தமிழ்த் தாத்தா உ.வே.சா.வுக்கு ‘தாதா’ பட்டம்! ‘ஹோம் ரூல்’ பற்றி நகைச்சுவை விளக்கம்! பேரறிஞர் அண்ணாவின் பார்வையில் கல்கி!

0
54

கல்கி என்ற புனைப்பெயர் கொண்ட இரா. கிருஷ்ணமூர்த்தியின் 66-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. எளிய குடும்பத்தில் பிறந்து கடுமையான உழைப்பின் மூலம் முன்னேறிய கல்கியைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.

கல்கி பற்றி அவரது துணைவியார்

கல்கியின் மனைவி ருக்குமணி அம்மையார்சாவிபத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “தனக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்பதை மறைத்து திருமணம் செய்து வைத்தார்கள். தனிக்குடித்தனம் போன பிறகுதான் அவருக்கு இந்த உண்மை தெரிந்தது. ஆனால், கோபித்துக்கொள்ளாமல், ‘அதனாலென்ன, இனிமேல் கற்றுக்கொண்டால் போச்சுஎன சாதாரணமாகச் சொன்னார். அதன் பிறகுதான் நான் எழுதப் படிக்க கற்றுக்கொண்டேன்”.  இது கல்கியின் பெருந்தன்மையை நமக்கு உணர்த்துகிறது.

காலணியை கழட்டி எறிந்த கல்கி

கல்கி தமது மகள் ஆனந்தியுடன் ரயில் ஏறும்போது, ரயில் புறப்பட்ட வேகத்தில் ஒரு செருப்பு காலிலிருந்து கழன்று விழுந்துவிட்டது. ரயில் பெட்டியில் ஏறியதும் தமது காலில் மாட்டியிருந்த மற்றொரு செருப்பையும் ஜன்னலுக்கு வெளியே கல்கி விட்டெறிந்தார். இதுபற்றி மகள் கேட்டபோது, ‘இந்தச் செருப்பையும் விட்டெறிந்தால், அந்த ஜோடி யாருக்காவது பயன்படுமே’! என்று கூறியிருக்கிறார்.

கல்கியின் நகைச்சுவை

தமிழ் நடையில் ஒரு நகைச்சுவையையும், சரித நிகழ்ச்சிகளின் மீதுசமையல் கட்டுக்குக்கூட ஒரு ஆவலையும் தூண்டிவிட்ட எழுத்தாளர் அவர் என்று அறிஞர் அண்ணா கல்கிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அவரது நகைச்சுவை உணர்வுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

இவர்,’ஹோம் ரூல்கிளர்ச்சியில் வெகு தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அதனால்தான்ஹோம் ரூல்கோபலகிருஷ்ண ஐயர் என்ற பெயர் வந்தது. வீட்டில் அகத்துக்காரியின் ஆட்சி கொஞ்சம் அதிகமாதலால் இந்தப் பெயர் அவருக்கு நிலைத்துவிட்டது என்று சில பொறாமைக்காரர்கள் சொல்து உண்டுஇதுபோன்று சூழ்நிலைக்கு ஏற்ப நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துவார்.இன்று பட்டிமன்றங்களிலும், வழக்காடு மன்றங்களிலும் பல பேச்சாளர்கள் கையாளும் நகைச்சுவைகள், கல்கியின் படைப்புகளில் வெளிவந்தவையாகவே இருக்கின்றன.

கல்கியின்யார் இந்த மனிதர்கள்?’

பல்வேறு துறைகளில் நாட்டுக்கும், மொழிக்கும், சமுதாயத்துக்கும் அரிய தொண்டாற்றி சாதனை படைத்து பெரும்புகழ் பெற்ற 41 பேரைப் பற்றிபேனாச் சித்திரங்களை, யார் இந்த மனிதர்கள்? என்ற தலைப்பில் கல்கி நூலாக வெளியிட்டார். திரு.வி.., மகாத்மா, பாரதியார், விவேகானந்தர், ராஜாஜி போன்ற பலரைப் பற்றிய சுவையாக இந்த நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘மலை மறைத்ததுஎன்னும் தலைப்பில் ராஜா ஸர் அண்ணாமலைச் செட்டியாரைப் பற்றி கல்கி எழுதியது:

திடீரென்று ஒரு நாள் நீலகிரி மலை மறைந்து போய் விட்டதென்றால் நமக்கெல்லாம் எப்படியிருக்கும்? அந்த மாமலை இருந்த இடத்தை வேறு எந்தப் பொருளையாவது இட்டு நிரப்ப முடியுமா? ஒரு நாளும் முடியாது. மலை இருந்த இடம் வெகு காலத்துக்கு வெறிச்சென்றுதானிருக்கும். ராஜா ஸர் அவர்கள் இல்லாத தமிழ்நாடும், தமிழர் சமூகமும் இன்னும் வெகுகாலத்துக்கு அவர்கள் இல்லாமற்போன குறையை உணர வேண்டியிருக்கும்”.

.வே.சா.வுக்கு கல்கி சூட்டிய பட்டம்

டாக்டர் உ.வே. சாமிநாத ஐயருக்குத்தமிழ்த் தாத்தாஎன்ற சிறப்பு பட்டத்தை, மரியாதை அடைமொழியாகச் சூட்டியவர் கல்கி. அந்தச் சிறப்பான கடிதம் இதோ:

தமிழ்த் தாத்தா ஸ்ரீ உ.வே. சாமிநாதய்யர் அவர்கள் சமூகத்துக்குப் பேரன் பரிவுடன் எழுதிக்கொள்வது.

பெரியவர்கள்என்னயோசிக்கிறீர்கள்? இது என்ன புதிய பட்டமாக இருக்கிறது. இவன் யார் கொடுப்பது என்றா? அப்படியெல்லாம் தாங்கள் நிராகரிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். சகலமும் அறிந்த பெரியாராகிய தாங்கள் நான் அளித்திருக்கும் பட்டத்தின் பொருத்தத்தை அங்கீகரிக்காமல் இருக்க முடியாது. முதலாவது, ஒளவையாருக்கு எப்படித்தமிழ்ப் பாட்டிஎன்னும் பட்டம் பொருந்துமோ, அது போலவே, தங்களுடைய பிராயத்தினாலும், தமிழுக்கு தாங்கள் செய்திருக்கும் தொண்டினாலும்தமிழ்த் தாத்தாஎன்னும் பட்டம் தங்களுக்குப் பொருந்தும்.

இரண்டாவதாக, மேற்படி பட்டத்திலுள்ள இரண்டுத்களையும் நீக்கிவிட்டால், தாங்கள்தமிழ் தாதாஆகிறீர்கள். நமது நாட்டின் பரம்பரை வழக்கத்தை அனுசரித்து அகப்பட்ட நூல்களையெல்லாம் ஒளித்து வைக்காமல் அச்சிட்டு வெளியாக்கிப் பதினாயிரக்கணக்கானவர்களுக்குப் பயன்படும்படி செய்த தங்களைதமிழ் தாதாஎன்று சொல்லாமல் வேறு யாரைச் சொல்லுவது?

நிதி திரட்டிக்கொடுத்த கல்கி

பொதுப்பணிகளிலும் கல்கி முனைப்புடன் ஈடுபட்டார். 1947-ஆம் ஆண்டில் அவரது பெரு முயற்சியின் பயனாக எட்டயபுரத்தில் பாரதி மண்டபம் எழுந்தது. இதேபோல் 1949-ஆம் ஆண்டில் மகாத்மா காந்திக்குச் சென்னையில் நினைவுச் சின்னம் நிறுவத் திட்டமிட்டுப் பெருநிதி திரட்டி, காந்தி மண்டபம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டார் கல்கி. நாமக்கல் கவிஞருக்காகவும், வாழ்நாள் முழுதும் தம்மைத் தாக்கியே எழுதியும் பேசியும் வந்த புதுமைப்பித்தனின் குடும்பத்தினர்க்காகவும் கல்கி நிதி திரட்டித் தந்தார். மேலும் தூத்துக்குடி வ..சி. கல்லூரி, திருச்சி தேசியக் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் அவர் நிதி திரட்டிக்கொடுத்தார்.

புதிய கருத்துகளை வெளியிட்டு, வாசகர்களின் மனத்தைப் புதிய திசையில் திருப்பி, புதிய யுகத்தைப் படைக்க வேண்டும்என்ற ஒரே எண்ணத்துடன் தமிழ் இலக்கிய உலகில் முப்பது ஆண்டுக்காலம் நடைபயின்றவர் என்ற காரணங்களுக்காகக்கல்கிஎன்ற மூன்றெழுத்து தமிழக மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

கட்டுரையாளர்: முனைவர் நிர்மலா மோகன், தகைசால் பேராசிரியர்(.நி.), காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் – 624302, திண்டுக்கல் மாவட்டம். திருமதி. நிர்மலா மோகன், பேராசிரியராக மட்டுமின்றி, பேச்சாளர், எழுத்தாளர் என பல தளங்களிலும் பரிமளித்து வருகிறார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry