian Mission (MICM)என்ற அறக்கட்டளை அமேஸான் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த அறக்கட்டளை நிறுவனம் விசா சட்டங்களை மீறியதை ‘மிஷன் காளி’(Mission Kaali) அண்மையில் அம்பலப்படுத்தியது. 1969-ல், மத்தியப் பிரசேதசத்தில், ‘Lall’ குடும்பத்தினரால் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. குழந்தை காப்பகங்கள், பள்ளிகள், தொழில் பயிற்சி மையங்கள் என நடத்தி வந்த இந்த அறக்கட்டளை, மத்தியப்பிரதேசத்தில் மட்டும் 50 சர்ச்சுகளை கட்டியுள்ளது.
We have caught MID INDIA CHRISTIAN MISSION, which @amazonIN allows in their Amazon Smile program, while they do not allow Hindu NGOs in their program. Need any more confirmation that they support #ConversionMafia organisations? pic.twitter.com/nFWsan5VMj
— Mission Kaali – Say No To Conversion (@missionkaali) November 30, 2020
தற்போது இந்த அறக்கட்டளையானது அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலிருந்து இயங்குகிறது. அதே மாகாணத்திலுள்ள Cross City Church உடன் இணைந்து இந்த MICM செயல்படுகிறது. இவர்களது சர்ச்சுகளில் இணைவோர், ‘ஜீஸசுக்காக மக்களை கொண்டுவருவேன்’ அதவாது மாற்று மதத்தினரை கிறித்துவர்களாக மாற்றுவேன் என உறுதி அளிக்க வேண்டும். அதன்படி மத்தியப் பிரதேசத்தில் ஏழை மக்கள் மதமாற்றம் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இவர்களது நடவடிக்கை மோடி அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டு மிஷனரிகள், இந்திய ஏழைகளை மதமாற்றம் செய்யும் வீடியோ காட்சிகளை சமூக ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என MICM, Cross City Church ஆகியவை கேட்டுக்கொண்டுள்ளன. இதுபோன்ற சர்ச்சையில் சிக்கியிருக்கும் MICM அறக்கட்டளைக்கு எவ்வாறு பணம் செலுத்த வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் AmazonSmile வெப்சைட்டில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மிஷன் காளி நடவடிக்கைக்குப் பிறகு வெளிநாட்டு நிதி பெறுதற்கான முறைப்படுத்துதல் சட்டத்தை மீறியது உண்மைதான் என MICM ஒப்புக்கொண்டது. இதுபோன்ற தகவலை ‘மிஷன் காளி’ அம்பலப்படுத்திய பிறகு, MICM அறக்கட்டளையானது, அந்நிறுவனத்தின் இந்திய IP addresses-ஐ முடக்கிவைத்துள்ளது. இதுபோன்ற மதமாற்றும் என்.ஜி.ஓ.க்களுக்கு அமேஸான் நிறுவனம் நிதியுதவி கிடைக்க வழிவகை செய்வதுதான் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
MICM போன்ற சட்டத்திற்குப் புறம்பாக மதம் மாற்றும் அறக்கட்டளை கண்டறிந்து, அவைகளைப் பற்றி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பலரும் புகார் அனுப்பி வருகிறார்கள். புகார் அனுப்ப விரும்புவோர் https://www.pgportal.gov.in/ என்ற இந்த இணைப்பை கிளிக் செய்து, மத்திய அரசுக்கு சட்ட விரோத மதமாற்றம் பற்றி தெரிவிக்கலாம். புகார் அளிக்கும் வழமுறைகளை தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.
Thanks: The Commune
Also Read: கிறிஸ்தவர்களுக்கு இடையே நிலவும் தீண்டாமை! உண்மையை உரைக்கும் சிறப்புக் கட்டுரை!
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry