புதுச்சேரியில் நாராயணசாமி அரசு ராஜினாமா? ராகுல் வரவுள்ள நிலையில் கட்சிக்கு பெரும் பின்னடைவு! மெய்த்தது ‘வேல்ஸ் மீடியா’ கணிப்பு!

0
25

புதுச்சேரியில் காமராஜர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.. ஜான்குமார் ராஜினாமா செய்ததால், காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து, முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்கிறது.

சில வாரங்களுக்கு முன்பு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நமச்சிவாயம், எம்.எல்.. பதவியை ராஜினாமா செய்த தீப்பாய்ந்தான் ஆகியோர், டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் மேலிட தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். இதனை தொடர்ந்து மல்லாடி கிருஷ்ணாராவ், அமைச்சர்  மற்றும் எம்.எல்.. பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இந்நிலையில் புதுச்சேரியில் காமராஜர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.. ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே பாஜக மேலிடப் பொறுப்பாளரை சந்தித்துள்ள ஜான்குமார், விரைவில் பாஜகவில் இணையலாம் என்று தெரிகிறது

4 பேர் ராஜினாமா செய்துவிட்ட நிலையில், புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 10 எம்.எல்..க்கள், அதன் கூட்டணியில் உள்ள திமுக 3 எம்.எல்..க்கள், ஒரு சுயேட்சையின்(மாஹே தொகுதி) ஆதரவு என ஆளும் கூட்டணியின் பலம், பேரவையில் 14 ஆக உள்ளது. எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் 7 சட்டமன்ற உறுப்பினர்களும், அதன் கூட்டணியில் உள்ள அதிமுக 4 உறுப்பினர்களும், பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் என்று எதிர்க்கட்சிகளின் பலம் 14 ஆக இருக்கிறது. இதன் மூலம் புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

மேலும் சில எம்.எல்..க்கள் ராஜினாமா செய்யக்கூடும் என்ற நிலையில், அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்..க்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். பெரும்பான்மையை நிரூபிக்க இயலாது என்ற சூழ்நிலையில், ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி கடந்த மாதம் 8-ந் தேதியே வேல்ஸ் மீடியாவில் எழுதியிருந்தோம்ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய கடந்த மாதம் நாராயணசாமி முடிவெடுத்த நிலையில், காங்கிரஸ் மேலிடம் அதற்கு அனுமதி தரவில்லை. இதனால் நாராயணசாமி அமைதி காத்துவந்த நிலையில், தற்போது ஒவ்வொரு எம்.எல்..வாக ராஜினாமா செய்யத் தொடங்கிவிட்டனர். இதனால் ஆட்சி பெரும்பான்மையை இழந்துவிட்டது. இதன்காரணமாகவே அமைச்சரவை ராஜினாமா என்ற முடிவுக்கு நாராயணசாமி வந்துள்ளார்.

Also Read: புதுச்சேரி அரசியலில் அதிரடித் திருப்பம்! காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு ராஜினாமா? வேல்ஸ் மீடியா பிரத்யேகத் தகவல்!

நாராயணசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருகின்றன. அதேபோல், பெரும்பான்மையை நிரூபிக்குமாறு துணைநிலை ஆளுநர் உத்தரவிட வாய்ப்பிருக்கிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை புதுச்சேரி வரவுள்ள நிலையில், ஆட்சிக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி, காங்கிரஸ் கட்சிக்கான பெரும் பின்னடைவாகவே தெரிகிறது. இதன்காரணமாக ராகுல்காந்தி தனது பயணத்தை ரத்து செய்யலாம் என்று கூறப்படுகிறது

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry