கழுத்தில் விநாயகர் டாலருடன் டாப்லெஸ் புகைப்படம்! இறை நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் ரிஹான்னா!

0
10

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹான்னா மேலாடை அணியாமல், கழுத்தில் விநாயகர் டாலர் அணிந்துள்ள படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கழுத்தில் விநாயகர் டாலரை அணிந்தவாறு அமெரிக்காவின் பாப் பாடகி ரிஹான்னா பகிர்ந்துள்ள டாப்லெஸ் புகைப்படத்தை ட்விட்டர்வாசிகள் பலரும் விமர்சித்து வருகின்றனர். ஜமைக்காவை சேர்ந்த பாப் பாடகர் Popcaan கேட்டுக்கொண்டதற்காக இன்றிரவு மேலாடை இன்றிஎன டிவிட்டரில் அந்தப் படத்தை பதிவேற்றி அவர் கேப்ஷன் போட்டுள்ளார்

இந்தப் புகைப்படம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கழுத்தில் விநாயகர் டாலருடன் இருக்கும் டாப்லெஸ் புகைப்படத்தை ரிஹான்னா பகிர்ந்த சிறிது நேரத்திலேயே அது வைரலானது. மத உணர்வுகள் மற்றும் இறை நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் இந்தப் புகைப்படம் இருப்பதாகக் கூறி, பலரும் அவருக்கு எதிரான கருத்துகளை டிவிட்ரில் பதிவிட்டு வருகின்றனர் இந்து மதத்தில் இருக்கும் புனிதமான விநாயகரை ரிஹான்னா அவமதித்து விட்டதாகக் கூறி, டிவிட்டர்வாசிகள் மிகக் கடுமையாக அவரை விமர்சித்து வருகின்றனர்.

பாரதிய ஜனதா கட்சி, விஸ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர்கள் மற்றும் மதப்பற்றாளர்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் செயல் எனக் கூறி டெல்லி மற்றும் மும்பை போலீசாரிடம் அவர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த முதல் வெளிநாட்டுப் பிரபலம் ரிஹான்னாதான். ஆனால், அப்போதே விவசாயிகளின் போராட்டம் என்பது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினை என்றும், இது குறித்து வெளியாட்கள் யாரும் கருத்துச் சொல்ல தேவையில்லை என்றும் பல்வேறு இந்தியப் பிரபலங்கள் கூறியிருந்தனர். இந்நிலையில், தற்போது அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ள புகைப்படமும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry