கம்யூனிஸ்டுகளை அம்பேத்கர் வெறுக்கக் காரணம் என்ன? RSS பற்றி அம்பேத்கர் என்ன சொன்னார்? அரிய தகவல்களுடன் சிறப்புப் பார்வை!

0
165

இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவரான பீமாராவ் ராம்ஜி அம்பேத்கரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. RSS, கம்யூனிஸ்ட், இட ஒதுக்கீடு, பொது சிவில் சட்டம், சமஸ்கிருதம், பணமதிப்பிழப்பு ஆகியவை பற்றிய  சட்டமேதை அண்ணல் அம்பதேகரின் பார்வையை காணலாம். அத்துடன் அம்பேத்கர் பற்றிய அரிய சில தகவல்களும் உங்களுக்காக.

அம்பேத்கரின் இட ஒதுக்கீடு

சாதி ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமுதாயம் என்பதே சட்டமேதை B.R. அம்பேத்கரின் கனவாக இருந்தது. அம்பேத்கரை பொறுத்தவரை இடஒதுக்கீடு மூன்று வகைப்படும். அரசியலில் இடஒதுக்கீடு (தனித் தொகுதிகள்), கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு. அரசமைப்புச் சட்டத்தின் 334 பிரிவின்படி, அரசியல் இட ஒதுக்கீட்டிற்கு மட்டும்தான் 10 ஆண்டு வரம்பு உள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இருக்கும் இட ஒதுக்கீட்டிற்கு எந்த வரம்பும் கிடையாது. “சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கும் வரை, இட ஒதுக்கீடு நீடிக்க வேண்டும். அதுவரை இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லைஎன்று அம்பேத்கர் கூறினார்.

பொது சிவில் சட்டம் பற்றிய பார்வை

பொது சிவில் சட்டம் கொண்டு வரவேண்டும் என்றே அம்பேத்கர் விரும்பியுள்ளார். அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, அரசியலமைப்பில் 44-வது விதியைக் கொண்டுவந்தார். இந்த விதியானது, நாடு முழுமைக்கும் ஒரே விதமான சிவில் சட்டம் ஏற்படுத்த அரசு முயற்சிக்க வகைசெய்கிறது. அரசியல் நிர்ணய சபை விவாதத்தில் பேசிய அம்பேத்கர், `90 சதவிகிதச் சட்டங்கள் அனைவருக்கும் சமமாக இருக்கிறபோது, சொத்து, திருமணம் தொடர்பான சட்டங்கள் மட்டும் தனியாக இருக்கக் கூடாதுஎன்றார். இதன்படியே தேசிய ஜனநாயக் கூட்டணி தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் கொண்டுவருவோம் என கூறியிருந்தது

பணமதிப்பிழப்பு அவசியம்

1923-ம் ஆண்டு அம்பேத்கர் எழுதிய “Problem of Indian Rupee” என்ற புத்தகத்தில், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நமது நாட்டின் ரூபாய் நோட்டுகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இப்படிச் செய்வதன் மூலமாக விலை ஏற்றத்தையும், பணப் பதுக்கலையும் தடுக்க முடியும் என்றும் அந்தப் புத்தகத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது ஆய்வுப்படிப்பே இந்திய ரூபாயைப் பற்றித்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அம்பேத்கரை எதிர்த்த காங்கிரஸ்

இந்திய அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கரை சேரவிடாமல் தடுக்க காங்கிரஸ் கட்சி அனைத்து வழிகளையும் கையாண்டது. அரசியல் நிர்ணய சபைக்கு தொடக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட 296 உறுப்பினர்களில் அறிஞரான அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் இல்லாமல் செய்தது.

1952ல் , அம்பேத்கர் வடக்கு மும்பை மக்களவை தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியால் நிறுத்தப்பட்ட, தன் முன்னாள் உதவியாளர் என்.எஸ். கஜ்ரோல்கரிடம் தோல்வியடைந்தார். நேரு இரண்டு முறை இந்த தொகுதிக்கு வந்து பிரசாரம் செய்தார். அம்பேத்கரின் தோல்வியை உறுதி செய்ய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவையும் நேரு பெற்றிருந்தார். பின்னர் 1954ல் பாந்ரா மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் அம்பேத்கர் காங்கிரசால் வீழ்த்தப்பட்டார். காங்கிரஸ் தலைவர்கள், குறிப்பாக நேரு, அம்பேத்கர் மீது ஒருபோதும் நம்பிக்கை வைத்ததில்லை.

அம்பேத்கர் பார்வையில் ஆர்.எஸ்.எஸ்.

அம்பேத்கரின் நெருங்கிய நண்பரும், ஆர்.எஸ்.எஸ். முழு நேர ஊழியருமான தத்தோபந்த் தெங்கடி, அப்போதைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வல்கர் வழிகாட்டுதலில், 1969, டிசம்பர் 13-ல் கர்நாடக மாநிலம் உடுப்பியில், இந்து மத பெரியவர்கள் பங்கேற்கும் மாநாடு ஒன்றைக் கூட்டினார். அம்பேத்கர் கண்ட கனவை நனவாக்கும் விதமாகதீண்டாமைக்கு நமது சாஸ்திரத்தில் இடமில்லைஎன்று அறிவிப்பதற்கான மாநாடுதான் அது.  சுமார் 15 ஆயிரம் பேர் பங்கேற்ற அந்த மாநாட்டில், இந்து தர்ம சாஸ்திரங்கள் எந்த ஒரு இடத்திலும் தீண்டாமையை அங்கீகரிக்கவில்லை என தீர்மானம் நிறைவேற்றி, அதை பிரகடனமாகவும் வெளியிட்டனர்.

1939-ல் மராட்டிய மாநிலம் புனேவில் நடந்த ஆர்.எஸ்.எஸ். முகாமுக்கு அம்பேத்கர் வருகை தந்தார். அங்கு அனைத்து சாதியினரும் ஒன்றாக பயிற்சியில் ஈடுபடுவதையும், சாதிப் பாகுபாடின்றி அனைத்து சாதியினரும் ஒன்றாக உணவருந்துவதையும் கண்டு அவர் வியப்படைந்தார். சராசரியை விட அதிகமாக, ஆர்.எஸ்.எஸ் இயக்கத் தொண்டர்களின் குடும்பங்களில் சாதி இணக்கத் திருமணங்கள் நடக்கின்றன நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

சமஸ்கிருதம் அலுவல் மொழி அம்பேத்கர்

தமது சொந்த முயற்சியால், பண்டிதர்களின் துணை கொண்டு, “சமஸ்கிருதம்மொழியை விரும்பிக் கற்று, அம்பேத்கர் அதில் புலமை பெற்றார். சமஸ்கிருதம், அலுவல் மொழியாக வர வேண்டும், என அம்பேத்கர் கூறினார். பாரதத்தின் அதிகாரப்பூர்வ மொழியாக, “சமஸ்கிருதத்தைகொண்டு வருவதற்கான  மசோதா மீது விவாதம் நடந்தது. செப்டம்பர் 10-ஆம் தேதி, 1949 ஆம் ஆண்டு நடந்த அந்த விவாதத்தில், சமஸ்கிருத மொழிக்கு ஆதரவாக வாதாடியதோடு, கையொப்பத்தையும் இட்டார் அம்பேத்கர். சமஸ்கிருதம், நமது நாட்டின் தேசிய மொழியாக்க, தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் கோரினார்.

கம்யூனிஸ்டுகள் பரம்பரை எதிரிஅம்பேத்கர்

1937 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் தொடக்கத்தில், மசூர்இல் ஒடுக்கப்பட்ட மக்களின் மாவட்ட மாநாட்டைத் தலைமை தாங்கி நடத்திய அம்பேத்கர், கம்யூனிஸ்ட்கள் நடத்தும் தொழிலாளர் இயக்கத்தைப் பற்றிப் பேசுகையில், “நான் அதில் சேரும் சாத்தியக் கூறே இல்லை. நான் அவர்களின் பரம்பரை எதிரி. கம்யூனிஸ்ட்டுகள் என்பவர்கள் தொழிலாளர்களைத் தங்களுடைய அரசியல் நோக்கத்துக்காகச் சுரண்டுபவர்கள்என்று விமர்சித்தார்.

1938 ஆம் ஆண்டு, ஜனவரி 10 அன்று, பம்பாய் எஸ்பிளனேட் மைதானத்தில் நடைபெற்ற விவசாயிகளின் கூட்டத்தில், “எல்லா கம்யூனிஸ்ட் தலைவர்களும் சேர்ந்து, எத்தனை புத்தகங்கள் படித்திருப்பார்களோ, அவற்றை விட நான் அதிகம் படித்து இருக்கிறேன். அவர்கள் எப்போதுமே எந்தப் பிரச்னைக்கும் செயல் பூர்வமான அணுகு முறையை மேற்கொண்டது இல்லைஎன்று விமர்சித்தார்.

Source : Can Communism and Democracy Work Together? – Dr Ambedkar’s Views

Sourcehttps://www.quora.com/Why-did-Dr-Ambedkar-oppose-communism

அம்பேத்கர் சாதித் தலைவரா?

அம்பேத்கர் பற்றி அறியாதவர்கள், அவரை சாதித்தலைவராகச் சுருக்குகின்றனர். சாதியத்தின் அதிகாரத்தை ருசித்துக்கொண்டே, அதைத் தக்கவைக்க சாதியத் தலைவர்கள் துடிக்கின்றனர். வாழ்நாள் முழுவதும் சாதியத்தின் இயங்கியல் குறித்து சிந்தித்து, அதை ஒழிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க முயன்ற அம்பேத்கரையும், அவர்கள் சாதியத் தலைவராக அடையாளப்படுத்துகின்றனர். யாருக்கு சாதியால் நன்மை விளையுமோ அவர்கள்தான் சாதியைக் காப்பாற்ற விரும்புவார்கள். ஆனால் அம்பேத்கரோ, தன் வாழ்நாள் முழுவதும் சாதியின் காரணமாக அவமானங்களைச் சந்தித்தவர். அவர் எப்படி சாதித்தலைவராக இருக்க முடியும்?

அம்பேத்கரைப் பற்றிய சில அரிய தகவல்கள்

1.பாபாசஹேப் அம்பாவடேகர் என்ற பெயர்தான், பள்ளியில், ஆசிரியரால் அம்பேத்கர் என மாற்றப்பட்டது.

2.குடிநீருக்காக சத்தியாக்கிரகம் செய்த உலகின் ஒரே சத்தியாகிராஹி அம்பேத்கர்தான்.

3. 64 பாடப்பிரிவுகளில் முதுகலைப்பட்டம் பெற்றவர், 9 மொழிகள் அறிந்தவர், 21 நாடுகளுக்குச் சென்று கல்வி பயின்றவர், டாக்டரேட் பட்டம் வாங்கிய முதல் இந்தியர்.

4. லண்டன் மியூசியத்தில் கார்ல் மார்க்ஸ் சிலையுடன் இணைத்து டாக்டர் அம்பேத்கருக்கு சிலை உள்ளது. வேறு எந்த இந்திய தலைவர்களுக்கும் இந்த மரியாதை கிடைக்கவில்லை. அம்பேத்கர் உயிரோடு இருக்கும்போதே, 1950-ல் கோலாப்பூர் நகரில் அவருக்கு சிலை வைக்கப்பட்டது.

5. மிகவும் மதிப்புமிக்க “Doctor All Science” என்ற டாக்டரேட் பட்டத்தை, உலக அளவில் பெற்ற ஒரே நபர் பாபாசஹேப் அம்பேத்கர் மட்டும்தான். London School of Economics வழங்கும் அந்தப் பட்டத்தை இதுவரையிலும் வேறு யாராலும் பெற முடியவில்லை.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry