ஜிபிஎஸ் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்க முடிவு செய்திருப்பதால், இரண்டு ஆண்டுகளில் இந்தியா “சுங்கச் சாவடி இல்லாத இந்தியா”வாக மாறும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
டெல்லியில் அசோசம் நிகழ்ச்சியில் பேசிய அவர், “நாடு முழுவதும் வாகனங்களின் தடையில்லா இயக்கத்தை உறுதி செய்வதற்காக ஜி.பி.எஸ் அடிப்படையிலான தொழில்நுட்ப கட்டண வசூலை அரசு இறுதி செய்துள்ளது. வாகனங்களின் இயக்கத்தின் அடிப்படையில், சுங்கத் தொகையானது, நேரடியாக வங்கிக் கணக்கிலிருந்து கழிக்கப்படும். இப்போது அனைத்து சரக்கு வாகனங்களும் வாகன கண்காணிப்பு அமைப்புகளுடன் இருக்கிறது, பழைய வாகனங்களில் ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தை நிறுவ அரசு திட்டமிட்டுள்ளது.
ரஷ்ய அரசு உதவியுடன் GPS வாங்குவதற்கு இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டு ஆண்டுகளில் இந்தியா சுங்கச் சாவடி இல்லாத நாடாக மாறும். இதன் மூலம் தடையில்லா போக்குவரத்தை உறுதி செய்ய முடியும். FASTags அமல்படுத்தியதன் மூலம், சுங்கச் சாவடிகளில், வாகன நெருக்கடி குறைந்தது, எரிபொருள் மிச்சமானது, சுற்றுச்சூழல் மாசடைவது குறைந்தது.
வரும் மார்ச் மாதத்திற்குள் சுங்க வசூல் ரூ.34,000 கோடியை எட்டும். சுங்கச்சாவடிக்கு ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், சுங்க வருமானம் ரூ. 1,34,000 கோடியாக இருக்கும்” என்றும் நிதின் கட்கரி கூறினார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry