பிரதமர் மோடி எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை வெளிக்காட்டிக்கொண்டு, ஒட்டுமொத்த இந்தியாவையும், உலக அரங்கில் அசிங்கப்படுத்தும் வேலையை, BBC, AL JAZEERA போன்ற முன்னணி வெளிநாட்டு ஊடகங்கள் கனகச்சிதமாக செய்து வருகிறது.
நுட்பமான சர்வதேச அரசியல்
சர்வதேச பத்திரிகைகள், பிரதமரை ‘பாசிச’ மோடி என குறிப்பிடும்போது, அந்த பத்திரிகைகள் மோடியையும், பாஜக–வையும் விமர்சிப்பதாக நினைக்கலாம், மாறாக அந்த பத்திரிகைகள், இந்தியாவின் முகத்தை உலக அரங்கில் சீரழிக்கிறது என்பதை உணர வேண்டும். இதுதான் நுட்பமான அரசியல்.
இதுபோன்ற விமர்சனங்களை பகுத்தாராயமாமல், கண்மூடித்தனமாக ஏற்கும், ஆதரிக்கும் முற்போக்காளர்களை, பாஜக–வினர் தேச விரோதிகள் என கூறும்போது, நமக்குள் பிளவு ஏற்படுகிறது. இதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள், இதுதான் சர்வதேச அரசியல்.
அவதூறு பரப்பும் பிபிசி, அல் ஜசீரா
உதராணமாக, உலக அரங்கில் இந்தியாவின் தவறான பிரச்சாரத்தால், அப்பாவியான பாகிஸ்தான் பெருமளவு பாதிக்கப்படுகிறது என அல் ஜசீரா செய்தி வெளியிடுகிறது. அந்த அறிக்கையில்,
“டெல்லி ஸ்ரீவஸ்தவா குழுமத்தால் நடத்தப்படும் disinformation network எனும் என்.ஜி.ஓ.-வானது சர்வதேச அளவில் பாகிஸ்தானை இழிவுபடுத்துவதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றம் எடுக்கும் முடிவுகளில் இந்த அமைப்பு ஆதிக்கம் செலுத்துகிறது.
பாகிஸ்தான் நன் மதிப்பை குலைக்கும் வகையில், ஐ.நா–வோடு தொடர்புடைய சில தன்னார்வ அமைப்புகளை புதுப்பித்ததுடன், போலி ஊடகங்களால் தயாரிக்கப்படும் செய்திகளை, உண்மையான ஊடகங்கள் மூலம், தெற்காசியாவிலும், உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களை சென்றடைய வைத்தது” என்பதுதான் இந்தியா பற்றிய அல் ஜசீரா–வின் செய்தி.
Source: EU NGO report uncovers Indian disinformation campaign
சர்வதேச அளவில் நன்மதிப்பை பெற்ற ஊடகமான பிபிசி–யின் செய்தி அறிக்கை என்ன சொல்கிறது?
“தன்னார்வ அமைப்பின் மூலம், ஆராய்ச்சி என்ற பெயரில் பாகிஸ்தானை இழிவுபடுத்தும் பிரச்சாரத்தை இந்தியா செய்கிறது. ஐரோப்பிய நாடுகளின் ஒன்றியம் மற்றும் ஐநா–வை, இந்தியாவுக்கு சாதகமாக செயல்படும் விதமாக, 15 ஆண்டுகளாக, தவறான தகவல்களை வெளியிட்டு வரும் இந்த தன்னார்வ அமைப்பு, மிகப்பெரிய நெட்வொர்க் ஆகும்.“ என்கிறது பிபிசி.
Source : The dead professor and the vast pro-India disinformation campaign
அல் ஜசீரா அறிக்கையின் தாக்கம்
“அல் ஜசீராவின் அறிக்கை குறித்து தங்களுக்குத் தெரியும், ஐரோப்பிய ஒன்றியம்–இந்தியா பேச்சுவார்த்தையின்போது இந்த பிரச்சனை எழுப்பப்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையின் முதன்மை செய்தித் தொடர்பாளர் பீட்டர் ஸ்டானோ கூறுகிறார். அந்த அளவுக்கு இந்த செய்திகள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
முற்போக்காளர்கள் மவுனம்
இந்த இரு ஊடகங்களின் கருத்துப்படி, பாகிஸ்தான் நேர்மையான, அப்பாவியான நாடு, இந்தியா அதன் நன்மதிப்பைக் கெடுக்கிறது என்பதாகும். இதில் கூர்ந்து கவனிக்க வேண்டியது, பிபிசி சொல்லும் 15 ஆண்டுகள். அப்படியானால், 9 ஆண்டுகள் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்ததை மறைத்துவிட்டு, மோடி மீது மட்டும் முற்போக்காளர்கள் குற்றம்சொல்ல முடியாது. பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவுப் போக்கை மறைத்து, மோடி எதிர்ப்பு என்ற போர்வையில் பிபிசி மற்றும் அல் ஜசீரா, இந்தியாவுக்கு குறிவைக்கின்றன.
குறிப்பாக சர்வதேச அரங்கில் கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தியா எதிர்ப்புப் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்துள்ள அல் ஜசீராவின் அறிக்கையை, தங்களுக்குச் சாதகமாக, அனைத்து சர்வதேச மன்றங்களிலும் பாகிஸ்தான் முன்வைக்கத் தொடங்கிவிட்டது.
Foreign minister Shah Mahmood Qureshi urges @UN to investigate 15-year-long global disinformation campaign to undermine #Pakistan and serve Indian interests that has been exposed this week by #EUDisinfoLab https://t.co/5AWEFF08UW
— Arab News Pakistan (@arabnewspk) December 11, 2020
இந்தியாவின் ANI, IINS செய்தி நிறுவனங்களையும் குற்றம் சொல்லி, பாகிஸ்தானுக்கு முட்டுக்கொடுக்கும் பிபிசி, அல் ஜசீராவை, இந்தியாவிலுள்ள முற்போக்காளர்கள் கண்டிக்காதது ஏன்? அவர்கள் பார்வையில், பிபிசி–யும், அல் ஜசீரா–வும் மோடியை எதிர்க்கின்றன, பாஜக–வை எதிர்க்கின்றன. இங்கு நமக்கு இரண்டு வாய்ப்புகளே உள்ளன. இந்தியாவுக்கு எதிராக சர்வதேச சதி இருப்பதை ஏற்க வேண்டும் அல்லது, பாகிஸ்தான் அப்பாவி நாடு, பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை என்பதை ஏற்க வேண்டும்.
With Input of OpIndia
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry